முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் மீது மேலும் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் இருந்து இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக எடுத்து சென்றார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டாகும். மொத்தம் 75 ஆவணங்கள் ரம்பின் மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூரப்படுகிறது. அதில் 6 ஆவணங்கள் Top Secret என்றும் , 18 ஆவணங்கள் Secret என்றும், 3 ஆவணங்கள் Confidential என்றும் அடையாளம் இடப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களில் சிலதை Five Eyes என்று அழைக்கப்படும் அமெரிக்கா, […]
கியூபாவில் தனது இலத்திரனியல் உளவு நிலையம் ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக அமெரிக்காவின் The Wall Street Journal இன்று வியாழன் கூறியுள்ளது. சீனாவின் இந்த நிலையம் அமெரிக்காவை உளவு பார்க்க பயன்படலாம். அமெரிக்காவின் Tampa நகரில் உள்ள Central Command தலைமையகம், North Carolina மாநிலத்தில் உள்ள Fort Liberty போன்ற அமெரிக்க படைகளின் தளங்கள் கியூபாவில் இருந்து வெகு தூரத்தில் இல்லை. இவ்வகை உளவு பார்க்கும் நிலையம் ஈமெயில் பரிமாற்றம், செய்மதி தொடர்புகள், தொலைபேசி தொடர்புகள், […]
கனடிய காட்டுத்தீ புகை மண்டலம் அமெரிக்காவின் நியூ யார்க் (New York) நகர் வரை பரவி உள்ளது. இதனால் நியூ யார்க் நகர் கரும் புகை மண்டலத்தால் மூடப்பட்டு உள்ளது. கனடாவின் தலைநகர் ஓட்டாவாவும் (Ottawa) கரும் காட்டுத்தீ புகையில் அமிழ்ந்து உள்ளது. இந்த காட்டுத்தீ புகை நியூ யார்க் நகரின் வளியையும் பலமாக மாசடைய செய்துள்ளது. சிலர் தம்மை பாதுகாக்கும் நோக்கில் முக கவசங்களை அணிந்துள்ளனர். இங்கு வளி மாசு அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரித்து […]
யூக்கிறேனில் உள்ள நீப்புரோ என்ற ஆற்றை (Dnipro River) வழிமறித்து கட்டிய நீப்புரோ என்ற அணைக்கட்டு இன்று உடைந்துள்ளது. அதனால் Kakhovka என்ற அணைக்கட்டில் உள்ள நீர் பல இடங்களை வெள்ளத்தில் அமிழ்த்தும் நிலை தோன்றியுள்ளது. இந்த அணைக்கட்டை ரஷ்யா உடைத்து என்று யூக்கிறேனும், யூக்கிறேன் உடைத்து என்று ரஷ்யாவும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இப்பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுத்தியாகும். இந்த ஆறு ஆக்கிரமித்து உள்ள ரஷ்ய படைகளுக்கும், யூக்கிறேன் படைகளுக்கும் இடையேயான எல்லையாக தற்போது […]
இந்த ஆண்டுக்கான மன்சூன் (தென் மேற்கு பருவக்காற்று) சில தினங்கள் பிந்துகிறது என்று இந்திய வானிலை அவதானிப்பு நிலையமான India Meteorological Department (IMD) கூறுகிறது. அதனால் இலங்கைக்கு வரும் மழை முகில்களும் பிந்தலாம். அரேபிய கடலில் இருந்து மழை முகில்களை எடுத்துவரும் மன்சூன் ஜூன் மாதம் 4ம் திகதி அளவில் கேரளா கரைகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மேலும் சில தினங்களின் பின்னரே அம்முகில்கள் கேரளாவை அடையும் என்கிறது இந்திய IMD. இந்தியாவுக்கு தேவையான மழை […]
தற்போது ஜெர்மனியில் வாழும் இந்திய வம்ச 2 வயது பெண் பிள்ளையை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும்படி கேட்கிறது இந்தியா. Ariha Shah என்ற பிள்ளை தற்போது ஜெர்மனியின் Youth Welfare Office கையில் உள்ளது. அவளின் பெற்றார் இந்தியா திரும்பி உள்ளனர். பிள்ளையின் தகப்பனார் 2021 ஆண்டில் ஜெர்மனி சென்று பணியாற்றி இருந்தார். ஆக்காலத்தில் ஜெர்மனி சென்ற பிள்ளையின் பாட்டி செய்த தண்டிப்பு ஒன்றின்போது காயமுற்ற பிள்ளையை பெற்றார் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். அப்போதே பிள்ளை ஜெர்மன் […]
இந்தியாவின் ஒடிஷா மாநிலத்து Balasore மாவட்டத்தில் இன்று வெள்ளி மாலை இடம்பெற்ற ரயில் விபத்துக்கு குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளனர். இரண்டு பயணிகள் ரயில்களும் ஒரு பொருட்களை காவும் ரயிலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த 300 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு ரயில் கல்கத்தாவில் இருந்து சென்னை பயணிக்கும் Shalimar-சென்னை-Coromandel Express என்று கூறப்படுகிறது. தடம்புரண்ட ஒரு ரயில் மற்றைய ரயிலின் பாதைக்கு சென்று அந்த பாதையில் வந்த […]
இலங்கை மத்திய வங்கி வட்டியை 2.5% ஆல் குறைத்து உள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளது. மேற்படி வட்டி குறைப்பால் இதுவரை 15.5% ஆக இருந்த deposit வட்டி 13% ஆகவும், இதுவரை 16.5% ஆக இருந்த lending வட்டி 14% ஆகவும் குறைகின்றன. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு வட்டியை 9.5% ஆல் அதிகரித்து இருந்தது. வட்டி வீதம் குறைய […]
அமெரிக்காவில் ரம்ப் சனாதிபதியாக இருந்த காலத்தில் உதவி சனாதிபதியாக இருந்த பென்ஸ் (Mike Pence) 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். பென்ஸ் இந்த அறிவிப்பை ஜூன் மாதம் 7ம் திகதி தனது 64 ஆவது பிறந்த தினத்தில் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது. ரம்ப், பென்ஸ், DeSantis, Nikki Haley, Chris Christie, Vivek Ramaswamy, Doug Burgum, Tim Scott, Asa Hutchinson, Chris Sununu ஆகியோர் Republican கட்சிக்குள் முதலில் போட்டியிடுவர். அந்த […]
இலங்கை மலையக தமிழரின் உரிமை தொடர்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. Kithusara Group என்ற அமைப்பு மலையக தமிழரின் அவலத்துக்கு இலங்கையையோ அல்லது இந்தியாவையோ குறி வைக்காது பதிலுக்கு பிரித்தானியா மீது குறிவைத்துள்ளது. உண்மையில் பிரித்தானியாவே இந்திய தமிழரை இலங்கைக்கு அடிமைகளாக இழுத்து வந்தது. பின்னர் அவர்களை நடுவில் கைவிட்டு சென்றது. அதனால் பிரித்தானியாவை குற்றம் சாட்ட மலையக மக்களுக்கு உரிமை உண்டு. இந்த வழக்கை பிரித்தானிய நீதிமன்றில் தாக்கல் செய்தலும் சாத்தியம். பிரித்தானியாவில் […]