ஏழு இலங்கையர் 4 மாதங்களின் பின் யுகிரேனில் விடுதலை

ஏழு இலங்கையர் 4 மாதங்களின் பின் யுகிரேனில் விடுதலை

ஆக்கிரமித்த ரஷ்ய படைகள் யுக்கிரனின் Izyum நகரில் இருந்து பின்வாங்கியதை தொடர்ந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 7 இலங்கையர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். யுகிரேனில் படிக்க அல்லது வேலைவாய்ப்பு பெற சென்ற இவர்கள் மே மாதம் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் யுத்தம் ஆரம்பித்த பின் Kupinask என்ற தமது இருப்பிடத்தில் இருந்து 120 km  தூரத்தில் உள்ள Kharkiv என்ற பெரிய நகரத்துக்கு செல்ல முனைந்துள்ளனர். ஆனால் இவர்களை ரஷ்ய படைகள் கைது செய்துள்ளது. கைது […]

வெள்ளிக்கிழமை இலங்கை கடனடைப்பு திட்ட கதை சொல்லும்

வெள்ளிக்கிழமை இலங்கை கடனடைப்பு திட்ட கதை சொல்லும்

இலங்கை அரசு தனது கடனை அடைக்க கொண்டுள்ள புதிய திட்டத்தை கடன் வழங்கியோருக்கு வரும் வெள்ளிக்கிழமை விபரிக்க உள்ளது. IMF அமைப்பிடம் இருந்து மேலதிக கடன் பெற மேற்படி செயற்பாடு அவசியம். இந்த அமர்வை Clifford Chance என்ற வெளிநாட்டு நிறுவனம் நடைமுறை செய்யும். இந்த நிறுவனத்தின் சேவையை IMF விருப்பத்துக்கு ஏற்ப இலங்கை பெற்று இருந்தது. இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்த அமர்வில் பங்குகொண்டு தமது கேள்விகளை கேட்டு, […]

​VoA: தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை பின் தள்ளுகிறது

​VoA: தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை பின் தள்ளுகிறது

நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற Special Competitive Studies Project (SCSP) என்ற வல்லுனர்களின் அமர்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை குறிப்பிடும் Voice of America (VoA) செய்தி சேவை சீனா தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவை வேகமாக பின் தள்ளுகிறது என்று கூறியுள்ளது. முன்னாள் Google நிறுவன CEO Eric Schmidt தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வு 2030ம் ஆண்டுவரை அமெரிக்கா தொழில்நுட்பத்தில் பிரதான ஆளுமையை கொண்டிருக்க வழிகளை ஆராய்கிறது. சீனா தொழில்நுட்ப ஆளுமையை பெற்றால் பல டிரில்லியன் […]

சீனாவில் 42 மாடி அலுவலக கட்டிடம் எரிந்தது

சீனாவில் 42 மாடி அலுவலக கட்டிடம் எரிந்தது

சீனாவின் Changsha நகரில் உள்ள 42 மாடிகளை கொண்ட அலுவலக கட்டிடம் ஒன்று இன்று வெள்ளி எரிந்துள்ளது. தீ விபத்து பாரதூரமானது என்றாலும் உயிர் பலி எதுவும் இடம்பெற்றதாக இதுவரை அறியப்படவில்லை. சுமார் 218 மீட்டர் (715 அடி) உயரம் கொண்ட இந்த கட்டிடம் 2000ம் ஆண்டில் பாவனைக்கு வந்திருந்தது. இந்த கடிதத்தில் China Telecom என்ற தொலைத்தொடர்பு நிறுவனமே நிலைகொண்டிருந்தது. தீ உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் தணிக்கப்பட்டு உள்ளது. தீக்கான காரணம் இதுவரை […]

துருக்கி, சிரியா உளவு படைகள் நேரடி தொடர்பு

சிரியாவின் அல் அசாத் அரசை கவிழ்த்து இஸ்ரேலுக்கும் மேற்குக்கும் ஆதரவான கைப்பொம்மை அரசை அமைக்க மேற்கு சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்தது. ஆனால் ஆசாத் ரஷ்யாவின் பூட்டினின் உதவியை நாட, ரஷ்ய படைகள் சிரியா வந்து அசாத் அரசை காப்பாற்றியது. தமது விருப்பப்படி அசாத் அரசு கவிழாது என்பதை உணர்ந்த மேற்கும், மேற்குடன் இணைந்து இயங்கிய மத்திய கிழக்கு நாடுகளும் மெல்ல தமது தூதரகங்களை சிரியாவின் தலைநகரில் மீண்டும் இயக்க ஆரம்பித்தன. மேற்குடன் இணைந்து சிரியாவை தாக்கிய […]

பூட்டின்: யுகிரைன் விசயத்தில் சீ கவலை, கேள்விகள்

பூட்டின்: யுகிரைன் விசயத்தில் சீ கவலை, கேள்விகள்

ரஷ்யாவின் யுகிரைன் யுத்தம் தொடர்பாக சீன சனாதிபதி கவலை (concern) கொண்டுள்ளதுடன் கேள்விகளையும் முன்வைத்துள்ளார் என்று இன்று வியாழன் ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். ஆனாலும் சீனாவின் நடுநிலைமை கொள்கையை பூட்டின் பாராட்டி உள்ளார். இவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் Shanghai Cooperation Organization (SCO) அமர்வில் சந்திக்கிறார்கள். இந்திய பிரதமரும் இந்த அமர்வுக்கு செல்கிறார். “யுகிரைன் விசயத்தில் சீனா கொண்டுள்ள நடுநிலைமை கொள்கையை நாம் உயர்வாக மதிக்கிறோம்” என்று சீன சனாதிபதி சீக்கு கூறியுள்ளார் பூட்டின். […]

அஜர்பைஜான், ஆர்மீனியா மோதலுக்கு 100 பேர்பலி

அஜர்பைஜான், ஆர்மீனியா மோதலுக்கு 100 பேர்பலி

இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட அஜர்பைஜான் (Azerbaijan), கிறீஸ்தவ பெரும்பான்மை ஆர்மீனியாவுக்கும் (Armenia) இடையில் இடம்பெற்ற மோதலுக்கு ஆர்மீனியா தரப்பில் சுமார் 50 படையினர் பலியாகி உள்ளனர். 2020ம் ஆண்டு இடம்பெற்ற மோதலுக்கு பின் அதிக அளவு படையினர் தற்போதைய மோதலுக்கு பலியாகி உள்ளனர். ஆர்மினியா தனது படைகளில் குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளது. சுமார் 50 Azeri படையினர் பலியாகி உள்ளதாக அஜர்பைஜான் படை கூறியுள்ளது. ரஷ்யாவின் பூட்டின் இரு தரப்பையும் […]

மனித வளர்ச்சி சுட்டியில் (HDI) இலங்கை 73ம் இடத்தில்

மனித வளர்ச்சி சுட்டியில் (HDI) இலங்கை 73ம் இடத்தில்

​ஐ​.நா. தயாரித்து வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி சுட்டியில் (Human Development Index, HDI) இலங்கை 0.782 புள்ளிகளை பெற்று 73ம் இடத்தில் உள்ளது. 2020ம் ஆண்டில் இலங்கை 75ம் இடத்தில் இருந்தது. இந்த கணிப்பில் 0.50 முதல் 0.70 வரையான புள்ளிகளை கொண்ட நாடுகள் medium வளர்ச்சி கொண்டவையாக கருதப்படுகிறது. அதனால் இலங்கை medium வளர்ச்சியை கொண்ட நாடாகிறது. அத்துடன் இலங்கையில் சராசரி வாழ்கை காலம் 76.4 ஆண்டுகளாக உள்ளது. இக்கணிப்பில் 0.962 புள்ளிகளை […]

IT சேவைகளால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு $150 பில்லியன்

IT சேவைகளால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு $150 பில்லியன்

IT சேவைகள் மூலம் உலகில் அதிக வருமானம் பெறும் நாடாக இந்தியா உள்ளது. 2021-2022 வர்த்தக ஆண்டில் இந்தியா $150 பில்லியன் வெளிநாட்டு வருமானத்தை பெற்று உள்ளது என்கிறது Reserve Bank of India (RBI). இந்தியாவிடம் இருந்து IT சேவைகளை பெற்ற நாடுகளில் அமெரிக்கா முதலாம் இடத்தில் உள்ளது. கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு நாடுகளும் மொத்தம் $86.9 பில்லியன் பெறுமதியான IT சேவையை இந்தியாவிடம் இருந்து பெற்று உள்ளன. அது இந்தியாவின் […]

சீனாவின் ஒலியிலும் 33 மடங்கு வேக Wind Tunnel

சீனாவின் ஒலியிலும் 33 மடங்கு வேக Wind Tunnel

சீனா ஒலியிலும் 33 மடங்கு வேகத்தில் (Mach 33, மாக் 33) காற்றோட்டம் ஏற்படுத்தக்கூடிய wind tunnel என்று அழைக்கப்படும் காற்று குகையை தயாரித்து உள்ளது. இவ்வகை காற்று குகைகளிலேயே விமானங்களின் இறக்கைகள், ஹெலிகளின் காற்றாடிகள், ஏவுகணைகள், ஏவு கலங்கள் ஆகியயன தயாரிப்புக்கு முன் ஆய்வு செய்யப்படும். 2018ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட JF-22 என்ற இந்த wind tunnel ஊடே காற்று சுமார் 11,500 m/sec வேகத்தில் செல்லும். ஒலியின் வேகம் 343 m/sec ஆக […]

1 85 86 87 88 89 339