ஆறு ராஜீவ் கொலையாளிகளை நீதிமன்றம் விடுதலை

ஆறு ராஜீவ் கொலையாளிகளை நீதிமன்றம் விடுதலை

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலை குண்டு மூலம் கொலை செய்த காரணத்தால் சிறை தண்டனை அனுபவித்துவரும் 6 பேர் இன்று வெள்ளி இந்திய நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். நளினி, PR ரவிச்சந்திரன், Robert Payas, சுதேந்திரராஜா, ஜெயக்குமார், ஸ்ரீஹரன் ஆகியோரே அந்த 6 பேரும். மேற்படி 6 பேரும் 30 ஆண்டு கால சிறை தண்டனையை திருப்திகரமான முறையில் செய்ததால் அவர்களை விடுதலை செய்வதாக […]

பைடென், சீ ஜின்பிங் G20 அமர்வில் நேரடியாக உரையாடுவார்

பைடென், சீ ஜின்பிங் G20 அமர்வில் நேரடியாக உரையாடுவார்

அமெரிக்க சனாதிபதி பைடெனும் சீன சனாதிபதி சீயும் இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள G20 அமர்வில் நேரடியாக உரையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான G20 அமர்வு பாலி நகரில் திங்கள் ஆரம்பமாகும். இரு தலைவர்களும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான அரச தொடர்புகளை வலுப்படுத்துவர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்திலும், பின்னர் பைடென் காலத்திலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரச தொடர்புகள் அடிமடத்துக்கு சென்று இருந்தன. சீ மேலும் 5 ஆண்டுகள் […]

தேடப்படும் நிராவ் மோதி இந்தியாவுக்கு கடத்தப்படலாம்

தேடப்படும் நிராவ் மோதி இந்தியாவுக்கு கடத்தப்படலாம்

இன்றைய பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இந்தியாவில் தேடப்படும் முன்னாள் வைர வியாபாரியான நிராவ் மோதி (Nirav Modi) விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம். பிரித்தானியாவில் வாழும் நிராவ் மோதி தன்னை பிரித்தானிய அரசு இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கேட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கே இன்று புதன்கிழமை நிராவின் வேண்டுகோளை மறுத்து உள்ளது. நிராவ் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்யக்கூடும் என்று நீதிமன்றில் நிராவின் சட்டத்தரணியால் வாதாடப்பட்டது. ஆனால் […]

பிரித்தானியாவில் அமைச்சர் Williamson பதவி விலகினார்

பிரித்தானியாவில் அமைச்சர் Williamson பதவி விலகினார்

பிரதமர் Rishi Sunak தலைமையிலான பிரித்தானிய அரசில் இருந்து Sir Gavin Williamson என்ற இலாகா இல்லாத அமைச்சர் இன்று பதவி விலகியுள்ளார். Williamson தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பயமுறுத்தினார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. Williamson முன்னர் கட்சியின் chief whip ஆக பதவி வகித்த காலத்தில் அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் மிரட்டினார் என்று அவரின் காலத்தில் deputy chief whip ஆக பணியாற்றிய Anne Milton என்ற உறுப்பினர் […]

Powerball $1.9 பில்லியன் குலுக்கல் பின்போடப்பட்டது

Powerball $1.9 பில்லியன் குலுக்கல் பின்போடப்பட்டது

அமெரிக்காவின் Powerball குலுக்கல் இன்றைய $1.9 பில்லியன் பரிசுக்கான குலுக்கலை பின்போட்டு உள்ளது. எல்லா மாநிலங்களிலும் இருந்தும் அவசியமான விற்பனை தரவுகள் தம்மை வந்தடையாமையே காரணம் என்கிறது Powerball. அனைத்து விற்பனை தவுகளும் வந்த பின்னரே குலுக்கல் இடம்பெறும். திங்கள் குலுக்கலுக்கான தரவுகள் நியூ யார்க் நேரப்படி திங்கள் இரவு 10:59 மணிக்கு கிடைத்தால் அவசியம்.ஆனால் தரவுகள் செவ்வாய் காலை வரை கிடைக்கவில்லை. இந்த பரிசை ஒருவர் வென்றால் அவருக்கு, அரச வரிகளின் பின், $929.1 மில்லியன் […]

இந்து சமுத்திரத்தை நோக்கி சீனாவின் Yuan Wang 6

இந்து சமுத்திரத்தை நோக்கி சீனாவின் Yuan Wang 6

சீனாவின் புலனாய்வு கப்பலான Yuan Wang 6 தற்போது இந்து சமுத்திரத்தை நோக்கி பயணிக்கிறது. இக்கப்பலின் வரவால் இந்தியா மீண்டும் தனது எல்லை கடலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளது. இந்தியா தனது கரையில் இருந்து 200 கடல் மைல் தூரம்வரை உள்ள Exclusive Economic Zone என்ற வர்த்தக வலயத்தை பாதுகாக்க தேவையான நடவடிககைளை எடுக்கிறது. ஆனால் மேற்படி கப்பல் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அழைப்பில் சென்றால் இந்தியா எதுவும் செய்ய முடியாது. […]

அமெரிக்காவில் $1.6 பில்லியன் லொத்தர் பரிசு

அமெரிக்காவில் $1.6 பில்லியன் லொத்தர் பரிசு

அமெரிக்காவில் இன்று சனி இரவு ஒருவர் (அல்லது ஒரு குழு) $1.6 பில்லியன் லொத்தர் பரிசை வென்று இருக்கலாம். அவ்வாறு வென்று இருந்தால் இதுவே உலகில் மிகப்பெரிய லொத்தர் பரிசாகும். Powerball என்ற இந்த லொத்தரில் இன்றைய வெற்றி பெறும் இலக்கங்கள்  28-45-53-56-69 ஆகும். அத்துடன் Powerball இலக்கம் 20 ஆகும். ஒருவர் வெற்றி பெற மேற்படி  6 இலக்கங்களையும் கொண்டிருக்க வேண்டும். பரிசு $1.6 பில்லியன் ஆனாலும், அரச வரிகளின் பின் வெற்றியாளர் பெறக்கூடியது சுமார் […]

செலென்ஸ்கியை பூட்டினுடன் பேச அமெரிக்கா மறைவில் அழுத்தம்

செலென்ஸ்கியை பூட்டினுடன் பேச அமெரிக்கா மறைவில் அழுத்தம்

அமெரிக்காவின் பைடென் அரசு யுகிரேனின் சனாதிபதி செலென்ஸ்கியை (Zelenskiy) நிபந்தனைகள் எதுவும் இன்றி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்த விரும்புவதாக தெரியப்படுத்துமாறு மறைவில் அழுத்துகிறது என்று அமெரிக்காவின் The Washington Post பத்திரிகை கூறியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் யுகிரேனுக்கு தொடர்ந்தும் உதவ தீர்மானம் கொண்டிருந்தாலும், மேற்கு நாடுகளும் யுகிறேன் யுத்தத்தால் பெருமளவு பாதிப்பு அடைகின்றன. மேற்கின் பணமும் வேகமாக கரைந்து, கையிருப்பில் உள்ள ஆயுதங்களும் குறைந்து வருகிறது. பூட்டின் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் […]

இந்தியாவில் மீண்டும் ஆபத்தான புகை மண்டலம்

இந்தியாவில் மீண்டும் ஆபத்தான புகை மண்டலம்

இந்தியாவை, குறிப்பாக சுமார் 20 மில்லியன் மக்களை கொண்ட தலைநகர் டெல்லியை, உடல் நலத்துக்கு ஆபத்தான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் பாடசாலைகள் மூடப்பட்டு உள்ளன. உழவர்கள் அறுவடையின் பின் அடி கட்டைகளை எரித்தல், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, கட்டுமான இடங்களில் இருந்து வரும் தூசு எல்லாம் வளிமண்டலத்தின் அடியில் தேங்கி உள்ளன. வெள்ளிக்கிழமை டெல்லியில் ஒரு கன மீட்டர் வளியில் 470 மைக்ரோ கிராம் அல்லது அதற்கும் அதிகமான மாசுகள் உள்ளன. பொதுவாக 250 […]

இலங்கை பெண்ணின் Traditional Me என்ற YouTube தொடர்

இலங்கை பெண்ணின் Traditional Me என்ற YouTube தொடர்

இலங்கை பெண்ணான Nadee பதியும் Traditional Me என்ற YouTube சமையல் தொடரை தற்போது 1.6 மில்லியன் பேர் பார்வை செய்கின்றனர். மிக சாதாரண முறையில் சமையல் செய்து காட்டும் Nadee தான் Li Ziqi என்ற சீன பெண்ணின் YouTube தொடரை பார்த்தே கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். Li Ziqi தொடர் சுமார் 20 மில்லியன் பேரின் பார்வையை கொண்டது. ஆரம்பத்தில் Nadee தயாரித்த YouTube விடீயோக்கள் அதிகம் பார்வைகளை பெற்று இருக்கவில்லை. ஆனால் 2020ம் ஆண்டில் […]

1 78 79 80 81 82 339