Bloomberg Billionaires Index கணிப்புப்படி இந்திய வர்த்தகரான அடானி (Gautam Adani) தற்போது உலகின் 3வது பெரிய செல்வந்தர் ஆகியுள்ளார். மிக குறுகிய காலத்தில் அடானி பெருமளவு செல்வத்தை சேகரிக்க அவர் கொண்டிருந்த இந்திய பிரதமர் மோதியின் நெருக்கம் பிரதான காரணம். 2022ம் ஆண்டின் முதல் அரை ஆண்டு காலத்தில் மட்டும் அடானி $60 பில்லியன் மேலதிக சொத்தை பெற்றுள்ளார். அடானியிடம் தற்போது சுமார் $137 பில்லியன் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வகை செல்வந்தரின் பெருமளவு சொத்துக்கள் […]
செப்டம்பர் 1ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரஷ்யாவின் Vostok 2022 (East 2022) என்ற மிக பெரிய இராணுவ பயிற்சி இடம்பெறவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கேயும், ஜப்பான் கடலிலும் இந்த பயிற்சி இடம்பெறும். சீனா, இந்தியா, சிரியா, நிக்கராகுவா, லாவோஸ், மொங்கோலியா உட்பட பல முன்னாள் சோவியத் நாடுகளும் இந்த பயிற்சியில் பங்கு கொள்ளும். சீனா முழுமையாக பங்கு கொண்டாலும் இந்தியா அரை மனத்துடனேயே பங்கு கொள்கிறது. ஜப்பான் கடலில் (Sea of Japan) இடம்பெறும் […]
பாகிஸ்தானில் தற்போது பொழிந்துவரும் தென்மேற்கு பருவக்காற்று கால monsoon மழைக்கு சுமார் 1/3 பங்கு பாகிஸ்தான் வெள்ளத்துள் அமிழ்ந்து உள்ளது. அத்துடன் குறைந்தது 1,136 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வெள்ளத்துக்கு சுமார் 3,475 km நீள வீதிகள் அழிந்தும், 157 பாலங்கள் உடைந்தும் உள்ளன. சுமார் 1 மில்லியன் வீடுகளும், குடிசைகளும் அழிந்தும், சுமார் 730,000 கால்நடைகள் மரணித்தும் உள்ளன. இவர்களுக்கு துருக்கி, UAE, கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து உதவிகள் வர ஆரம்பித்து உள்ளன. […]
அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதற்கு முதல் படியாக இன்று ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்களை கொண்டிராத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க ஏவும் நடவடிக்கை இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. The countdown மணிக்கூடு 40 செக்கனில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதாவது ஏவலுக்கு 40 […]
சீனாவின் பல நிறுவனங்கள் DOW, NASDAQ போன்ற அமெரிக்க பங்கு சந்தைகளில் தமது பங்குகளை விற்று முதலீடுகளை பெற்று வந்திருந்தன. ஆனால் அவ்வாறு சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தைகளில் இயங்குவதை அமெரிக்கா நிறுத்த (delist) அறிவித்து இருந்தது. சீன நிறுவனங்களை அமெரிக்கா புலனாய்வு (audit) செய்ய முடியவில்லை என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ஆனால் புதிய இணக்கப்படி அமெரிக்கா மேற்படி நிறுவனங்கள் மீது சீனா செய்யும் புலனாய்வுகளை பார்வையிட அனுமதி கிடைக்கிறது. Alibaba, JD.com, NIO Inc, […]
தற்போது 1.9 மில்லியன் ஆக இருக்கும் ரஷ்யாவின் படை தொகையை 2.04 மில்லியன் ஆக அதிகரிக்கிறார் ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின். யுகிரைன் யுத்தம் எதிர்பார்த்தபடி இலகுவாக செல்லாமையே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் CIA அதிகாரி ரஷ்யா யுகிரைன் யுத்தத்தில் சுமார் 15,000 படையினரை இழந்து உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் அதன் 3 மடங்கு படையினர் காயப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியிருந்தார். இந்த யுத்தம் தற்போது 7 மாதங்களாக இழுபடுகிறது. மேலதிகமாக உள்வாங்கப்படும் 137,000 […]
அமெரிக்காவுக்கு ஆதரவான அதேவேளை சீனா, ரஷ்யா, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மீது பொய்யான கருத்துக்களை, செய்திகளை பரப்பும் பல கணக்குகளை Facebook, Twitter, Instagram ஆகிய நிறுவனங்கள் புதன்கிழமை மூடி உள்ளன. மேற்படி நடவடிக்கையில் குறைந்தது 25 Facebook கணக்குகள், 12 Twitter கணக்குகள், 10 Instagram கணக்குகள் மூடப்பட்டு உள்ளன. அடையாளம் காணப்படாதோரால் மேற்படி அமெரிக்க ஆதரவு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. அத்துடன் இந்த பதிவுகள் […]
1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட NDTV (New Delhi TV) என்ற செய்தி நிறுவனத்தை இந்திய செல்வந்தர் அடானி (Adani) பலவந்தமாக கைக்கொள்ள முயற்சிக்கிறார். NDTV நிறுவனத்தை ஆரம்பித்தவருக்கு தெரியாமலேயே இந்த அறிவிப்பை அடானி நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை தாம் NDTV நிறுவனத்தின் 29.18% உரிமையை பங்கு (stock) கொள்வனவு மூலம் செய்ய உள்ளதாக அடானி கூறி இருந்தாலும், அதற்கு முன்னர் மேலும் 26% உரிமையை பெற இருந்ததை மறைத்து உள்ளது அடானி. அது மட்டுமன்றி கடந்த […]
Jagtar Singh Johal என்ற பிரித்தானிய சீக்கியரை இந்தியாவுக்கு பிரித்தானியா காட்டிக்கொடுத்து உள்ளது. அதனால் Johal இந்தியாவில் துன்புறுத்தப்பட்டு (torture) உள்ளார். காட்டிக்கொடுத்தது மட்டுமன்றி பின் அந்த சீக்கியரின் நலனுக்காக பிரித்தானியா அக்கறை கொண்டுள்ளதாகவும் நடித்து உள்ளது. இந்தியாவில் வாழும் சீக்கியரின் உரிமைகளுக்காக ஆக்கங்கள் எழுதிவரும் Johal 2017ம் ஆண்டு இந்தியா சென்ற பொழுதே இந்தியாவில் அடையாளம் காணப்படாதோரால் கடத்தப்பட்டு பின் இந்த ஆண்டு மே மாதம் சட்டப்படி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது டெல்லி […]
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போதைய அரசு பயங்கரவாத குற்ற வழக்கு ஒன்றை திங்கள் தாக்கல் செய்து உள்ளது. இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியை இழந்து இருந்தார். இவரின் கைதை தடுக்க ஆதரவாளர் இம்ரானின் இஸ்லாமபாத் வீட்டை முற்றுகை இட்டு இருந்தனர். அதனால் இம்ரானுக்கு கைதுக்கு முன்னான பிணை (pre-arrest bail) வழங்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இம்ரான் செய்த ஊர்வலம் ஒன்றில் அரசுக்கு ஏதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தார். அத்துடன் […]