யாருக்கு சொல்லியழ 20: அது அங்கே, இது இங்கே

யாருக்கு சொல்லியழ 20: அது அங்கே, இது இங்கே

உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனா மாதிரி உலகை ஆண்ட பிரித்தானியா தற்போது தன்னையே ஆழ முடியாது தவிக்கிறது. அந்த நாடு மட்டுமல்ல அங்குள்ள ஒரு கட்சியே தன்னை ஆழ முடியாத நிலை உருவாக இறுதியில் இந்திய வம்சம் வந்த Rishi Sunak பிரதமர் ஆகியுள்ளார் – பொது தேர்தல் மூலம் அல்ல, பதிலாக மேசைக்கு கீழான உட்கட்சி நாடகம் மூலம். Sunak பிரித்தானியாவில் இரண்டாம் சந்ததி. இவரின் பெற்றோர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சென்ற இந்திய வம்சத்தினர். […]

சீனாவுக்கு யுத்த விமான பயிற்சி வழங்கிய அமெரிக்கர் கைது

சீனாவுக்கு யுத்த விமான பயிற்சி வழங்கிய அமெரிக்கர் கைது

Daniel Edmund Duggan என்ற, வயது 54, முன்னாள் அமெரிக்க யுத்த விமான பயிற்சி வழங்கும் விமானியை அஸ்ரேலியா வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவரை அஸ்ரேலிய மத்திய போலீசார் New South Wales பகுதியில் உள்ள Orange என்ற சிறு கிராமத்தில் கைது செய்துள்ளனர். பல ஆண்டுகள் அமெரிக்க விமான படையில் பணியாற்றிய Duggan பின்னர் அஸ்ரேலியா சென்று Top Gun Tasmania என்ற வர்த்தகத்தை ஆரம்பித்து இருந்தார். […]

மேலும் 5 ஆண்டுகளுக்கு சீன சனாதிபதியாகிறார் சீ

மேலும் 5 ஆண்டுகளுக்கு சீன சனாதிபதியாகிறார் சீ

சீனாவின் சனாதிபதி சீ ஜின்பிங் (Xi JinPing, வயது 69) மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் சனாதிபதியாக பதவியில் இருக்க உள்ளார். அதனால் இவர் 3 தடவைகள் சனாதிபதி பதவியில் இருக்கும் சனாதிபதி ஆகிறார். வெளிநாட்டவர் சீன தலைவரை சனாதிபதி என்று அழைத்தாலும், கட்சிக்குள் அவர் general secretary ஆவார். சீன அரசியலில் Politburo Standing Committee (PSC) என்பதே அதிகாரத்தின் உச்சம். மொத்தம் 7 பேர் கொண்ட இந்த குழுவின் தலைவர் General Secretary ஆவர். […]

Boris Johnson பிரதமர் போட்டியிலிருந்து பின்வாங்கினார்

Boris Johnson பிரதமர் போட்டியிலிருந்து பின்வாங்கினார்

பிரதமர் லிஸ் டிரஸ் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் Boris Johnson மீண்டும் பிரித்தானிய பிரதமர் பதவிக்கு போட்டியிட முன்வந்திருந்தார். ஆனால் அவர் இன்று தான் போட்டியில் இருந்து ஓதுங்குவதாக கூறியுள்ளார். இவர் தனக்கு போட்டியிட தேவையான 100 பாராளுமன்ற அங்கத்தவரின் ஆதரவு உண்டு என்று கூறியிருந்தாலும், இதுவரை 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பகிரங்கமாக தமது ஆதரவை Johnson னுக்கு வழங்கி இருந்தனர். Johnson பின்வாங்கிய உடன் தற்போது முன்னணியில் உள்ள […]

கொழும்புக்கு மீண்டும் Air France, KLM விமான சேவைகள்

கொழும்புக்கு மீண்டும் Air France, KLM விமான சேவைகள்

COVID காலத்தில் சேவைகளை நிறுத்திய பிரான்சின் Air France விமான சேவையும், ஜேர்மனியின் KLM (Royal Dutch Airlines) விமான சேவையும் மீண்டு கொழும்புக்கு சேவைகளை ஆரம்பிக்க உள்ளன. நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் இந்த விமான சேவைகள் ஆரம்பத்தில் கிழமைக்கு 4 சேவைகளை மட்டுமே கொண்டிருக்கும். Air France சேவை AF 268 என்ற சேவை குறியீட்டை (flight number) கொண்டிருக்கும். AF 268 என்ற இந்த சேவை பரிஸ் நகரில் […]

Boris Johnson மீண்டும் பிரித்தானிய பிரதமர்?

Boris Johnson மீண்டும் பிரித்தானிய பிரதமர்?

லிஸ் டிரஸ் பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பணியில் பிரித்தானிய ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இம்முறை கட்சி மேசைக்கு கீழால் கதைத்து திங்கள் தமது பிரதமர் தெரிவை அறிவிக்க முனைகிறது. அதற்கு ஏற்ப குறைந்தது 100 ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். Rishi Sunak என்பவர் இதுவரை 114 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் Johnson னும் 100 கும் […]

செப்டம்பர் நுகர்வோர் விலை சுட்டி 73.7% யால் அதிகரித்தது

செப்டம்பர் நுகர்வோர் விலை சுட்டி 73.7% யால் அதிகரித்தது

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான தேசிய நுகர்வோர் விலை சுட்டி (National Consumer Price Index அல்லது NCPI) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 73.7% ஆல் அதிகரித்து உள்ளது. அதாவது 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நுகர்வோர் பொருட்கள் 2021ம் ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் சராசரியாக 73.7% ஆல் அதிகரித்து உள்ளது. அனைத்து பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலை சுட்டி இலங்கையில் 73.7% ஆக அதிகரித்தமை இதுவே முதல் தடவை. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் […]

ஆப்கான் குழந்தையை திருடிய அமெரிக்க படையினன்

ஆப்கான் குழந்தையை திருடிய அமெரிக்க படையினன்

Joshua Mast என்ற அமெரிக்க Marine Corps படையினன்/வழக்கறிஞர் அவரின் மனைவியுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் பெண் குழந்தை ஒன்றை தனதாக்கினார் என்று குழந்தையின் உறவினரால் வழக்கு ஒன்று அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் நீதி திணைக்களங்களுள் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க படைகள் தாக்கியதில் ஆப்கானித்தான் குடும்பம் ஒன்று பலியாகி இருந்தது. தாய், தந்தை, 5 சகோதரங்கள் பலியாக ஒரு பெண் குழந்தை மட்டும் காயங்களுடன் […]

பிரதமர் டிரஸ் 6 கிழமைகளில் பதவி விலகினார்

பிரதமர் டிரஸ் 6 கிழமைகளில் பதவி விலகினார்

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் பதவிக்கு வந்து 6 கிழமைகளில் இன்று வியாழன் பதவியை விட்டு விலகியுள்ளார். அதனால் இவரே பிரித்தானியாவில் மிக குறைந்த காலம் பதவியில் இருந்த பிரதமர் ஆகிறார். இந்த அறிவிப்பை டிரஸ் பிரதமரின் வதிவிடமான Number 10 Downing Street முன்னே செய்துள்ளார். இவர் பதவிக்கு வந்தது பொது தேர்தல் மூலம் அல்ல. பதிலுக்கு உட்கட்சி வாக்கெடுப்பு மூலமே இவர் பதவிக்கு வந்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு உட்கட்சி வாக்கெடுப்பு நிகழலாம். பின் […]

பிரித்தானிய அரசின் இரண்டாம் அமைச்சரும் நீங்கினார்

பிரித்தானிய அரசின் இரண்டாம் அமைச்சரும் நீங்கினார்

ஆட்சிக்கு வந்து சுமார் 6 கிழமைகளில் இரண்டாவது அமைச்சரும் பிரித்தானிய பிரதமர் டிரஸ் ஆட்சியில் இருந்து பதவி நீங்கியுள்ளார். Suella Braverman என்ற உள்துறை அமைச்சரே (home secretary) இன்று புதன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த அமைச்சர் அரச ஆவணம் ஒன்றை தனது தனியார் email மூலம் அனுப்பியதே பதவி நீங்கலுக்கான காரணம் என்று கூறப்படுகிறது. அனால் இவர் பிரதமரை சாடியதுவும் காரணம் ஆகலாம். Grant Shapps என்பவர் தற்போது உள்துறை அமைச்சராக பதவி […]

1 80 81 82 83 84 339