இந்தோனேசியாவின் Tanimbar பகுதியில் உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:47 மணியளவில் 7.7 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. நடுக்கத்தின் மையம் 97 km நிலத்துக்கு கீழே இருந்துள்ளது என்று European Mediterranean சேஷமோலோங்கிவள் Centre (EMSC) கூறியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்க அளவுகள்: < 2.5 Recorded, not felt Millions per year 2.5 – 5.4 Felt, minor damages 500,000 per year 5.5 – 6.0 Damage near the […]
தம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கருத்து கூறுமாறு பலஸ்தீனர் ஐ. நாவின் International Court of Justice (ICJ) க்கு சென்றதால் கோபம் கொண்ட இஸ்ரேல் பலஸ்தீனர் மீது மேலாதி தடைகளையும் விதித்து, தாம் வசூலிக்கும் பலஸ்தீனரின் வரிப்பணத்தையும் கைக்கொள்ள அறிவித்துள்ளது. ICJ உதவியை நாடும் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 31ம் திகதி இடம்பெற்றது. மொத்தம் 87 நாடுகள் ICJ நீதிமன்றின் உதவியை நாட ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. அமெரிக்கா, கனடா உட்பட மனித நேயம் […]
கடந்த 3 தினங்களாக அமெரிக்க House Speaker பதவிக்கான வாக்கெடுப்பு அமெரிக்க காங்கிரசின் House அவையில் 11 தடவைகள் இடம்பெற்றன. இங்கே போட்டி Republican கட்சிக்குள் மட்டுமே என்றாலும் Speaker பதவிக்க எவரும் தெரிவு செய்யப்படவில்லை. அந்த வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாலாவது தினமும் தொடர்கிறது. Republican கட்சியே House அவையில் அதிக ஆசனங்களை கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான Republican உறுப்பினர் விரும்பும் Kevin McCarthy என்பவருக்கு ஆதரவு வழங்க அதே கட்சியை சார்ந்த 20 கடும்போக்கு […]
கனடாவின் மத்திய அரசு மட்டுமன்றி மாநில அரசுகளும் உலகம் எங்கும் சென்று தமக்கு தேவையான பணியாளர்களை அறுவடை செய்கின்றன. Nova Scotia என்ற கனடிய மாநிலமும் அந்த மாநிலத்தில் உள்ள முதியோரை பராமரிக்க கென்ய (Kenya) அகதி முகாமில் இருந்து 65 பேரை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நோவா ஸ்கொஸ்யா மாநில சுகாதார அமைச்சர் Michele Thompson இந்த செய்தியை தெரிவித்துள்ளார். இந்த அறுவடைக்கு நோவா ஸ்கொஸ்யா மாநிலத்தில் இருந்து ஒரு குழு கென்யா சென்றதாகவும் […]
அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க தேர்தலில் Democratic கட்சி அந்த நாட்டு காங்கிரஸில் 50% க்கும் குறைவான ஆசனங்களை வென்று இருந்ததால் இதுவரை House தலைமையில் இருந்த நான்சி பெலோஷி பதவி விலகியிருந்தார். அந்த இடத்துக்கு பெரும்பான்மை ஆசனங்களை வென்ற Republican கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று தெரிவு செய்யப்பட இருந்தது. ஆனால் அந்த வாக்கெடுப்பு சுலபமாக அமையவில்லை. கட்சியிடம் போதியளவு வாக்குகள் இருந்தாலும் உட்கட்சி சண்டையால் Republican கட்சி House தலைவரை தெரிவு செய்ய முடியாது உள்ளது. […]
Tesla என்ற மின்சார சக்தியில் இயங்கும் கார் நிறுவனத்தை ஆரம்பித்த இலான் மஸ்க் (Elon Musk) தான் உச்ச செல்வந்த காலத்தில் கொண்டிருந்த பெறுமதியில் சுமார் $200 பில்லியனை தற்போது இழந்துள்ளார். Tesla நிறுவனத்தின் பங்ச்சந்தை பெறுமதி வீழ்ச்சி அடைந்ததே இவரின் செல்வம் வீழ்ச்சி அடைய முதல் காரணி. தற்போது இலான் உலகத்தில் இரண்டாவது பெரிய செல்வந்தர். முதலாவது பெரிய பணக்காரராக பிரஞ்சு வர்த்தகர் Bernard Arnault உள்ளார். 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இலான் $340 […]
இந்தியாவின் 3 ஆவது பெரிய வங்கியான ICICI (Industrial Credit and Investment Corporation of India) என்ற வங்கியில் ஊழல் செய்தார் என்று கூறி அதன் முன்னாள் CEO Chanda Kochhar, அவரின் கணவர் Deepak Kochhar ஆகியோருடன் Venugopla Dhoot என்பவர் மீதும் விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன. Videocon என்ற நிறுவனத்தின் உரிமையாளரான வேணுகோபால் கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்திய CBI (Central Bureau of Investigation) கூற்றுப்படி ICICI […]
ஒரு நாள் 24 மணித்தியாலங்களை மட்டும் கொண்டிருந்தாலும் உலக நாடுகள் எல்லாம் புத்தாண்டை கொண்டாட மொத்தம் 26 மணித்தியாலங்கள் தேவை. இதற்கு இயற்கை காரணம் அல்ல, பதிலா மனிதம் வரைந்த நெளிந்து செல்லும் International Date Line என்ற கோடே காரணம். தற்கால திகதி கணிப்புக்கு அடிப்படையாக உள்ளது 1884ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த International Date Line (IDL) என்ற கோடு. இந்த கோடு 180 பாகை நெட்டாங்கை தழுவி, பசுபிக் கடல் ஊடாக செல்கிறது. […]
தனக்கு அடிபணியாத நாடுகளை முன் பின் யோசனை செய்யாது தடை செய்து முரண்படும் குணம் கொண்டது அமெரிக்கா. இந்த குணத்தால் பல நாடுகளை பல்வேறு காரணங்களுக்காக பகைத்தது அமெரிக்கா. ஈரான், வட கொரியா, சிரியா, வெனேசுஏலா (Venezuela) போன்ற பல நாடுகள் இந்த பட்டியலில் அடங்கும். ஏற்கனவே சிரியாவில் சனாதிபதி அசாத்தை கலைக்கும் அமெரிக்காவின் முயற்சி கைவிடப்பட்டு உள்ளது. ரஷ்யா அங்கு நுழைந்து அசாத் அரசை காப்பாற்றி உள்ளது. இந்நிலையில் வெனேசுஏலாவிலும் அமெரிக்கா கொண்ட கொள்கைகள் தற்போது […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பின் வருமான வரி விபரங்கள் அமெரிக்காவின் House சபையால் பகிரங்கம் செய்யப்பட்டு உள்ளன. ரம்ப் தனது வரி விபரங்கள் பகிரங்கத்துக்கு வருவதை தடுக்க பல வழக்குகளை தொடர்ந்து இருந்தாலும் இறுதியில் வரி விபரத்தை பகிரங்கப்படுத்தும் உரிமையை அமெரிக்க உயர் நீதிமன்றம் House சபைக்கு வழங்கி இருந்தது. அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ரம்பின் Republican கட்சி House சபைக்கான பெரும்பான்மையை வென்று இருந்தாலும் அந்த சபை ஜனவரி மாதம் முதலே ஆட்சிக்கு வரும். தற்போது […]