மேற்கு ஆபிரிக்க நாடான நிஜரில் (Niger) புதன்கிழமை இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்நாட்டின் சனாதிபதியின் காவலுக்கு பொறுப்பான presidential guard என்ற இராணுவ அணியே சனாதிபதியை முடங்கி வைத்துள்ளது. இராணுவ தலையகமும் தனது ஆதரவை கவிழ்ப்புக்கு வழங்கி உள்ளது. அந்நாட்டு தொலைக்காட்சியில் கவிழ்ப்பை அறிவித்த இராணுவம் சகல அரசியல் நடவடிக்கைகளையும் தடை செய்துள்ளதாக கூறியுள்ளது. முற்காலங்களில் பிரான்சின் ஆக்கிரமிப்பில் இருந்த நிஜர் மக்கள் பொதுவாக பிரான்ஸ் மீது காழ்ப்பு கொண்டுள்ளனர். இராணுவ கவிழ்ப்பின் பின் சிலர் […]
கம்போடியாவில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் வென்றது அங்கு சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பிரதமர் Hun Sen, வயது 70. ஆனால் இவர் தனது மகனை அடுத்த மாதம் பிரதமர் ஆக்கவுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் Hun Sen தலைமையில் Cambodian People’s Party (CPP) மொத்தம் 125 ஆசனங்களில் 120 ஆசனங்களை வென்று இருந்தது. உண்மையில் அங்கு எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டு உள்ளன. பல எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். மேற்படி செய்தியை அறிவித்த தந்தை […]
இந்தியாவில் மேலும் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. Marshall Islands, Micronesia ஆகிய இடங்களில் இந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து உடலுக்கு தீங்கான பொருட்களை கொண்டிருந்தமையே தடைக்கு காரணம். புஞ்சாப் மாநிலத்து QP Pharmachem Ltd. என்ற நிறுவனமே தடைக்கு உள்ளாகியது. ஏற்கனவே Maiden Pharmaceuticals, Marion Biotech ஆகிய நிறுவனங்கள் மேற்படி மருந்து காரணமாக தடை செய்யப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் பின்னரே […]
இதுவரை காலமும் இந்தியாவில் விலை உயர்ந்த motorcycle வகை சந்தையில் முன்னணியில் இருந்த Royal Enfield motorcycle களுக்கு போட்டியாக அமெரிக்காவின் Harley-Davidson தனது X440 motorcycle ஐ அறிமுகம் செய்துள்ளது. வழமையாக மிகவும் உயர்ந்த விலை Harley-Davidson மிகவும் மலிவு விலை கொண்ட X440 ஐ அறிமுகம் செய்வது Royal Enfield க்கு பலத்த போட்டியாக அமையும். Harley-Davidson X440 ஒன்று சுமார் 233,000 இந்திய ரூபாய்க்கு ($2,840) விற்பனையாகும். Royal Enfield நிறுவனத்தின் Classic […]
இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி (non-basmati white rice) ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அதனால் உலக சந்தை சுமார் 2 மில்லியன் தொன் அரிசியை இழக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் $1 பில்லியன் பெறுமதியான அரிசி இழப்பீடு உலக சந்தையில், குறிப்பாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளில், அரிசி விலையை அதிகரிக்க செய்யும். உலகுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் 40% அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. தற்போது துறிமுகங்களில் உள்ள அரிசி தடையின்றி ஏற்றுமதி […]
தற்போது பெய்ஜிங் சென்றுள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு (Henry Kissinger) சீனா பெரும் வரவேற்பு செய்துள்ளது. ஆனால் சீனா சென்ற பைடென் அரச அதிகாரிகளுக்கு அவ்வளவு மரியாதை வழங்கப்படவில்லை என்று வெள்ளைமாளிகை இன்று வியாழன் கவலை தெரிவித்து உள்ளது. “It’s unfortunate that a private citizen can meet with the defense minister and have a communication and the United States can’t” என்று வெள்ளைமாளிகை பேச்சாளர் […]
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக பொதுவாகன் இந்துக்களான பெரும்பாண்மை Meitei குழுக்களுக்கும் பொதுவாக கிறித்தவர்களான சிறுபான்மை Kuki குழுக்களுக்கும் இடையில் வன்முறைகள் இடம்பெறுகின்றன. மே மாதம் 3ம் திகதி இந்த வன்முறைகள் ஆரம்பமாகி இருந்தாலும், மேற்படி ஊர்வலம் மே மாதம் 4ம் திகதி இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த வீடியோ தற்போதே இணையங்களில் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டோர் மே மாதம் 18ம் திகதி வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். ஆனால் போலீஸ் விரைவாக செயற்ட்படவில்லை. ஒரு […]
கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தில் இடம்பெற்ற பொது தேர்தலில் Move Forward Party எதிர்பாராத வெற்றியை அடைந்து இருந்தது. அதுவரை ஆட்சியில் இருந்த இராணுவ ஆதரவு கொண்ட கட்சி படுதோல்வி அடைந்து இருந்தது. தற்போது தேர்தல் இடம்பெற்று 65 தினங்கள் ஆகினாலும் முதலாவதாக வெற்றி பெற்ற கட்சி அதன் தலைவரை பிரதமர் ஆக்க முடியாது உள்ளது. தாய்லாந்தில் மொத்த ஆசனங்கள் 500. கடந்த தேர்தலில் முன்பின் அறியாத Move Forward கட்சி 151 ஆசனங்களை பெற்றது. பிரபலமாக […]
YouGov என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் 63% பிரித்தானியர் தமது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது தவறு (failure) என்று கூறியுள்ளனர். கணிப்பில் பங்கு கொண்டோரில் 12% பேர் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிறியது நல்ல பயன் என்றுள்ளனர். 2016ம் ஆண்டு பொது வாக்கெடுப்பில் Brexit பெரும்பான்மை ஆதரவை பெற்று இருந்தது. அத்துடன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாக்கெடுப்பு நிகழ்ந்தால் 55% பேர் தாம் மீண்டும் ஆதரவு வழங்குவோம் என்றுள்ளனர். […]
கடந்த சில தினங்களாக தென் கொரியாவின் மத்திய பகுதியில் உள்ள Chongju என்ற இடத்தில் இடம்பெற்ற கடும் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். பஸ் ஒன்று Osong என்ற 685 மீட்டர் நீள நிலக்கீழ் பாதை ஒன்றில் தேங்கிய வெள்ளத்துள் அகப்பட்டதால் அதில் பயணித்த 13 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியா ஒரு வசதி படைத்த நாடு என்றாலும் பாதை வெள்ளத்தில் மூழ்கி இருந்த பஸ்சை அடைந்து உள்ளே இருந்தோரை விரைந்து காப்பாற்ற […]