இன்று முதல் ரஷ்ய எண்ணெய் பரல் ஒன்றுக்கு அதிகப்படியாக $60 மட்டுமே செலுத்தலாம் என்று G7 உட்பட மேற்கு நாடுகள் விதி வகுத்துள்ளன. ஆனால் இந்த விதியை ரஷ்யா நிராகரித்து உள்ளது. இந்த விதிப்படி மேற்கு நாடுகளில் வர்த்தகம் செய்யும் எண்ணெய் கப்பல் நிறுவனங்கள், கப்பல் பயணத்துக்கு காப்புறுதி வழங்கும் நிறுவனங்கள், கொள்வனவுக்கு உதவும் வங்கிகள் ஆகியன தாம் தலையிடும் ரஷ்ய எண்ணெய் கொள்வனவுகளின் பரல் ஒன்றின் விலை $60 அல்லது அதற்கும் குறைவாக இருப்பதை உறுதி […]
HSBC (Hong Kong and Shanghai Bank) தனது கனடிய வங்கி வர்த்தகத்தை கைவிட்டு வெளியேறுகிறது. HSBC வங்கி கைவிடும் கனடிய வர்த்தகத்தை Royal Bank of Canada என்ற கனடிய வங்கி $10 பில்லியனுக்கு (C$13.5 பில்லியன்) கொள்வனவு செய்கிறது. HSBC வங்கியின் கனடிய வர்த்தகம் மிகவும் இலாபகரமானதாக இருந்தும் அது கனடாவை கைவிடுவது ஆச்சரியமாக உள்ளது. 2021ம் ஆண்டில் மட்டும் இந்த வங்கி கனடாவில் $768 மில்லியன் இலாபத்தை உழைத்து இருந்தது. அந்த ஆண்டு […]
மருவானா (marijuana) என்ற இடைநிலை போதை உடல் நோக்களை (pain) தணிக்கக்கூடிய ஒரு நிவாரணி என்று அதை பயன்படுத்துவோர் கூறுவது பெருமளவில் பொய் என்று கூறுகிறது ஆய்வு ஒன்று. இவ்வாறு மக்கள் பொய்யான மருத்துவம் ஒன்று தமக்கு நிவாரணம் வழங்குகிறது என்று நம்புவதை பிளஸீபோ (placebo effect) என்பர். சுவீடன் நாட்டில் உள்ள Karolinska Institute என்ற நரம்பியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வே இவ்வாறு கூறியுள்ளது. ஆய்வுக்கு உட்பட்ட நோயாளிகளில் சிலருக்கு உண்மையான மருவானா குளிசைகளையும், ஏனையோருக்கு மருவானா […]
அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை B-21 Raider என்ற தனது புதிய நீண்ட தூர குண்டு வீச்சு விமானத்தை (nuclear bomber) கலிபோர்னியாவின் Palmdale நகரத்தில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளின் பின் அமெரிக்கா இவ்வகை புதிய குண்டு வீச்சு விமானம் ஒன்றை சேவைக்கு எடுப்பது இதுவே முதல் தடவை. Northrop Grumman நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த புதிய B-21 குண்டு வீச்சு விமானம் பழைய B-2 குண்டு வீச்சு விமானத்தின் வடிவத்தை கொண்டிருந்தாலும், புதிய விமானம் […]
பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகம் கட்டாரில் இடம்பெறும் FIFA 2022 உதைபந்தாட்ட போட்டியில் பங்கு கொள்ளும் 32 நாட்டு அணிகளின் வல்லமை தரவுகளை கணினிகளில் புகுத்தி Artificial Intelligence முறைமையில் வெற்றிகளை கணித்து இருந்தது. ஆனால் அந்த கணிப்பில் வெற்றி பெறும் என்று கணித்த 16 அணிகளில் 8 அணிகள் மட்டுமே முதல் சுற்றில் வெற்றி பெற்று உள்ளன. அதனால் Oxford கணிப்பின் நம்பகத்தன்மை 50% ஆக மட்டுமே உள்ளது – அது நாணயம் ஒன்றை வீசி தலையா, […]
அமெரிக்க சனாதிபதி பைடெனும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் யூக்கிறேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க பச்சைக்கொடி காட்டி உள்ளனர். வெள்ளைமாளிகை சென்றுள்ள பிரெஞ்சு சனாதிபதி மக்ரானுடன் உரையாடிய பின்னரே பைடென் வியாழக்கிழமை இந்த அறிவிப்பை செய்துள்ளார். பூட்டின் செய்த வன்முறைகளுக்கு அவரே பொறுப்பு என்றாலும் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர தான் பூட்டினுடன் பேச தயார் என்று பைடென் கூறியுள்ளார். பைடென் தான் “looking for a way to end the war” […]
இந்த ஆண்டு இந்தியா வெளிநாட்டு வேலைவாய்ப்பால் சுமார் $100 பில்லியன் (remittance) வருமானத்தை பெறும் என்று உலக வங்கி கூறியுள்ளது. பல ஆண்டுகளாக இவ்வகை வருமானத்தை உலக அளவில் அதிகம் பெறும் நாடு இந்தியாவே. 2021ம் ஆண்டு இந்தியா சுமார் $87 பில்லியன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலமான வருமானத்தை பெற்று இருந்தது. இந்த ஆண்டு அத்தொகை சுமார் 12% ஆல் அதிகரிக்கும் என்று உலக வங்கி கணிப்பிடுகிறது. இதில் பெருமளவு தொகை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து […]
சீனாவின் முன்னாள் சனாதிபதி Jiang Zemin இன்று புதன்கிழமை தனது 96 ஆவது வயதில் காலமானார். இவர் 1993 முதல் 2003 வரை சீனாவின் 5ஆவது சனாதிபதியாக பதவி வகித்தவர். இவரின் ஆட்சியில் சீனா பல முன்னேற்ற நகர்வுகளை செய்திருந்தது. 1997ம், 1998ம் ஆண்டுகளில் ஆசிய நாடுகள் பொருளாதார முடக்கத்தில் இருந்தாலும், சீன பொருளாதாரம் வளர்ச்சியை கண்டிருந்தது. இவரின் ஆட்சியிலேயே சீனா World Trade Organization உறுப்பினர் நாடு ஆனது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியை […]
நைஜீரியாவின் Lagos நாகரில் இருந்து ஐரோப்பா நோக்கி 3 ஆண் அகதிகள் எண்ணெய் கப்பல் ஒன்றின் சுக்கானில் பயணித்துள்ளனர். Las Palmas என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த இவர்களை ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் மீட்டு உள்ளனர். தற்போது இவர்கள் மூவரும் Canary தீவு வைத்தியசாலையில் மருத்துவம் பெறுகின்றனர். Alithini II என்ற மேற்படி எண்ணெய் கப்பல் நவம்பர் மாதம் 17ம் திகதி தனது பயணத்தை நைஜீரியாவில் இருந்து ஆரம்பித்து உள்ளது. ஆனால் இவர்கள்மூவரும் 29ம் […]
சவுதி அரேபியாவில் 6 ஓடு பாதைகளை (runways) கொண்ட பெரிய அளவிலான விமானம் நிலையம் ஒன்று Riyadh நகரில் அமைக்கப்பட உள்ளதாக சவுதி இளவரசர் Mohammed bin Salman இன்று திங்கள் கூறியுள்ளார். இந்த விமான சேவையை தளமாக கொண்டு விமான சேவை செய்ய Riyadh International Airlines (RIA) என்ற புதிய விமான சேவையும் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்துக்கு சவுதி $30 பில்லியன் பணத்தை செலவிடும். ஏற்கனவே மத்திய கிழக்கில் Dubai நகரை தளமாக கொண்ட […]