சீன நவீன தொழிநுட்பத்தில் முதலிட அமெரிக்கா தடை

சீன நவீன தொழிநுட்பத்தில் முதலிட அமெரிக்கா தடை

சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நவீன தொழிநுட்ப நிறுவனங்களில் முதலிட அமெரிக்காவின் பைடென் அரசு தடை விதிக்க அறிவித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றாலும், அதுவரை மக்களின், நிறுவனங்களின் கருத்துக்களை பைடென் அரசு உள்வாங்கும். Semiconductors மற்றும் microelectronics, quantum தொழில்நுட்பம், artificial intelligence தொழில்நுட்பம் ஆகிய 3 துறைகளே இந்த தடைக்குள் அடங்கும். அத்துடன் புதிய முதலீடுகளுக்கு மட்டுமே இந்த தடை நடைமுறை செய்யப்படும், பழைய முதலீடுகள் கண்காணிக்கப்படும். இந்த அறிவிப்பால் […]

​ரஷ்யாவை விரட்டுவதில் யூக்கிறேன் வெற்றியில்லை

​ரஷ்யாவை விரட்டுவதில் யூக்கிறேன் வெற்றியில்லை

​தமது நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகளை விரட்டி அடிக்கும் யூக்கிரேனின் இராணுவ முயற்சி குறிப்பிடக்கூடிய முன்னகர்வு எதையும் அடையவில்லை என்று மேற்கு நாடுகள் அறிகின்றன. அமெரிக்கா உட்பட பல நேட்டோ நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களுடன் யூக்கிறேன் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் ரஷ்ய படைகளை விரட்ட முனைந்தாலும் ரஷ்ய படைகளின் இராணுவ அரண்களை யூக்கிறேன் ஊடறுக்க முடியாது தவிக்கின்றன என்று மேற்கு நாடுகள் அறிகின்றன. ரஷ்யா பல தரப்பு அரண்களை அமைத்துள்ளது. மிக அதிக […]

அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி இலஞ்சம் பெற்றாரா?

அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி இலஞ்சம் பெற்றாரா?

அமெரிக்காவின் உயர்நீதிமன்ற (Supreme Court) நீதிபதி Clarence Thomas இலஞ்சம் பெற்றாரா என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க அரசில் வெள்ளைமாளிகை, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்கும் அடுத்து மூன்றாவதாக இயங்குவது உயர்நீதிமன்றம். இது தற்போது 9 நீதிபதிகளை கொண்டது. 1999ம் ஆண்டு Thomas பொதுவாக RV எனப்படும் உல்லாச பயண பஸ் (Recreational Vehicle) ஒன்றை $267,230 பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தார். Prevost Le Mirage XL Marathon என்ற 40 அடி நீள இந்த உல்லாச […]

தண்டனை தீர்ப்பின் பின் இம்ரான் கான் கைது

தண்டனை தீர்ப்பின் பின் இம்ரான் கான் கைது

ஊழல் குற்றச்சாட்டு வழக்கு வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிப்பின் பின் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வயது 70, இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பதவியில் இருந்தபோது கிடைத்த Rolex கடிகாரம் போன்ற அன்பளிப்புகளை விற்பனை செய்து பெற்ற பணத்தை வருமான வரியில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாகவே இவர் சிறை செல்கிறார். இம்ரான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகளை தற்போதைய அரசு தொடுத்துள்ளது. தண்டனை பெற்ற இம்ரான் தனது ஆதரவாளர்களை புரட்சி […]

ராகுல் காந்தியின் தண்டனை இடைநிறுத்தம்

ராகுல் காந்தியின் தண்டனை இடைநிறுத்தம்

ராகுல் காந்தி மீது விதிக்கப்பட்ட தண்டனையை இந்திய உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தி உள்ளது. அதனால் ராகுல் காந்தி மீண்டும் பாராளுமன்றம் செல்வார். அத்துடன் அடுத்த ஆண்டு தேர்தலிலும் அவர் போட்டியிடக்கூடும். ராகுல் இந்திய பிரதமரை Modi என்ற பெயர் கொண்ட இன்னோர் திருடனுடன் ஒப்பிட்டு அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு குஜராத் கீழ் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை நிராகரிக்க குஜராத்தின் மேல் நீதிமன்றமும் மறுத்தது. குஜாராத் பா.ஜ. ஆட்சியில் […]

கனடிய பிரதமர் விவாக பிரிவில்

கனடிய பிரதமர் விவாக பிரிவில்

கனடிய பிரதமர் Justin Trudeau வும் அவரின் மனைவி Sophie Gregoire யும் பிரிந்து செல்ல இணங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். எதிர்பாராத இந்த அறிவிப்பால் கனடிய அரசியல் திகைத்துள்ளது. தாம் ஏன் தமது 18 ஆண்டு திருமண வாழ்வை முறித்து கொள்கின்றனர் என்று கூறவில்லை. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. விவாக பிரிவு பெற்றாலும், ரூடோ தொடர்ந்தும் அரசியலில் பங்கு கொள்வார் என்று கூறப்படுகிறது. கனடாவின் மொன்றியல் நகரில் பிறந்த Sophie Gregoire BA பட்டம் பெற்றவர். […]

140 ஆண்டுகளில் சீனாவில் பெருமழை, 20 பேர் பலி

140 ஆண்டுகளில் சீனாவில் பெருமழை, 20 பேர் பலி

சுமார் 140 ஆண்டுகளின் பின் தற்போது சீனாவில் பெருமழை பொழிகிறது. இந்த மழை வெள்ளத்துக்கு குறைந்தது 20 பேர் பலியாகியும், 27 பேர் இருப்பிடம் அறியாதும் உள்ளனர். இந்த பெருமழைக்கு Doksuri என்ற சூறாவளியே காரணம். பிலிப்பீனை நோக்கி மேற்கு திசையில் பயணித்த இந்த சூறாவளி பின் வடக்கு நோக்கி சென்று பெய்ஜிங்கை தாக்கியுள்ளது. தலைநகர் பெய்ஜிங்குக்கு அண்மையில் சனி முதல் புதன் வரையான காலத்தில் 744.8 mm (29.3 அங்குலம்) மழை பொழிந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். […]

பிரித்தானியாவில் வீட்டு விலை மீண்டும் வீழ்ச்சி

பிரித்தானியாவில் வீட்டு விலை மீண்டும் வீழ்ச்சி

பிரித்தானியாவில் வீட்டு விலை ஜூலை மாதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2022ம் ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலையில் அங்கு வீட்டு விலை 3.8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2022ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்கனவே வீட்டு விலை 3.5% ஆல் விழுந்து இருந்தது. அதிகரித்துவரும் வட்டி வீதமே வீட்டு விலை வீழ்ச்சி அடைய பிரதான காரணி ஆகிறது. Bank of England தனது வட்டியை 5.0% இல் இருந்து […]

மீண்டும் சனாதிபதி ரம்ப்?

அமெரிக்காவில் மீண்டும் ரம்ப் சனாதிபதி ஆகும் சந்தர்ப்பம் அதிகரித்து வருகிறது. Republican கட்சிக்குள் ரம்பை பின்தள்ள தற்போது எவரும் இல்லை. Democratic கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தற்போதைய சனாதிபதி பைடென் மிக குறைந்த ஆதரவையே கொண்டுள்ளார். தற்போதைய கணிப்புகளின்படி Republican கட்சிக்குள் ரம்ப் 54% ஆதரவை கொண்டுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள DeSantis 17% ஆதரவை மட்டுமே கொண்டுள்ளார். முன்னாள் உதவி சனாதிபதி Pence 3% ஆதரவையும், Scott 3% ஆதரவையும், இந்திய சீக்கிய வம்சம் வந்த […]

இலங்கையில் முதலிட ஜப்பானுக்கு மீண்டும் அழைப்பு

இலங்கையில் முதலிட ஜப்பானுக்கு மீண்டும் அழைப்பு

இலங்கையில் பெரும் முதலீடுகளை செய்ய ஜப்பானுக்கு இலங்கை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக சக்தி, சிறிய ரயில் கட்டுமானம், துறைமுக கட்டுமான ஆகிய பணிகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அழைத்துள்ளது. ஆனால் ஜப்பான் தனது பதிலை இதுவரை தெரிவிக்கவில்லை. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத ஆட்சி இலங்கையில் இருப்பதுவும் ஜப்பானின் தயங்களுக்கு காரணம் ஆகலாம். ஜப்பானின் உதவியுடன் $2 பில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய ரயில் (light rail) திட்டத்தை இலங்கை 2020ம் ஆண்டு முன்னறிவிப்பு இன்றி […]

1 54 55 56 57 58 339