இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் 41 பேரை கனடாவுக்கு மீண்டும் திரும்ப இந்தியா கட்டளை இட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த 41 பேரும் அக்டோபர் 10ம் திகதிக்கு முன் வெளியேற வேண்டும் என்றும், தவறின் அவர்களின் diplomatic immunity பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 62 கனேடிய தூதரக ஊழியர்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 41 பேர் வெளியேறினால் 21 பேரே தொடர்ந்தும் இந்தியாவில் பணியாற்றுவார். அத்தொகை சாதாரண பணிகளுக்கு போதுமானது அல்ல. The Financial Times […]
யுக்கிறேனை ரஷ்யாவுடன் மோத முன்னின்று ஆதரித்த மேற்கின் ஆதரவு மெல்ல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்நிலை மேலும் உக்கிரம் ஆகினால் யுக்கிறேன் யுத்தத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படலாம். இதுவரை அமெரிக்காவே யுக்கிறேனுக்கு முதலாவது பெரிய அளவில் உதவிகளை செய்து வந்தது. ஆயுதம், பணம், இராணுவ பயிற்சி, உளவு ஆகிய பல முனைகளில் அமெரிக்கா உதவியது. ஆனால் ஞாயிறு இரவு முதல் அந்த உதவி கேள்விக்குறி ஆகியுள்ளது. சில அமெரிக்க அரசியல்வாதிகள், குறிப்பாக Republican கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் யுக்கிறேனுக்கான உதவியை நிறுத்த […]
அக்டோபர் 1ம் திகதி முதல் மணித்தியாலத்துக்கு 350 km வேகத்தில் பயணிக்கக்கூடிய (350 km/h) ரயில் ஒன்று சேவைக்கு வந்துள்ளது. தற்போது தென் ஆசியாவில் இதுவே அதிவேக ரயில் சேவையாகும். இந்த ரயில் தலைநகர் Jakarta வுக்கும் Bandung என்ற இன்னோர் நகருக்கும் இடையில் சேவை செய்யும். தற்போது சாதாரண ரயில் மூலம் இந்த தூரத்தை கடக்க 3 மணித்தியாலங்களுக்கு அதிகம் எடுக்கும். ஆனால் புதிய ரயில் 30 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தையே எடுக்கும். சாதாரண ரயில் இந்த தூரத்துக்கு சுமார் […]
மாலைதீவில் சனிக்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் மீண்டும் சீன ஆதரவு கொண்ட சனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீன சார்பு Mohamed Muizzu 54.06% வாக்குகளை பெற்று தேர்தலில் வென்றுள்ளார். தற்போதைய இந்திய சார்பு சனாதிபதி Ibrahim Mohamed Solih தேர்தலில் வெற்றி பெற்ற Muizzu வை வாழ்த்தியுள்ளார். புதிய சனாதிபதி வரும் நவம்பர் 7ம் திகதி முதல் பதவியை கையேற்பார். அதன் பின் மாலைதீவு மீண்டும் சீனாவின் ஆளுமையில் இருக்கும். தற்போது அங்கு நிலைகொண்டுள்ள இந்திய படைகள் வெளியேற்றப்படலாம். 2018ம் ஆண்டுவரை மாலைதீவில் ஆட்சி செய்த சீன […]
சுமார் 100,000 ஆர்மீனியர் அஜர்பைஜானை விட்டு வெளியேறி அடுத்து உள்ள ஆர்மீனியாவை அடைந்துள்ளனர். இந்த நகர்வு சுமார் 30 ஆண்டுகளாக நிலவி வந்த Nagorno-Karabakh முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. Nagorno-Karabakh மலை பகுதி முழுமையாக அஜர்பைஜான் (Azerbaijan) உள்ளே உள்ளது. உலக சட்டப்படியும் இப்பகுதி இஸ்லாமிய அஜர்பைஜானுக்கு உரியது. ஆனால் இங்கு வாழ்ந்த சுமார் 120,000 கிறீஸ்தவ ஆர்மினியர் இதை தமது நிலம் என்றனர். சோவியத் உடைந்த பின் இப்பகுதியில் வாழ்ந்த ஆர்மீனிய கிறீஸ்தவர் தனிநாடு கேட்டு போராடினர். இப்பகுதியை ஒரு சிறு ஒடுங்கிய நிலப்பரப்பு […]
அமெரிக்க மத்திய அரசு இன்று சனிக்கிழமை இரவு மீண்டும் முடங்கும் நிலையில் உள்ளது. மத்திய அரசுக்கான வரவு-செலவு திட்டம் எற்றுக்கொள்ளப்படாமையே முடங்கலுக்கு காரணம். நீண்ட காலமாக அமெரிக்க அரசின் மொத்த செலவுகள் அதன் மொத்த வரவுகளிலும் அதிகமாக உள்ளன. துண்டு விழும் தொகையை எவ்வாறு பெறுவது என்பதே இழுபறிக்கு காரணம். பொதுவாக Democratic கட்சி அரசு மேலதிக கடன் பெற்று தொடர்ந்தும் செலவுகளை செய்ய முனையும். ஆனால் Republican கட்சி செலவுகளை குறைத்து கடன் அதிகரிப்பை தடுக்க முனையும். அமெரிக்காவில் அரசு எவ்வளவு […]
சவுதி அமெரிக்காவுடன் நேட்டோ (NATO) வகையிலான பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்ய விரும்புகிறது. அவ்வகை பாதுகாப்பு உடன்படிக்கை சாத்தியம் இல்லை என்றாலும் அமெரிக்காவுடன் இடைநிலை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்வதாயினும், சவுதி பலஸ்தீனர் விசயத்தை கைவிட்டு இஸ்ரேலுடன் முழு உறவை நிலைநாட்ட சவுதியை அழுத்துகிறது பைடென் அரசு என்று கூறப்படுகிறது. 2022ம் ஆண்டு பைடென் சவுதி சென்ற வேளையில் சவுதி அரசர் சல்மான் பைடெனிடம் NATO வகையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கேட்டிருந்தார். அதாவது நேட்டோவின் Article 5 இல் உள்ளது போல் சவுதி தாக்கப்படால் அது அமெரிக்கா […]
கடந்த ஜூன் 18ம் திகதி சீக்கிய பிரிவினை வாதியான Hardeep Singh Nijjar கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கனடாவுக்கு Five Eyes நாடுகள் வழங்கிய உளவுகளின் அடிப்படையில் இந்த கொலையில் இந்தியாவின் கை இருப்பதாக கனடிய பிரதமர் ரூடோ இந்தியா மீது குற்றம் சுமத்தி இருந்தார். கனடா தம் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியதால் வெகுண்டு எழுந்தது மோதி தலைமையிலான இந்திய அரசு. கூடவே இந்திய ஊடகங்களும் கனடா மீது வெகுண்டு எழுந்து உள்ளன. இந்த நிலையில் இலங்கையின் Ali Sabry என்ற வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் உதவிக்கு […]
காவிரி நீர் பங்கீடு காரணமாக மீண்டும் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் மீண்டும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதனால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியை செய்ய அழைத்துள்ளன. பெங்களூரில் இன்று செவ்வாய்க்கிழமை மக்கள் பொது இடங்களில் கூடுவது போலீசாரால் தடை செய்யப்பட்டுள்ளது. வன்முறைகளை தடுக்க எடுக்கும் முன்கூட்டிய நடவடிக்கையே இது என்கிறது போலீஸ். Google, Walmart போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிய செய்ய கூறியுள்ளது. பெங்களூரில் […]
வளர்ந்து வரும் சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா பசிபிக் தீவுகள் எங்கும் தூதரகங்களை நிறுவி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இந்த தீவுகளில் தனது ஆதிக்கத்தை வர்க்க முனைகிறது அமெரிக்கா. Niue என்ற நாடு 2,000 க்கும் குறைவான மக்களையே கொண்டது. அதற்கும் ஒரு தூதரகம் அமைக்கவுள்ளது அமெரிக்கா. சுமார் 20,000 மக்களை கொண்ட Cooks Islands என்ற நாடும் அமெரிக்க தூதரகத்தை பெறவுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் அமெரிக்க சனாதிபதி பைடென் US-Pacific Islands Forum […]