ரஷ்ய சனாதிபதி பூட்டினின் நெருங்கிய நண்பரான Alexander Dugin னின் மகள் Darya Dugin சனிக்கிழமை கார் குண்டு வெடிப்பு ஒன்றுக்கு பலியாகி உள்ளார். பூட்டினின் நெருங்கிய நண்பனான தந்தைக்கு வைத்த குண்டுக்கே 29 வயதுடைய மகள் பலியாகி உள்ளதாக நம்பப்படுகிறது. தந்தை, மகள் இருவரும் பூட்டினின் யுக்ரைன் மீதான தாக்குதலை ஆதரிப்பவர்கள். அரசியல் பதவிகள் எதையும் கொண்டிராவிடினும் தந்தை Alexander அரசியலில் பூட்டினின் மூளை என்று வர்ணிக்கப்படுபவர். தந்தை ரஷ்ய தேசியத்தில் திடமான நாட்டம் கொண்டவர். […]
பின்லாந்து நாட்டின் பிரதமர் Sanna Marin அண்மையில் இடம்பெற்ற party ஒன்றில் போதை தலைக்கு ஏறியவர் போல் கும்மாளம் போட்டிருந்தார் இருந்தார். அந்த வீடியோ தற்போது பகிரங்கத்துக்கு வந்ததால் அவர் போதைக்கான சோதனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சோதனை முடிவுகள் அடுத்த கிழமை வெளிவரும். அதேநேரம் Marin, வயது 36, தான் எந்தவித சட்டவிரோத போதைகளுக்கும் அடிமையாகவில்லை என்று கூறியுள்ளார். தற்போது மட்டுமன்றி தனது இளைய வயதிலும் சட்டவிரோத போதை உட்கொண்டிருக்கவில்லை என்கிறார் பிரதமர். ஆனாலும் […]
விஞ்ஞான ஆய்வு வெளியீடுகளில் அமெரிக்காவை முதல் தடவையாக சீனா பின்தள்ளி உள்ளது என்கிறது ஜப்பானின் National Institute of Science and Technology Policy (NISTEP) என்ற அமைப்பு. உலகம் எங்கும் பல்லாயிரம் விஞ்ஞான ஆய்வு வெளியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் மிக தரமானவை பின் வரும் காலத்து ஆய்வுகளில் மேற்கோள் (citation) காட்டப்படும். முதல் ஆய்வின் தரம் உயர, அது மேற்கோள் காட்டப்படும் அளவும் அதிகரிக்கும். அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஆய்வுகளின் முதல் 1% ஆய்வுகள் […]
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்ற ZIM Charleston என்ற பெயர் கொண்ட கொள்கலன் கப்பல் தீ பற்றி அதில் இருந்த 300 கொள்கலன்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. அதனால் அந்த கப்பல் மீண்டும் கொழும்பு துறைமுகத்துக்கு திரும்பலாம். சீனாவில் தனது பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய துறைகளில் தரித்து பின் ஆகஸ்ட் 8ம் திகதி கொழும்பு வந்துள்ளது. கொழும்பு East Terminal லில் கொள்கலன்களை இறங்கி, ஏற்றி பின் கொழும்பை விட்டு நீங்கி […]
அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முதல் படியாக ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்கள் இல்லாத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க உள்ளது. சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட SLS ஏவுகணை ஏற்கனவே Kennedy ஏவு தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. மிக பாரமான இதை […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை அண்டிய தென் மேற்கு பகுதி தொடர்ந்தும் நீர் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி வருகிறது. அடுத்த ஆண்டில் இப்பகுதி Tier 2 அளவிலான நீர் தட்டுப்பாட்டை அடையலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. Tier 0, Tier 1, Tier 2, Tier 3 ஆகிய அளவீடுகள் இப்பகுதிக்கு நீர் வழங்கும் மீட் வாவி (Lake Mead) என்ற Hoover Dam அணையை கட்டி தேக்கிய நீரின் அளவில் தங்கி உள்ளன. மீட் அணைக்கட்டு கொள்ளக்கூடிய […]
எகிப்தின் தலைநகர் Cairo வுக்கு அண்மையில் உள்ள Giza என்ற நகரில் உள்ள Abu Sifin Coptic தேவாலய தீக்கு குறைந்தது 41 பேர் பலியாகியும், 55 காயமடைந்தும் உள்ளனர். மின் ஒழுக்கே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி போலீஸ் அறிக்கை கூறுகிறது. விபத்து இடம்பெற்ற வேளையில் சுமார் 5,000 பேர் தேவாலயத்தில் இருந்துள்ளனர். விபத்து உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9:00 மணிக்கு நிகழ்துள்ளது. தேவாலய வாசல் தடைப்பட்டதானாலே அதிகமானோர் மரணித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. […]
சீனாவின் Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செல்ல இலங்கை அரசு சனிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் Yuan Wang 5 இலங்கை துறைமுகத்துக்கு வருகிறது. சீனா இது ஒரு ஆய்வு கப்பல் என்று கூறினாலும் இந்தியாவும், அமெரிக்காவும் இதை உளவுபார்க்கும் கப்பலாகவே கருதுகின்றன. இந்த கப்பல் செய்மதி மூலமான தொடர்புகளையும், ICBM போன்ற நீண்ட தூரம் பாயும் ஏவுகணை அவதானிப்புகளையும் செய்ய வல்லது. […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பின் Mar-a-Lago என்ற மாளிகை வீட்டில் இருந்து அமெரிக்க அரசுக்கு சொந்தமான 11 Top Secret ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்து உள்ளது. அனால் ரம்ப் அந்த ஆவணங்கள் declassified ஆவணங்கள் என்று கூறுகிறார். அமெரிக்க அரசுக்கு சொந்தமான இரகசிய ஆவணங்களை பதவியில் உள்ள சனாதிபதியும், அனுமதி கொண்ட உயர் அதிகாரிகளும் பார்வை இடலாம். ஆனால் அவற்றை அவர்கள் தமது வீட்டுக்கு எடுத்து செல்வது குற்றம். இச்செயல் […]
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டப்படும் புதிய Terminal 2 வேலைகள் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கட்டுமான வேலைகளை செய்யும் ஜப்பான் நிறுவனமான Taisei கட்டுமானத்தை நிறுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்த கட்டுமானத்துக்கான பணம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறுகிறது Taisei. பணம் கிடைக்க வழி செய்தால் மட்டுமே தாம் வேலைகள் தொடர முடியும் என்கிறது Taisei. அத்துடன் வேலைகளை செய்வதற்கு தேவையான சூழ்நிலையும் அவசியம் என்கிறது Taisei. புதிய Terminal 2 கட்டிடத்தையும் பழைய […]