Mohammed Deif என்ற ஹமாஸ் உறுப்பினரே இஸ்ரேல் மீது வரலாறு காணாத திடீர் தாக்குதலை திட்டமிட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு, பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவரே ஹமாஸின் ஆயுத பிரிவான அல் ஹஸாம் (Al Qassam Brigades) அணியின் தலைவர். 2021ம் ஆண்டு மே மாதம் ஜெருசலேத்தில் உள்ள பலஸ்தீனரின் அல் அக்ஸா மசூதி (Al Aqsa mosque) உள்ளே இஸ்ரேல் நுழைந்து ரமலான் தொழுகையில் இருந்தோரை தாக்கியதே ஹமாஸின் பெரும் தாக்குதலுக்கு ஆரம்பமாகியது. 1965ம் ஆண்டு […]
ஹமாஸ் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் செய்த தாக்குதல்களுக்கு பல வெளிநாட்டவரும் பலியாகி உள்ளனர். அவர்களின் தொகைகள் வருமாறு: தாய்லாந்து: 12 பேர் பலி, 11 பேர் பணயம் அமெரிக்கா: 11 பேர் பலி, மேலும் பலரை காணவில்லைநேபாளம்: 10 பேர் பலிஅர்ஜன்டீனா: 7 பேர் பலி, 15 பேரை காணவில்லை யுக்கிறேன்: 2 பேர் பலிபிரான்ஸ்: 2 பேர் பலி, 14 பேரை காணவில்லை ரஷ்யா: ஒருவர் பலி, 4 பேரை காணவில்லை பிரித்தானியா: ஒருவர் பலி, ஒருவரை காணவில்லை கனடா: ஒருவர் பலி, 3 பேரை காணவில்லை கம்போடியா: ஒருவர் பலிஜெர்மனி: பலர் […]
பலஸ்தீனர் ஆயுத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த திடீர் தாக்குதலுக்கு பலியான இஸ்ரேலியர் தொகை தற்போது 700 ஆக அதிகரித்துள்ளது என்கிறது இஸ்ரேல் இராணுவம் (IDF). அத்துடன் சுமார் 2,000 இஸ்ரேலியர் காயமடைந்தும் உள்ளனர். காசா எல்லையோரம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் 250 க்கும் அதிகமான இஸ்ரேலியர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் மேற்கொள்ளும் பதில் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 413 பேர் காசாவில் பலியாகியும், 2,300 பேர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பும் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பல […]
சனிக்கிழமை ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த தாக்குதல் 50 ஆண்டு காலத்தில் இஸ்ரேல் மீது செய்யப்பட்ட மிக பெரிய தாக்குதலாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு மரணித்த யூதர் தொகை 300 என்றும் காயமடைந்தோர் தொகை 1,500 கூறப்படுகிறது. மேலும் பல யூதர்களும், இஸ்ரேல் படையினரும் ஹமாஸால் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் ஆக்கிரமித்து உள்ள யூத நகரங்களிலும், சிலர் காசா பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது ஒரு இஸ்ரேல் போலீஸ் நிலையத்தை ஹமாஸ் உறுப்பினர் கைப்பற்றி உள்ளனர். அதை இஸ்ரேல் படைகள் சூழ்ந்துள்ளன. […]
Gaza பகுதியை ஆளும் பலஸ்தீனர் ஆயுத குழுவான ஹமாஸ் (Hamas) இஸ்ரேலுள் இரகசியமாக நுழைந்து செய்த தாக்குதலுக்கு குறைந்தது 40 யூதர் பலியாகியும், 800 யூதர் காயமடைந்தும் உள்ளனர். ஹமாஸின் இந்த செயலால் தாம் யுத்தத்தில் உள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் நெட்யன்யாகு கூறியுள்ளார். ஹமாஸ் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் இஸ்ரேலுள் ஏவியுள்ளது. இஸ்ரேல் தாம் பதிலுக்கு 17 ஹமாஸ் நிலையங்களை தாக்கியுள்ளதாக கூறுகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள Ofakim என்ற நகரில் சில யூதர்களை ஹமாஸ் பணயம் வைத்துள்ளதாக Reshet 13 என்ற இஸ்ரேல் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களை விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. […]
முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்கு வருமுன் செய்த பரப்புரைகளில் ஒன்று “Build That Wall”. அதாவது ரம்ப் அமெரிக்க-Mexico எல்லை முழுவதும் எல்லை சுவர் கட்டி அகதிகள் அமெரிக்காவுள் நுழைவதை தடுக்க விரும்பினார். அக்காலத்தில் ரம்பின் திட்டத்தை நிராகரித்து பரப்புரை செய்திருந்தார் Democratic கட்சி சார்பில் போட்டியிட்ட பைடென். எல்லை சுவர் மனிதாபிமானம் அற்றது என்று கூறியிருந்தார். சனாதிபதி பதவியை வென்ற உடனேயும் பைடென் அமெரிக்க வரிப்பணத்தில் எல்லை சுவர் கட்ட முடியாது என்று ஒரு proclamation செய்திருந்தார். ஆனால் இன்று வியாழன் அகதிகள் நுழைவதை தடுக்க […]
சிங்கப்பூரில் ஒருவர் கார் போன்ற குடும்ப வாகனம் ஒன்றை பதிவு செய்ய தற்போது சுமார் U$106,000 தேவைப்படுகிறது. இந்த செலவு வாகனத்தை வீதியில் செலுத்த உரிமை கொள்வதற்கான செலவு மட்டுமே. மிக சிறிய நாடான சிங்கப்பூர் அங்கு வாகன நெரிசலை குறைக்க பாவனையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்துகிறது. வாகனம் ஒன்றை கொண்டிருக்கும் உரிமையை (COE, certificate of entitlement) சிலருக்கு மட்டுமே சீட்டிழுப்பு மூலம் வழங்குகிறது. ஒரு CEO 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். சிங்கப்பூரில் ஒருவர் […]
SAS என்று பொதுவாக அழைக்கப்படும் Scandinavian Airlines System Denmark-Norway-Sweden விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1946ம் ஆண்டு ஆரம்பித்த இந்த விமான சேவை பல காரணங்களால் அழிந்துள்ளது. தனது செலவுகளை கட்டுப்படுத்தாமை, கரோனா நோயின் பரவல், யுக்கிறேன் யுத்தத்தால் ரஷ்யா மேலால் பறந்து ஆசியாவை அடைய முடியாமை ஆகியன இதன் அழிவுக்கான சில காரணங்கள் ஆகும். 2020ம் ஆண்டில் இதனிடம் 160 விமானங்கள் வரை இருந்துள்ளன. 2018ம் ஆண்டில் இது 2,041 மில்லியன் krona இலாபம் அடைந்திருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு […]
ChatGPT புதியதொரு AI (Artificial Intelligence) தொழில்நுட்பம். இது ஆங்கிலம் போன்ற பிரதான மொழிகளில் ஓரளவு தரமான ஆக்கங்களை உருவாக்கினாலும், தமிழ் போன்ற சில மொழிகளில் அல்லல்படுகிறது. தமிழ் மொழியில் உள்ள சிக்கலான அங்கங்களும் நிலைமையை மேலும் குழப்பியடிக்கின்றன. பெயர் சொற்களில் உள்ள பால் அடையாளம் (வந்தான், வந்தாள், வந்தது), ஒருமை, பன்மை (வந்தார்கள், வந்தன) மட்டுமன்றி ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய உருபுகளும் கூடவே ChatGPT யை குழப்புகின்றன. அவரால், அவரோடு ஆகிய பாதங்களை ChatGPT இலகுவில் அறிய முடியாது உள்ளது. இப்படி […]
இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் 41 பேரை கனடாவுக்கு மீண்டும் திரும்ப இந்தியா கட்டளை இட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த 41 பேரும் அக்டோபர் 10ம் திகதிக்கு முன் வெளியேற வேண்டும் என்றும், தவறின் அவர்களின் diplomatic immunity பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 62 கனேடிய தூதரக ஊழியர்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 41 பேர் வெளியேறினால் 21 பேரே தொடர்ந்தும் இந்தியாவில் பணியாற்றுவார். அத்தொகை சாதாரண பணிகளுக்கு போதுமானது அல்ல. The Financial Times […]