திங்களும், செவ்வாயும் West Bank பகுதியில் உள்ள Jenin என்ற பலஸ்தீனர் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் செய்த பெரும் தாக்குதல்களுக்கு 10 பேர் பலியாகியும், பலர் காயமடைந்து உள்ளனர். பலியானோரில் 3 சிறுவர்களும் அடங்குவர். தாக்குதல்கள் இடம்பெறும் இடத்துக்கு பலஸ்தீனர்களின் அம்புலன்ஸ் செல்லாது தடுக்க இஸ்ரேல் இராணுவம் வீதிகளை உடைத்து இருந்தது. இந்த முகாம் பகுதிக்கு மின் இணைப்பு, நீர் இணைப்பு ஆகியவற்றையும் இஸ்ரேல் இராணுவம் தடை செய்திருந்தது. வழமைபோல் ஐ.நாவின் WHO உட்பட MSF, […]
தாய்லாந்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யானையான முத்து ராஜா மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முத்து ராஜா ஞாயிரு தாய்லாந்து சென்றுள்ளது. தற்போது 19 வயதுடைய முத்து ராஜா சுமார் $540,000 செலவில் வர்த்தக விமானம் ஒன்றில் எடுத்து செல்லப்படுள்ளது. இதை எடுத்து செல்ல 4 தாய்லாந்து யானை பராமரிப்பாளரும் இலங்கை வந்திருந்தனர். புத்த கோவில் ஒன்றில் இருந்த இந்த யானையை இலங்கையில் துன்புறுத்தியதாக தாய்லாந்து கூறுகிறது. இலங்கை பிரதமர் தாய்லாந்து அரசரிடம் மன்னிப்பு கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த […]
ஆபிரிக்க நாட்டு 17 வயது இளைஞன் ஒருவன் பிரெஞ்சு போலீசால் சுட்டு கொலை செய்த பின் 3 தினங்களாக பிரான்சின் பல பகுதிகள் வன்முறையில் மூழ்கி உள்ளன. செவ்வாய்க்கிழமை 17 வயது Nahel என்ற அல்ஜீரிய/மொராக்கான் Nanterre என்ற பரிசின் புறநகர் ஒன்றில் வாகன விதிமுறைகள் காரணமாக இரண்டு பொலிஸாரால் நிறுத்தப்பட்டான் அதில் ஒரு போலீஸ் அவசியம் எதுவும் இன்றி Nahel ஐ சுட்டு கொன்றார். தற்போது வன்முறைகள் பாரிஸ் நகர் மட்டுமன்றி, Marseille, Lyon, Toulouse, […]
தான் பல்கலைக்கழகம் சென்று படிக்கவேண்டும் என்ற அவா காரணமாக தற்போது வயது 56 கொண்ட Liang Shi, மொத்தம் 27 தடவைகள் சீனாவின் Gaokao என்ற பல்கலைக்கழக நுழைவுக்கான தேசிய பரீட்சையை எடுத்துள்ளார். ஆனால் அவர் எந்த ஒரு தடவையும் நுழைவுக்கு தேவையான புள்ளிகளை பெறவில்லை. இவர் 1983ம் ஆண்டு, தனது 16ம் வயதில், முதல் தடவை Gaokao பரீட்சைக்கு சென்றுள்ளார். அம்முறை பல்கலைக்கழக நுழைவுக்கு தேவையான புள்ளிகள் பெறாத இவர் 1992ம் ஆண்டு வரை Gaokao […]
2024ம் ஆண்டு அமெரிக்காவில் சனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அதில் Republican கட்சி சார்பில் போட்டியிட முனைவோரில் இந்திய பெற்றாருக்கு அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசுவாமியும் ஒருவர். ஆனால் ராமசுவாமியின் வெளியிட்ட கூற்றுகள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி உள்ளது The New York Times பத்திரிகை. ராமசுவாமியிடம் தற்போது சுமார் $200 மில்லியன் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதை அவர் எவ்வாறு பெற்றார் என்பதை The New York Times விபரிக்கின்றது. ராமசுவாமி தன்னை ஒரு விஞ்ஞானி […]
அமெரிக்காவின் Texas மாநிலம் தற்போது கடும் வெப்பநிலை தாக்கத்தில் உள்ளது. அங்கு சில இடங்களில் 48.3 C (119 F) வெப்பநிலை பதிவாகி உள்ளது. குறைந்தது மேலும் ஒரு கிழமைக்கு அங்கு வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த கிழமை மட்டும் 90 இடங்களில் முன்னைய அதிகூடிய வெப்பநிலை பதிவுகள் முறியடிக்கப்பட்டு உள்ளன. Rio Grande ஆற்று பகுதியில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 48.3 C (119 F) ஆக இருந்துள்ளது. வெப்பநிலை […]
அண்மையில் இந்திய பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார். பைடென் அரசு மோதிக்கு பெரும் வரவேற்பு செய்திருந்தது. மோதி காங்கிரசிலும் உரையாற்றி இருந்தார். ஆனால் மோதி பயணத்துக்கு சிறிது முன் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஒபாமா கூறிய கருத்து இந்தியாவில் பலத்த ஆவேசத்தை தோற்றியுள்ளது. ஒபாமா CNN என்ற அமெரிக்கா தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்முகம் ஒன்றில் இந்தியா இஸ்லாமியர் உட்பட இந்திய சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்றும் தவறின் நாடு இழுபடும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் பைடென் […]
ரஷ்ய சனாதிபதி பூட்டினுக்கு எதிராக கிளிர்ச்சி செய்த Wagner Group என்ற ரஷ்ய தனியார் இராணுவத்தின் தலைவர் Yevgeny Prigozhin கிளர்ச்சியை கைவிட்டு சனிக்கிழமை அண்டை நாடான பெலரூஸ் (Belarus) சென்றுள்ளார். பெலரூஸ் பூட்டினின் நட்பு நாடு ஒன்று. பெலரூஸ் சென்ற Wagner குழுவின் தலைவர் தனது படைகளிடம் கிளர்ச்சியை நிறுத்துமாறும் கூறியுள்ளார். Wagner குழு தலைவரான Yevgeny Prigozhin மீதான குற்றச்சாட்டுக்களையும் ரஷ்யா கைவிட்டு உள்ளது என்று கூறியுள்ளது. Wagner படைகளை ரஷ்ய படைகளுடன் இணையுமாறு […]
ரஷ்யாவில் இயங்கும் Wagner Group என்ற தனியார் இராணுவம் இன்று ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது. இதுவரை ரஷ்யா சார்பில் யுகிரேனில் போராடிய இந்த தனியார் இராணுவத்துக்கும் பூட்டினுக்கும் இடையே தற்போது முறுகல் நிலை தோன்றியது. அந்த தனியார் இராணுவம் மாஸ்கோ நோக்கி நகர்கிறது. தனியார் இராணுவத்தின் கிளர்ச்சியை அடக்க ரஷ்ய அரச படைகளுக்கு உத்தரவு விடுத்துள்ளதாக பூட்டின் கூறியுள்ளார். பூட்டினுக்கு உதவ செச்சென் (Chechen) படைகளும் முன்வந்துள்ளன. Wagner Group என்ற இந்த தனியார் இராணுவத்தை […]
2024ம் ஆண்டு இந்தியாவில் பொது தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிட 17 காட்சிகள் இன்று வெள்ளி பீகார் மாநிலத்தில் சந்தித்து இணங்கி உள்ளன. இவற்றுள் பல மாநில அளவில் மட்டும் பலம் கொண்ட காட்சிகள். ஆனாலும் இந்த கூட்டணியுள் உள்ள கட்சிகள் சில தொடர்ந்தும் தம்முள் முரண்படுகின்றன. காங்கிரஸ் கட்சியும், Aam Aadmi கட்சியும் (AAP) தம்முள் பெரிய அளவில் முரண்படும் கட்சிகள். காங்கிரஸ், Aam Aadmi கட்சி, தி.மு.க., […]