கூகிளும் 12,000 ஊழியரை பதவி நீக்குகிறது

கூகிளும் 12,000 ஊழியரை பதவி நீக்குகிறது

Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet என்ற நிறுவனம் 12,000 ஊழியரை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக இன்று வெள்ளி அறிவித்துள்ளது. இத்தொகை அந்த நிறுவன ஊழியர் தொகையின் 6% ஆகும். பதவி நீக்கம் செய்யப்படுவோர் மேலும் 4 மாத ஊதியமும், 6 மாதங்களுக்கு வைத்திய உதவிகளும் (health coverage) பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. உலக பொருளாதார மந்த நிலை காரணமாக Google தேடுதல், YouTube போன்ற பிரிவுகளின் விளம்பர வருமானம் குறைந்து வருவதும் பதவி நீக்கலுக்கு காரணமாகும். […]

நியூசிலாந்து பிரதமர் பதவி நீங்குகிறார், மக்கள் வியப்பில்

நியூசிலாந்து பிரதமர் பதவி நீங்குகிறார், மக்கள் வியப்பில்

நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தான் பதவி விலகுவதாக இன்று வியாழன் அறிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் பதவி விலகலுக்கு குளறுபடிகள், குற்றசாட்டுகள் எதுவும் காரணம் அல்ல என்று கூறப்பட்டாலும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் பதவியை தொடர அவர் தன்னிடம் மேற்கொண்டு எதுவும் இல்லை என்று Jacinda கூறியுள்ளார்.  இவர் பெப்ரவரி 7ம் திகதி பதவி நீங்குவார். இந்த ஞாயிறு இவரின் கட்சி புதிய பிரதமரை தெரிவு செய்யும். 2017ம் ஆண்டு தனது 37 ஆவது […]

யுத்தத்தை நிறுத்த உதவுமாறு சீக்கு செலன்ஸ்கி கடிதம்

யுத்தத்தை நிறுத்த உதவுமாறு சீக்கு செலன்ஸ்கி கடிதம்

யுக்கிறேனில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்த உதவுமாறு யுக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி சீனா சனாதிபதி சீக்கு கடிதம் மூலம் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். இந்த கடிதத்தை செலன்ஸ்கியின் மனைவி Olena Zelenska தற்போது சுவிற்சலாந்தின் Davos நகரில் இடம்பெறும் World Economic Forum அமர்வுக்கு சென்றுள்ள சீன அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். செலன்ஸ்கி சீன சனாதிபதியை சந்திக்க பலமுறை முனைந்திருந்தாலும் அது நிறைவேறாத நிலையில் அவர் கடிதம் மூலம் அழைப்பை விடுவதாக மனைவி கூறியுள்ளார். இந்த அழைப்புக்கு ஒரு பதில் […]

இந்தியாவில் 8 வயதில் துறவியான செல்வந்த சிறுமி

இந்தியாவில் 8 வயதில் துறவியான செல்வந்த சிறுமி

இந்தியாவில் செல்வம் மிக்க 8 வயது ஜெயின் (Jain) மத சிறுமி ஒருத்தி துறவி ஆக்கியுள்ளார். Devanshi Sanghvi என்ற இந்த சிறுமியின் தந்தை சுமார் $61 மில்லின் பெறுமதியான வைர வர்த்தகர். குயாரத் மாநிலத்தில் உள்ள Surat என்ற வைர நகரில் வாழும் இவரின் குடும்பம் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள். ஜெயின் மதம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்தது. மாமிசம் உண்ணாத இவர்கள் சிறு உயிர்களை கொல்லப்படுவதையும் தவிர்ப்பவர்கள். நாலு தினங்கள் இடம்பெற்ற விழாவில் இந்த […]

60 ஆண்டுகளின் பின் சீன சனத்தொகை வீழ்ச்சி

60 ஆண்டுகளின் பின் சீன சனத்தொகை வீழ்ச்சி

1961ம் ஆண்டுக்கு பின் முதல் தடவையாக கடந்த ஆண்டு சீனாவின் சனத்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனாவின் National Bureau of Statistics வெளியிட்ட அறிக்கையின்படி 2022ம் ஆண்டில் சீனாவின் சனத்தொகை 850,000 ஆல் குறைந்து 1.41175 பில்லியன் ஆக மட்டுமே இருந்துள்ளது. 2021ம் ஆண்டில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 7.52 பிறப்புகள் இருந்திருந்தாலும், 2022ம் ஆண்டில் அது 6.77 பிறப்புகளாக குறைந்து உள்ளது. 1962ம் ஆண்டு அளவில் இங்கு பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 40 க்கும் […]

75 ஆவது இலங்கை சுதந்திர தினத்துக்கு நேரு முத்திரை

75 ஆவது இலங்கை சுதந்திர தினத்துக்கு நேரு முத்திரை

75 ஆவது இலங்கை சுதந்திர தினத்துக்கு நேரு முத்திரை இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்திற்கு முதலாவது இந்திய பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்துடன் ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியிட உள்ளது. முத்திரை உருவப்படத்துக்கு நேருவின் தெரிவுக்கான காரணத்தை இலங்கை வெளியிடவில்லை. இலங்கை 1948ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4ம் திகதி சுதந்திரம் அடைந்திருந்தது. ஆனால் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சுதந்திரம் அடைந்திருந்தது. கொழும்பு சுதந்திர தின விழா பெப்ரவரி […]

19ம் திகதி அமெரிக்காவில் மீண்டும் செலவுக்கு பணமின்மை

19ம் திகதி அமெரிக்காவில் மீண்டும் செலவுக்கு பணமின்மை

இந்த மாதம் 19ம் திகதி அமெரிக்கா மீண்டும் debt limit எல்லையை அடையும் என்றும் அதன்பின் ஊதியங்கள், சேவைகள் போன்ற செலவுகளுக்கு அமெரிக்க மத்திய அரசிடம் பணம் இல்லா நிலை ஏற்படும் என்றும் Treasury Secretary Janet Yellen இன்று வெள்ளி கூறியுள்ளார். செலவுகளுக்கு போதிய பணம் இல்லாத நிலையில் அமெரிக்கா எவ்வளவு கடன் பெறலாம் என்பதை debt limit என்ற சட்டம் வரையறை செய்கிறது. அந்த தொகைக்கு மேல் அரசு கடன் பெற முடியாது. பதிலுக்கு […]

mRNA COVID மருந்துக்கு ஹாங் காங் செல்லும் சீனர்

mRNA COVID மருந்துக்கு ஹாங் காங் செல்லும் சீனர்

ஐந்து தினங்களுக்கு முன்னர் சீனாவுக்கும், ஹாங் காங்க்கும் இடையிலான எல்லை மீண்டும் திறந்து விடப்பட்டது. COVID காரணமாக கடந்த 3 சுமார் ஆண்டுகளாக இந்த எல்லை மூடப்பட்டு இருந்தது. எல்லை திறந்த பின் சீனர் பெருமளவில் ஹாங் காங் படையெடுக்கின்றனர். இதற்கு காரணம் mRNA பயன்பாடு மூலம் தயாரிக்கப்பட்ட COVID மருந்தை பெறவே. முதல் தொகுதி சீனர் இன்று வியாழன் ஹாங் காங் வந்துள்ளனர். இவர்கள் சுமார் $241 செலுத்தியே Pfizer-BioNTech மருந்தை ஹாங் காங்கில் பெறுகின்றனர். […]

யுக்கிறேன் யுத்தத்தை முன்னெடுக்க 3ம் தளபதி

யுக்கிறேன் யுத்தத்தை முன்னெடுக்க 3ம் தளபதி

Special military operation என்று கூறி யுக்கிரேனுள் நுழைந்த ரஷ்ய படைகள் குறைந்த அளவு வெற்றியையாவது அடையாத நிலையில் தற்போது ஜெனரல் Valery Gerasimov யுத்தத்தை வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளார். இவர் ரஷ்ய படைகளை வழிநடத்தும் 3ஆவது தலைமை அதிகாரி. இதுவரை இந்த யுத்தத்தை தலைமை தாங்கிய Sergey Surovikin தற்போது பதவி இறக்கம் செய்யப்பட்டு உள்ளார். சுமார் 3 மாதங்கள் மட்டும் யுத்தத்தை வழிநடத்திய இவர் ஒரு கொடூரமான தளபதி என்று கூறப்பட்டாலும் அவரால் யுத்த வெற்றிகளை […]

முற்றாகிய அதானியின் இஸ்ரேல் துறைமுக கொள்வனவு

முற்றாகிய அதானியின் இஸ்ரேல் துறைமுக கொள்வனவு

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் (Adani Group) இஸ்ரேல் துறைமுக கொள்வனவு முற்று பெற்றுள்ளது. அதானி நிறுவனம் வட இஸ்ரேலில் உள்ள Haifa துறைமுகத்தின் ஒரு பகுதியை $1.15 பில்லியனுக்கு கொள்வனவு செய்துள்ளது. ஏறக்குறைய 99% பொருட்கள் கப்பல் மூலமே இஸ்ரேலுக்கு வருவதால், இஸ்ரேலில் இருந்து செல்வதால் அங்கு துறைமுகம் மிக பிரதானமானது. சீனாவின் Shanghai International Port Group (SIPG) ஏற்கனவே Haifa குடாவில் இன்னோர் துறைமுகத்தை இயக்கி வருகிறது. சீனாவின் $1.7 பில்லியன் பெறுமதியான துறைமுகம் […]

1 71 72 73 74 75 339