அமெரிக்காவின் 29 மாநிலங்களில் உள்ள சுமார் 65 மில்லியன் மக்கள் அங்கு நிலவும் கடும் குளிர் காலநிலையில் அகப்பட்டுள்ளனர். இந்த கடுங்குளிர் மேற்கே கலிபோர்னியா மாநிலம் முதல் கிழக்கே நியூ யார்க் வரை தாக்கவுள்ளது. இதன் எச்சங்கள் Toronto, Ottawa போன்ற கனடாவின் கிழக்கு பகுதிகளையும் தாக்கும். Minneapolis பகுதி புதன்கிழமை மட்டும் சுமார் 20 அங்குல (51 cm) snow வை பெறும் என்றும் மொத்தத்தில் 24 அங்குல snow வை பெறும் என்றும் கூறப்படுகிறது. […]
ரஷ்யா இறுதியாக நடைமுறையில் இருந்த அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக இன்று செவ்வாய் ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். New START இந்த ஒப்பந்தமே அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடைமுறையில் இருந்த இறுதி அணுவாயுத குறைப்பு இணக்கமாகும். மேற்படி இணக்கம் இருதரப்பும் எவ்வளவு மற்றும் எவ்வகை அணு ஆயுதங்களை கொண்டிருக்கலாம் என்று விதிமுறை செய்கிறது. இன்றில் இருந்து அந்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்காது. இந்த இணக்கம் 2021ம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகளுக்கு, 2026ம் ஆண்டு வரை, […]
அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் காலை யூகிரேனுக்கு முன்னறிவிப்பு இன்றிய திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரஷ்யா யூகிரேனை ஆக்கிரமித்த பின் இதுவே பைடெனின் யூகிரேனுக்கான முதல் பயணம். பைடெனும், பைடெனுக்கு முன் பல மேற்கு நாடுகளின் தலைவர்களும் யூகிரேன் சென்று படமெடுத்து இருந்தாலும் இந்த பயணங்களால் அங்கு இடம்பெறும் யுத்தத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. ரஷ்யா தான் விரும்பிய வெற்றியை அடையவுமில்லை, யூகிரேன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை விரும்பிய அளவு தடுக்கவுமில்லை. இந்த யுத்தம் ஆரம்பித்து […]
இந்த மாதம் 6ம் திகதி துருக்கியிலும், சிரியாவிலும் இடம்பெற்ற 7.8 மற்றும் 7.5 அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படுத்திய நில பிளவுகளின் மொத்த நீளம் ஒப்பிட்ட அளவில் சுமார் இலங்கை அளவு நீளமானது என்று California Institute of Technology அறிந்துள்ளது. சுமார் 300 km நீளம் கொண்ட இந்த இரண்டு பிளவுகளிலும் ஒரு பக்க நிலம் ஒரு திசையில் நகர, அடுத்த பக்கம் எதிர் திசையில் நகர்ந்துள்ளது. சில இடங்களை ஒரு பக்கம் அடுத்த பக்கத்தில் […]
உலக செல்வந்தர்களின் ஒருவரான ஜோர்ஜ் சரோஸ் (George Soros) மீதும் இந்திய பிரதமர் மோதியின் பாரதீய ஜனதா கட்சி பாய்கிறது. அதானி விசயம் தொடர்பாக சரோஸ் கருத்து கூறியமையே பா. ஜ. பாச்சலுக்கு காரணம். இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சரோசை “வயதான, செல்வந்த, கருத்துக்களை கொண்ட, ஆபத்தான” (old, rich, opinionated, dangerous) நபர் என்று சாடியுள்ளார். வியாழக்கிழமை சரோஸ் தனது உரை ஒன்றில் “இந்தியா ஒரு சனநாயக நாடு, ஆனால் மோதி ஒரு […]
அடுத்த கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபை (UN Security Council) இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனர் நிலங்களில் புதிய யூத குடியிருப்புகளை அமைக்க முனைவதை தடுக்கும் நோக்கில் தீர்மானம் ஒன்றை வாக்கெடுப்புக்கு விட உள்ளது. இதை veto வாக்கு கொண்ட அமெரிக்கா தடுக்குமா என்பது இதுவரை அறியப்படவில்லை. தற்போது இஸ்ரேலில் ஆட்சியில் உள்ள அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு பலஸ்தீன காழ்ப்பு கொண்ட இனவிரோத கூட்டணியாகும். இந்த அரசு மேலும் 10,000 சட்டவிரோத யூத குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ள […]
ரஷ்யாவின் Northern Fleet என்ற வடபகுதி படைப்பிரிவு மீண்டும் அணு ஆயுதங்களுடன் வலம் வர ஆரம்பித்து உள்ளன என்கிறது நோர்வேயின் புலனாய்வு அறிக்கை ஒன்று. அது உண்மையெனில் cold-war காலத்தின் பின் ரஷ்யாவின் வட பிரிவு இவ்வாறு அணு ஆயுதங்களுடன் வலம் வருவது இதுவே முதல் தடவை. இவை சிறிய அளவிலான tactical அணு ஆயுதங்கள் ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த அணு ஆயுதங்கள் ரஷ்யாவின் நீர்மூழ்கிகள், கப்பல்கள் ஆகியவற்றில் உள்ளன என்று புலானய்வு கூறுகிறது. […]
நிக்கி ஹேலி (Nikki Haley) என்ற இந்திய வம்சத்துக்கு அமெரிக்காவில் பிறந்த பெண் 2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். முதலில் இவர் உட்கட்சி போட்டியில் முதலாவதாக வெற்றி அடைந்தாலே பொது தேர்தலில் பங்கு கொள்வார். 1972ம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற புஞ்சாப் பெற்றாருக்கு பிறந்த இவருக்கு அப்போதைய பெயர் Nimrata Nikki Randhawa. 1996ம் ஆண்டு Michael Haley என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 பிள்ளைகள் உண்டு. முன்னர் இவர் South […]
பிபிசி செய்தி சேவைக்கு சொந்தமான டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்கள் இந்திய அதிகாரிகளால் தீடீரென தேடுதலுக்கு உள்ளாகின. இந்த தேடுதலுக்கு காரணம் அண்மையில் பிபிசி வெளியிட்ட மோதி தொடர்பான ஆவணமே என்றாலும், வருமான வரி திணைக்களமே தேடுதலை செய்துள்ளது. 2002ம் ஆண்டு மோதி குஜராத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான இந்த ஆவணப்படம் பிரித்தானியாவில் மட்டுமே வெளிவந்திருந்தாலும், இந்தியர் இதை இணையம் மூலம் பார்த்தால் மோதி கட்சி விசனம் கொண்டுள்ளது. ஆவேசம் கொண்ட […]
அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் மேலால் அதிக அளவு பறக்கும் பொருட்கள் செல்வதாலும், அவை தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பும், வெள்ளை மாளிகையும் பெருமளவில் மௌனமாக இருப்பதாலும் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அமெரிக்க செய்தி சேவைகளும் இந்த விசயம் தொடர்பாக இருட்டிலேயே உள்ளன. ஞாயிறு மேலும் ஒரு பறக்கும் பொருள் ஐம்பெரும் வாவிகளில் ஒன்றான Lake Huron மேலாக செல்லும் வேளையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. பலூனை மட்டும் சீனாவுக்கு உரியது என்று கூறிய வெள்ளை மாளிகை ஏனைய பறக்கும் பொட்டுகளை […]