சீன சனாதிபதி சீயை (Xi JinPing) ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அழைக்கிறார் ரஷ்ய சனாதிபதி பூட்டின். இந்த அறிவிப்பை பூட்டின் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டு உள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ கூட்டுறவை மேலும் வலுப்படுத்த உள்ளதாகவும் பூட்டின் கூறியுள்ளார். ரஷ்யாவின் அரச தொலைக்காட்சி ஒளிபரப்பிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற இணைய உரையாடலில் இந்த அழைப்பு இருந்துள்ளது. “We are expecting you, dear Mr. Chairman, dear friend, we are expecting you next […]
வரும் 2023ம் ஆண்டு புத்தாண்டில் உலக சனத்தொகை 7.9 பில்லியன் ஆக இருக்கும் என்கிறது அமெரிக்காவின் Census Bureau. 2022ம் ஆண்தில் இருந்த உலக சனத்தொகையிலும் இது 73.7 மில்லியன் அதிகம். அதாவது 2022ம் ஆண்டுக்கான உலக சனத்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டுக்கான உலக சனத்தொகை அதிகரிப்பு 0.9% மட்டுமே. அடுத்த ஆண்டுக்கான அதிகரிப்பு மேலும் குறையலாம் என்றும் கணிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு செக்கனுக்கும் 4.3 குழந்தைகள் பிறக்க, 2 பேர் […]
Marion Biotech என்ற இந்திய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மருந்தை அருந்திய 18 உஸ்பெஸ்கிஸ்தான் (Uzbekistan) நாட்டு சிறுவர்கள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. Marion Biotech Pvt Ltd என்ற இந்திய நிறுவனம் தயாரித்த Doc-1 Max Syrup என்ற மருந்தே மரணங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மருந்தை சுவாசம் தொடர்பான (respiratory) அவதிக்கு உட்படும் சிறுவர்களுக்கு வழங்கிய பின்னரே சிறுவர்கள் மரணித்து உள்ளனர். இந்த மருந்தை உஸ்பெஸ்கிஸ்தான் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Eureka பகுதியில் இன்று செவ்வாய் காலை 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. US Geological Survey அறிவிப்பின்படி நிலநடுக்கம் அதிகாலை 2:34 மணிக்கு இடம்பெற்றுள்ளது. தொடரும் நடுக்கங்கள் (aftershocks) தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நடுக்கத்தை மையம் கடற்கரையில் இருந்து சுமார் 7.5 மைல் தூரம் நாட்டின் உள்ளே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தில் 6.0 முதல் 6.9 வரையிலான அளவு Strong நடுக்கம் என கணிக்கப்படும். இந்த அளவு நடுக்கத்தில் இடத்துக்கு ஏற்ப பாதிப்பு […]
கடந்த காலங்களில் உலகின் பல பாகங்களிலும் வீட்டு விலை நியாய விலைக்கும் மேலாக மிகையாக வளர்ந்து வந்திருந்தது. ஒரு வீட்டுக்கு நியாயமான விலை என்ன என்பதை கருத்தில் கொள்ளாது பலரும் முண்டியடித்து, போட்டிக்கு விலையை உயர்த்தி கொள்வனவு செய்திருந்தனர். அதனால் வீட்டு கொள்வனவு பங்கு சந்தை பங்கு கொள்வனவு போலாகியது. கனடாவின் பல நகரங்களும் இவ்வகை போட்டியில் மூழ்கி இருந்தன. இதுவரை காலமும் கனடாவில் வீட்டு விலை மிக மலிவாக இருந்ததற்கு மிக குறைந்த கடன் வட்டியே […]
தென் கொரியா தொலைவில் ஒரு செல்வந்த நாடாக தெரிந்தாலும் அங்கு தனிமையில் மரணிக்கும் மக்களின் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனிமையில் மரணிக்கும் நடுத்தர வயது ஆண்களின் தொகை ஏனையோரிலும் அதிகமாக உள்ளது. 2021ம் ஆண்டில் தனிமையில் மரணித்த ஆண்களின் தொகை தனிமையில் மரணித்த பெண்களின் தொகையிலும் 5.3 மடங்கு அதிகம் என்று அரச கணிப்பு காட்டியுள்ளது புதன்கிழமை தென் கொரிய அரசின் Ministry of Health and Welfare வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த ஆண்டு […]
இலங்கையை நோக்கி அடுத்த தாழமுக்கம் வருகிறது. தற்போது வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம் ஓரிரு தினங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தரை தட்டலாம். இது தமிழ்நாட்டின் பகுதிகளையும் தாக்கும். இந்த மழை 3 அல்லது 4 தினங்களுக்கு நீடிக்கலாம். இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் காற்று வீச்சு சுமார் 55 km/h ஆக இருக்கும். மன்னார் வளைகுடா பகுதியிலும் இந்த சூறாவளி உக்கிரமாக இருக்கும். இங்கு கடலில் காற்று வீச்சு சுமார் 45 km/h ஆக […]
ஜப்பான் அடுத்த 5 ஆண்டுகளில் $320 பில்லியன் பணத்தை தனது இராணுவத்தில் முதலிட உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் Fumio Kishida இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இவ்வகை பாரிய இராணுவ முன்னெடுப்பு ஜப்பானில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை. இதனால் ஜப்பான் தனது இராணுவத்தில் செலவழிக்க உள்ள புதிய தொகை முன்னைய தொகையிலும் இரண்டு மடங்காகிறது. இந்த அதிகரிப்பின் ஜப்பானின் இராணுவ செலவு அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகின் 3ஆவது பெரியதாக […]
வட கொரியா இன்று வியாழன் திண்ம நிலை எரிபொருளை பயன்படுத்தும் அதிக உந்த ஏவுகணை (high-thrust solid-fuel) இயந்திரத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதுவரை பெரிய ஏவுகணைகளில் திரவ நிலை எரிபொருளையே வட கொரியா பயன்படுத்தியது. உதாரணமாக நாம் பொங்கலுக்கு ஏவும் ஈக்குவானம் ஒரு திண்ம நிலை எரிபொருளை கொண்டது. அதில் உள்ள வெடிமருந்து திண்ம நிலையில் உள்ளது. பொதுவாக திரவ நிலையில் உள்ள எரிபொருள் அதிக பயன்களை கொண்டது. இதை இலகுவில் கட்டுப்படுத்தலாம். ஆனால் பொதுவாக […]
இந்தியாவின் Alliance Air மேற்கொள்ளும் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை பலாலியை நோக்கிய திசையில் குறைந்த கட்டணத்தையும், சென்னையை நோக்கிய திசையில் கூடிய கட்டணத்தையும் அறவிட இலங்கை அரசு நடைமுறை செய்துள்ள $50.00 குடியகல்வு வரியே காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னை-பலாலி கட்டணம் 6,702 இந்திய ரூபாய்களாக உள்ளது. ஆனால் பலாலி-சென்னை கட்டணம் 9,200 இந்திய ரூபாய்களாக ஆக உள்ளது. இலங்கை அறவிடும் குடியகல்வு கட்டணத்தை கைவிடுமாறு Alliance Air சேவையின் CEO Vineet […]