பிரித்தானிய மத்திய வங்கி வட்டி 5% ஆகிறது

பிரித்தானிய மத்திய வங்கி வட்டி 5% ஆகிறது

இன்று வியாழன் பிரித்தானிய மத்திய வங்கி (Bank of England) தனது வட்டியை 5% ஆக உயர்த்தி உள்ளது. அங்கு நிலவும் விலைவாசி வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு கடன் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அச்செயல் மாதாந்த வீட்டு கடன் கட்டுமானத்தை பாதிக்க, வீட்டு விலைகள் வீழ்ச்சி அடையும். 2008ம் ஆண்டுக்கு பின் தற்போதே அங்கு வட்டி வீதம் இந்த அளவு உயர்வாக உள்ளது. மே மாதம் பிரித்தானியாவில் விலைவாசி வீக்கம் (inflation) 8.7% […]

தொடர்ந்தும் தேடப்படும் Titanic உல்லாச பயணிகள்

தொடர்ந்தும் தேடப்படும் Titanic உல்லாச பயணிகள்

1912ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நியூ யார்க் சென்றபோது பனிப்பாறையில் மோதி நீருள் அமிழ்ந்த Titanic என்ற கப்பலை பார்வையிட சென்ற உல்லாச பயணிகளின் இருப்பிடம் இதுவரை அறியப்படவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது. OceanGate என்ற இந்த கலம் ஞாயிறு காணாமல் போயிருந்தது. இதில் 58 வயதான பிரித்தானிய billionaire Hamish Harding, 48 வயதான பாகிஸ்தான்/பிரித்தானிய billionaire Shahzada Dawood, அவரின் 19 வயது மகன் Suleman, 77 வயது பிரெஞ்சு Paul-Henri Nargeolet, […]

சீன சனாதிபதி சீ ஒரு சர்வாதிகாரி, என்கிறார் பைடென்

சீன சனாதிபதி சீ ஒரு சர்வாதிகாரி, என்கிறார் பைடென்

சீன சனாதிபதி ஒரு சர்வாதிகாரி என்று செவ்வாய் இரவு கலிபோர்னியாவில் இடம்பெற்ற நிதி திரட்டல் நிகழ்வு ஒன்றில் பைடென் கூறியுள்ளார். பைடெனின் இந்த கூற்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் திங்கள் அமெரிக்க-சீன உறவு மீண்டும் நலமாகிறது என்று கூறியபின் வந்துள்ளது. பைடென் தனது கூற்றில் சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதால் சீன சனாதிபதி சீ விசனம் கொண்டதாகவும், அது சர்வாதிகாரி போன்ற சீக்கு அவமானம் ஆகியதாகவும் பைடென் கூறியுள்ளார். பைடெனின் இந்த கூற்றுக்கு சீனா தரப்பில் […]

ஆக்கிரமித்த இடங்களில் இஸ்ரேல் மேலும் 4,560 வீடுகள்

ஆக்கிரமித்த இடங்களில் இஸ்ரேல் மேலும் 4,560 வீடுகள்

இஸ்ரேல் தாம் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனர் West Bank இடங்களில் மேலும் 4,560 வீடுகளை கட்டி யூதர்களுக்கு வழங்க உள்ளதாக ஞாயிரு அறிவித்துள்ளது. ரஷ்யா யுக்கிறேனை ஆக்கிரமித்த பின் ஊளையிடும் நேட்டோ உட்பட மேற்கு நாடுகள் வழமைபோல் இஸ்ரேல் செயலை கண்டுகொள்ளவில்லை. இந்த தீர்மானத்தால் தாம் deeply troubled என்று மட்டும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் யுக்கிறேன் விசயத்தில் அமெரிக்கா தம் deeply troubled என்று கூறிவிட்டு இருக்கவில்லை. இந்த புதிய திட்டம் ஏற்கனவே இஸ்ரேலால் சட்டவிரோதம் […]

அமெரிக்க Blinken  சீனாவில், எதிர்பார்ப்பு குறைவு

அமெரிக்க Blinken  சீனாவில், எதிர்பார்ப்பு குறைவு

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் (Secretary of State) Anthony Blinken தற்போது இரு தின பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பலத்த இழுத்தடிப்புகளின் பின் இடம்பெறும் இந்த பயணம் தொடர்பாக இருதரப்பும் இதுவரை குறைந்த எதிர்பார்புகளையே கொண்டுள்ளன. Blinken இந்த பயணத்தை பெப்ரவரி மாதம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் சீனாவின் பலூன் ஒன்று அமெரிக்கா மேலே பறந்ததால் Blinken பயணத்தை நிறுத்தி இருந்தார். அமெரிக்காவும், சீனாவும் பல முனைகளில் மோதி வருவதாலேயே இவர்களிடையே அமெரிக்க சனாதிபதி பைடென் பதவிக்கு […]

ஈரானுடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தை

ஈரானுடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தை

தனது பரம எதிரியான ஈரானுடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தைகளை செய்வதாக செய்திகள் கூறுகின்றன. பல ஆண்டு காலமாக அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் ஈரானுக்கு எதிராக நடைமுறை செய்த தடைகள் பலன் அளிக்காத நிலையிலேயே அமெரிக்கா இரகசிய பேச்சில் இறங்கி உள்ளது. அத்துடன் பல எதிரிகளை ஒரே நேரம் கையாள முடியாத நிலையில் சில எதிரிகளுடன் முறுகல் நிலையை தணிக்கவும் விரும்புகிறது அமெரிக்கா. சீனாவுக்கு அடுத்து தற்போது ரஷ்யாவுக்கு பலமாக உள்ள ஈரானை ரஷ்யாவில் இருந்து பிரிக்கும் நோக்கத்தையும் […]

சிட்னி-நியூ யார்க் 19 மணித்தியால விமான சேவை

சிட்னி-நியூ யார்க் 19 மணித்தியால விமான சேவை

அஸ்ரேலியாவின் Qantas Airlines சிட்னி (Sydney) முதல் அமெரிக்காவின் நியூ யார்க் வரையான 19 மணித்தியால விமான சேவையை 2025ம் ஆண்டில் ஆரம்பிக்க உள்ளது. அவ்வாறு சேவை இடம்பெறின் இதுவே உலகின் அதிகூடிய நேர விமான பயணமாகும். இதற்காக Qantas மொத்தம் 12 புதிய Airbus A350 வகை விமானங்களை வடிவமைத்து வருகின்றது. மொத்தம் 300 பயணிகளை காவக்கூடிய இந்த விமானம் 238 பயணிகளை மட்டுமே காவும். இதில் 6 first class ஆசனங்களும், 52 business […]

யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா

யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா

ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோவில் (UNESCO) மீண்டும் இணைய அமெரிக்கா விண்ணப்பித்துள்ளது. தாம் வெளியேறிய பின் சீனாவின் ஆளுமை யுனெஸ்கோவில் அதிகரித்தமையால் அதை தடுக்கவே அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைகிறது என்று கருதப்படுகிறது. அத்துடன் இதுவரை காலமும் செலுத்த தவறிய அங்கத்துவ கட்டணத்தை செலுத்தும் நோக்கில் யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா $600 மில்லியன் செலுத்தவுள்ளது. அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைவதை சீனா தடுக்காது என்று சீன அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்கா மீள இணைவதை 193 அங்கத்துவ நாடுகள் வாக்கெடுப்பு மூலம் […]

மோதியின் வாஷிங்டன் வரவுக்கு முன் BBC ஆவணப்படம்

மோதியின் வாஷிங்டன் வரவுக்கு முன் BBC ஆவணப்படம்

இந்திய பிரதமர் மோதி ஜூன் 22ம் திகதி அமெரிக்க காங்கிரசில் உரையாற்றவுள்ளார். வழமையாக அமெரிக்காவுக்கு மிக நெருங்கிய நாடுகளின் தலைவர்களுக்கே இந்த அழைப்பு விடப்படும். மோதியின் வருகைக்கு முன் Human Rights Watch, Amnesty International ஆகிய இரண்டு பிரதான மனித உரிமைகள் அமைப்புகளும் BBC தயாரித்த “India: the Modi question” என்ற ஆவணப்படத்தை வாஷிங்டனில் திரையிடவுள்ளன. இந்த ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதை அங்கு இணையங்களில் ஒளிபரப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் […]

பலாலி-சென்னை விமான சேவையை தினசரியாக்க வேண்டுகள்

பலாலி-சென்னை விமான சேவையை தினசரியாக்க வேண்டுகள்

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில் கிழமைக்கு 4 தினங்கள் இடம்பெறும் விமான சேவையை தினசரி சேவையாக்க இலங்கை அரசு கேட்டுள்ளது. அத்துடன் ரத்மலானை (Ratmalana), மாத்தறை (Mattala) ஆகிய விமான நிலையங்களுக்கும் Alliance Air சேவையை ஆரம்பிக்க இலங்கை அரசு கேட்டுள்ளது. சென்னையில் இருந்து கொழும்புக்கு வரும் விமானத்தை பலாலியில் தரித்து செல்ல விடப்படுமா என்பது தெளிவாக கூறப்படவில்லை. சென்னைக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்கனவே பல விமான சேவைகள் உள்ளன. இலங்கையின் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால […]

1 58 59 60 61 62 339