உலகின் பல தலைவர்கள், பிரதான அதிகாரிகள் இன்று சனிக்கிழமை Cairo Summit for Peace என்ற தலைப்பில் காசா வன்முறைகளுக்கு தீர்வு காண எகிப்தின் தலைநகர் கைரோவில் கூடினர். ஆனால் இவர்களின் பெரும் அமர்வு தீர்வு எதுவும் இன்றி பயனற்று முடிந்துள்ளது. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், கட்டார், குவைத், துருக்கி, ஈராக், இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம், சைப்பிரஸ், தென் ஆபிரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், ஜப்பான், பிரித்தானியா, நோர்வே, ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகள் இந்த அமர்வில் கூடி […]
அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் உள்ள Colorado Spring என்ற இடத்தில் உள்ள Return to Nature என்ற மயான அலுவல்கள் நிறுவனத்தில் அரச அதிகாரிகள் 189 உடல்களை கைப்பற்றி உள்ளனர். அனால் அந்த உடல்களை தாம் எரித்து விட்டதாக கூறி மேற்படி நிறுவனம் மரணித்தோரின் சொந்தங்களுக்கு பொய் சாம்பலும், சான்றிதழும் ஏற்கனவே வழங்கியுள்ளது. அதிகாரிகள் மேற்படி நிலையத்துக்கு சென்றபோது அங்கிருந்த உடல்கள் சிதைவடைந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையத்தின் உரிமையாளர்களான Jon Halford, Carie Halford ஆகியோர் மீது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த […]
இலங்கையில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியை அதிகரிக்க சீனாவின் சனாதிபதி சீ இன்று வெள்ளி இணங்கி உள்ளார். இலங்கை சனாதிபதி ரணில் உடனான சந்திப்பின் பின்னரே சீ இந்த அறிவிப்பை செய்துள்ளார். அத்துடன் சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதையும் ஊக்குவிக்க உள்ளதாக சீ கூறியுள்ளார். ஆனால் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிய பின் குறைந்தது முட்டையையாவது உற்பத்தி செய்ய முடியாது அதையும் இறக்குமதி செய்யும் இலங்கை எதை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும்? அது மட்டுமன்றி IMF அடுத்த தொகுதி கடனை இலங்கைக்கு வழங்க முன் […]
மேற்கு நாடுகள் யுக்கிறேன் ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யா மீது தடை விதித்த பின் ரஷ்யாவின் எரிபொருள் விலை வீழ்ச்சி அடைந்தது. அந்த மலிந்த எரிபொருளை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்தியா இந்திய ரூபாய் மூலம் ரஷ்ய எரிபொருளுக்கான பணத்தை செலுத்தி இருந்தாலும் தற்போது ரஷ்யா இந்திய ரூபாய்களை ஏற்க மறுக்கின்றது. ஏற்கனவே தம்மிடம் தேங்கி உள்ள இந்திய ரூபாய்களை பயன்படுத்தி ரஷ்யாவால் எதையும் கொள்வனவு செய்ய முடியாது உள்ளது. அதேவேளை மேற்கின் தடை காரணமாக ரஷ்யாவுக்கான அனைத்து […]
இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய 41 கனடிய தூதரக ஊழியர்கள் வியாழன் இரகசியமாக இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்கள் எந்த நாட்டுக்கு சென்றார்கள் என்பது கூறப்படவில்லை. மேலதிக கனடிய அதிகாரிகளை அக்டோபர் 10ம் திகதிக்கு முன் வெளியேற்றுமாறு இந்தியா கூறி இருந்தாலும், கனடா இதுவரை அதை கவனத்தில் எடுக்காது இருந்தது. ஜூன் 19ம் திகதி Hardeep Singh Nijjar என்ற சீக்கிய தீவிரவாதி கனடாவின் கொலம்பியா மாநிலத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டதில் இந்தியாவின் கை உள்ளது என்று ரூடோ கூறியதால் விசனம் […]
அமெரிக்காவில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன. ஒன்று றேகன், புஷ், ரம்ப ஆகியோரின் Republican கட்சி, மற்றையது கிளின்டன், ஒபாமா, பைடென் போன்றோரின் Democratic கட்சி. பொதுவாக இஸ்ரேலுக்கு நிபந்தனை எதுவும் இன்றி, கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவது Republican கட்சி. ஆனால் அது தற்போதைய ஹமாஸ்-இஸ்ரேல் சண்டையில் கதை எதுவுமின்றி ஒதுங்கி உள்ளது. அதற்கு காரணம் தற்போது Republican கட்சிக்கு உள்ளே பெரும் யுத்தம் ஒன்று நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் Republican கட்சி அமெரிக்க காங்கிரசின் ஒரு அங்கமான […]
காசா நகரில் உள்ள Al Ahli என்ற வைத்தியசாலை மீது செய்யப்பட்ட தாக்குதலுக்கு சுமார் 500 பேர் பலியாகி உள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேலின் யுத்த விமானங்கள் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தாம் வைத்தியசாலையை தாக்கவில்லை என்றும், பலஸ்தீனர் மத்தியில் இயங்கும் Islamic Jihad ஏவிய கணையே தவறி வைத்தியசாலையில் விழுந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. எகிப்து, ஈரான், சிரியா, சவுதி ஆகிய நாடுகள் தாக்குதலை வன்மையாக கண்டித்து உள்ளன. ஜோர்டான் அரசர் இந்த தாக்குதலை […]
பெல்ஜியத்தில் அரபு மொழி பேசும் ஒருவர் செய்த துப்பாக்கி தாக்குதலுக்கு 2 சுவீடன் நாட்டவர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து உள்ளார். Belgium-Sweden Euro 2024 கால்பந்தாட்ட போட்டி இந்த நகரில் இடம்பெற்றது. இறந்தவர்கள் சுவீடன் அணியின் ஆடைகளை அணிந்து இருந்துள்ளனர். சூடு காரணமாக போட்டி தற்போது இடைநிறுத்தப்பட்டு உள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்படாத காரணத்தால் மக்களை வீடுகளில் தங்கியிருக்க Eric van Duyse என்ற அதிகாரி கேட்டுள்ளார். சந்தேக நபர் தன்னை ஒரு ISIS ஆதரவாளன் என்று இணையம் […]
அமெரிக்க சனாதிபதி பைடென் புதன்கிழமை இஸ்ரேல் செல்கிறார். பைடெனின் பயணம் அமெரிக்காவின் இஸ்ரேல் உடனான நெருக்கத்தை காட்டவும், காசா மக்களுக்கு உதவிகளை செய்யவும் என்கிறார் தேசிய பாதுகாப்பு செயலாளர் John Kirby. பைடென் ஜோர்டான் (Jordan) தலைநகர் அம்மானுக்கும் பயணிப்பார் என்று கூறப்படுகிறது. அம்மானில் King Abdullah, எகிப்தின் சனாதிபதி சிசி, பலஸ்தீன் சனாதிபதி அபாஸ் ஆகியோரை பைடென் சந்திப்பார். ஹமாஸ் 155 முதல் 199 வரையான இஸ்ரேலியர்களை பணயம் வைத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலின் இராணுவ நகர்வு பணயம் உள்ளோரை பலியாக்கலாம் என்ற பயம் இஸ்ரேலியர்களின் உள்ளது. களத்து நிலைமைகளை பைடென் பெரிய […]