பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்திருக்கும் கருவுற்றுள்ள தாய் பிறக்க உள்ள தனது குழந்தைக்கு பிரித்தானிய குடியுரிமை கிடைக்க 10,000 பவுண்ட் வரையில் பணம் செலுத்தி பொய் பிரித்தானிய தந்தை பெறுகின்றனர். இதை தடுக்க முடியாது அதிகாரிகள் திண்டாடுகின்றனர். பிரித்தானிய சட்டப்படி அங்கு சட்டவிரோதமாக உள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தையின் தந்தை ஒரு பிரித்தானிய குடியினர் என்றால் பிறக்கும் குழந்தையும் பிறப்பிலேயே பிரித்தானிய குடியுரிமை பெறுகிறது. அத்துடன் சட்டவிரோதமாக அங்குள்ள தாய்க்கும் வதிவிட உரிமை கிடைக்கிறது. அந்த தாய் பின்னர் […]
மேற்கு நாடுகள் உலக அளவில் கொண்டிருக்கும் கொள்கைகளை பிற நாடுகள் கேள்விக்கு உள்ளாக்கவில்லை, பதிலாக மேற்கு நாடுகள் நடுநிலைமையுடனா அந்த கொள்கைகளை நடைமுறை செய்கின்றன என்றே கேள்வி எழுப்புகின்றன என்று ஜெர்மனியின் அதிபர் Chancellor Olaf Scholz இன்று திங்கள் கூறியுள்ளார். குறிப்பாக இந்தியா, வியட்நாம், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் யூக்கிறேன் விசயத்தில் மேற்கு நாடுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளை, எடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய நாடுகளில் செய்வது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர் என்கிறார் ஜெர்மனியின் அதிபர். […]
இன்று ஞாயிறு தாய்லாந்தில் இன்னுமோர் தேர்தல் இடம்பெற்றுள்ளது. வழமைபோல் இம்முறையும் இராணுவ சார்பு கட்சி தோல்வியுற, சாதாரண கட்சி பெரும் வெற்றியை அடையும் என கனிக்காடுகிறது. ஆனால் தோல்வியுறும் இராணுவம் வழமைபோல் மீண்டும் தேர்தல் முடிவை புறக்கணித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா என்பதை வரும் நாட்கள் கூறும். முன்னைய தேர்தல்களில் இராணுவம் வெற்றி பெறும் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்து, வெற்றிபெறும் கட்சியையும் தடையும் செய்திருந்தது. 2006ம் ஆண்டு இராணுவத்துக்கு எதிராக போட்டியிட்டு வென்று இருந்த Thaksin Shinawatra […]
அண்மைக்காலங்களில் பலத்த தோல்விகளை அடைந்து வந்த காங்கிரஸ் கட்சி இந்தியாவின் கர்நாடகா மாநில தேர்தலில் இம்முறை பெரு வெற்றியை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பா.ஜ. ஆளும் கர்நாடகாவில் புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் சுமார் 136 ஆசனங்களையும், பா.ஜ. 64 ஆசனங்களையும் வெல்லக்கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன. அங்கு மொத்தம் 224 ஆசனங்கள் உள்ளன. வாக்கு எண்ணல் சனிக்கிழமை இடம்பெறுகிறது. இங்கு தாம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோதி 10 தினங்கள் வரை […]
YouTube, Facebook எங்கும் பெருகி வருவது பொய்யான வீடியோக்களும், தகவல்களும். பலர் திரைப்படம் தயாரிப்பது போல் வியக்க வைக்கும் வீடியோக்களை தயாரித்து அவற்றை இயற்கையில் இடம்பெற்ற சம்பவம் என்று பெரும் தொகை மக்களை பார்கவைத்து பெரும் பணமும், புகழும் அடைய முனைகின்றனர். அமெரிக்க விமானியாக 29 வயதுடைய Trevor Jacob என்பவர் தனது சிறிய விமானத்தை YouTube வீடியோ ஒன்றுக்காக திட்டமிட்டு நிலத்தில் மோதவிட்டு தற்போது அதிகாரிகளிடம் அகப்படுக்கொண்டார். இந்த மோதல் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் […]
செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை, வயது 70, உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று வியாழன் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் National Accountability Bureau செய்த இந்த கைது சட்டத்திற்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதேவேளை இம்ரானின் PTI (Pakistan Tehreek-e-Insaf) கட்சி தலைவர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இம்ரான் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறவும் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. உயர் […]
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென கைது செய்யப்பட்ட பின் பாகிஸ்தானின் பல பாகங்களில் வன்முறைகள் தோன்றியுள்ளன. இம்ரான் ஆதரவாளர் வீதிகளை மறித்து, இராணுவ அதிகாரிகளின் வீடுகளை எரித்து போராடுகின்றனர். பாகிஸ்தானின் சுதந்திர வரலாற்றில் இதுவரை 7 பிரதமர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின் சுமார் அரைப்பங்கு காலம் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியில் இருந்தது. ஒருதொகை வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்ற இம்ரானை வேறு சில குற்றங்களை சாட்டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இம்ரானை […]
Toronto நகரில் நிலைகொண்டிருந்த சீனா தூதரக அதிகாரி (diplomat) ஒருவரை கனடா வெளியேற்றியதன் பின் சீனா ஷாங்காய் (Shanghai) நகரில் நிலைகொண்டிருந்த கனடிய தூதரக அதிகாரி ஒருவரை இன்று வெளியேற அறிவித்து உள்ளது. Zhao Wei என்ற சீன அதிகாரியையே கனடா நேற்று திங்கள் வெளியேற்றி இருந்தது. இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினரான Michael Chong என்பவரை மறைமுகமாக மிரட்டியதாக கனடா கூறுகிறது. Chong சீனாவின் Uighur முஸ்லீம் விசயத்தில் சீனாவை குற்றம் கூறுபவர். இன்று சீனா […]
தற்போது வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமான சூறாவளி மோக்கா மேற்கே இலங்கை நோக்கி வராது வடகிழக்கே பங்களாதேசம், பர்மா நோக்கி செல்லலாம் என்று வானிலை அவதான நிலையங்கள் கணிக்கின்றன. நாளை 10ம் திகதி சூறாவளியாக உக்கிரம் அடையும் மோக்கா 12ம் திகதியளவில் பங்களாதேச, பர்மா கரையில் தரையை அடையும் என்று கூறுகிறது இந்திய வானிலை அவதான நிலையம். கப்பல் மற்றும் மீன்பிடி வள்ளங்களுக்கும் இப்பகுதியை தவிர்க்க கூறப்பட்டுள்ளது. தற்போது காற்று திசைமாறும் காலம் ஆதலால் மோக்கா […]
ஸ்பெயின் தனது Golden Visa திட்டத்தை விரைவில் கைவிடலாம் என்று கூறப்படுகிறது. 2013ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இந்த திட்டத்தின்படி 500,000 யூரோ ($551,650) பெறுமதிக்கு ஸ்பெயினில் வீடு கொள்வனவு செய்பவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினருக்கும் 3 ஆண்டுகள் ஸ்பெயினில் வாழும் உரிமை கொண்ட (residency visa) விசா வழங்கப்பட்டது. இந்த Golden Visa திட்டம் வீடுகளின் விலையை உயர்த்த, உள்ளூர் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாது அவதிப்பட்டனர். அதனாலேயே இந்த திட்டம் கைவிடப்படுகிறது […]