முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச Channel 4 செய்தி சேவை மீது பாய்ந்து தனது நீண்டகால மௌனத்தை கலைத்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோத்தபாயாவை சனாதிபதி ஆக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டது என்ற தொனியில் Channel 4 வெளியிட்ட ஆக்கமே கோத்தபாயாவை மூர்க்கம் அடைய செய்துள்ளது. Channel 4 ஒரு ராஜபக்ச எதிர்ப்பு சேவை என்று கோத்தபாய சாடியுள்ளார். தான் 2015ம் ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியை விட்டு விலகிய பின் 2019ம் ஆண்டு வரை மேஜர் […]
பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய நகரமான Birmingham அதன் மீது கட்டளையிடப்பட்ட equal pay தீர்ப்பு காரணமாக முறிந்துள்ளது என்று நேற்று செவ்வாய் அறிவிக்கப்பட்டுள்ளது. Equal pay வழக்கு ஒன்று Birmingham நட்ட ஈடாக $956 மில்லியன் (760 மில்லியன் பவுண்ட்ஸ்) செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. அப்பெரும் தொகையை செலுத்த நகர அரசிடம் பணம் இல்லை. சுமார் 1 மில்லியன் மக்களை கொண்ட இந்த நகரம் தனது முறிவை செவ்வாய்க்கிழமை Section 114 பதிவு மூலம் […]
கடந்த கிழமை சீனாவின் Huawei நிறுவனம் விற்பனைக்கு விட்ட Huawei Mate Pro 60 என்ற தொலைபேசி (smartphone) 7 நானோ மீட்டர் (7 nm) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்று கனடாவின் ஒட்டாவா நகரை தளமாக கொண்ட Techinsights என்ற reverse engineering நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் HiSilicon என்ற நிறுவனம் தயாரித்த Kirin 9000s என்ற chip பே புதிய 7 nm தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த chip 5G வேகத்திலும் அதிகமான வேகத்தில் இயங்குகிறது. […]
இந்திய பிரதமர் மோதிக்கு நெருங்கியவரான அதானியின் Adani Green Energy Limited இலங்கையில் அமைக்கவுள்ள காற்றாலை (wind power) மூலமான 500 மெகாவாட் (500 MW) மின் உற்பத்தி திட்டம் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. சுமார் $400 மில்லியன் பெறுமதியான இந்த திட்டம் சட்டப்படி இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான இணக்கமா அல்லது இலங்கை அரசுக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையிலான இணக்கமா என்பதே குழப்பத்துக்கு காரணம். இலங்கை Electricity Act சட்டப்படி இலங்கை அரசு தனியார் […]
வரும் 7ம் திகதி முதல் 10ம் திகதி வரை இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெறவுள்ள G20 நாடுகளின் அமர்வுக்கு சீன சனாதிபதி சீ வராமைக்கு அமெரிக்க சனாதிபதி பைடென் கவலை தெரிவித்துள்ளார். Delaware மாநிலத்தில் உள்ள Rehoboth Beach என்ற இடத்தில் நேற்று ஞாயிறு பத்திரிகையாளருடன் உரையாடுகையில் சீ வராமையால் “I am disappointed… but am going to get to see him” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீ இந்தியா வராமைக்கு பைடெனை சந்திக்க […]
அடுத்த கிழமை வியட்நாம் செல்லும் அமெரிக்க சனாதிபதி பைடென் வியட்நாமுடனான அமெரிக்காவின் உறவை மேலும் உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு போட்டியாக வியட்நாமை பைடென் வளர்க்க முனையக்கூடும். வியட்நாம் யுத்தத்துக்கு பின் அமெரிக்கரின் வெறுப்புக்குரிய நாடாக இருந்த வியட்நாமை அமெரிக்கா மெல்ல நெருங்க ஆரம்பித்துள்ளது. வியட்நாமுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவுக்கு செப்டம்பர் 10ம் திகதி வியட்நாம் செல்லும் பைடென் two-step upgrade வழங்கும் சாத்தியங்கள் உண்டு என்றும் செய்திகள் கூறுகின்றன. பைடென் வியட்நாமில் உள்ளபோது அமெரிக்காவின் விமான […]
சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியா ஆதித்தயா (Aditya-L1) என்ற கலத்தை இன்று சனிக்கிழமை ஏவியுள்ளது. சூரியன் பூமியில் இருந்து சுமார் 150 மில்லியன் km தூரத்தில் உள்ளது. ஆனால் ஆதித்தயா சுமார் 1.5 மில்லியன் தூரம் சென்று Lagrange Point என்ற இடத்தில் நிலைகொண்டு ஆய்வுகளை செய்யும். Lagrange Point என்ற புள்ளியில் பூமி, சூரியன் ஆகியவற்றின் ஈர்ப்பு விசைகள் ஏறக்குறைய சமனாக உள்ளன. அதனால் ஏவப்படும் கலங்கள் நீண்டகாலம் இழுபட்டு செல்லாது நிலைகொள்ளும். இந்த […]
சிங்கப்பூரின் அடுத்த சனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆளும் கட்சியான People’s Action Party (PAP) கட்சியின் அங்கத்தவராக பல பதவிகளை வகித்திருப்பினும், சனாதிபதி தேர்தல் காலத்தில் PAP அங்கத்துவதை கைவிட்டு கட்சி சார்பு அற்று இருந்தார். முன்னாளில் உதவி பிரதமராக இருந்த சண்முகரத்தினம், வயது 66, 70.4% வாக்குகளை பெற்றிருந்தார். இவர் London School of Business, University of Cambridge, Harvard University ஆகிய பல்கலைக்கழகங்களில் கற்றவர். சிங்கப்பூர் சனாதிபதி […]
சீன சனாதிபதி சீயும் செப்டம்பர் 9ம், 10ம் திகதிகளில் டெல்லியில் இடம்பெறவுள்ள G20 அமர்வுக்கு பயணிக்கார் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. சனாதிபதி சீக்கு பதிலாக சீன Premier Li Qiang பயணித்து பங்கெடுப்பார். அமெரிக்க சனாதிபதி பைடென் டெல்லி G20 அமர்வுக்கு பயணிப்பார். அங்கு பைடென் சீயை சந்திக்கக்கூடும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் சீ டெல்லி செல்லாவிடில் பைடென்-சீ சந்திப்பு சாத்தியமில்லை. அண்மையில் 4 பைடென் அதிகாரிகள் சீனா சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். […]
ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்களை வழங்க உள்ளது என்று அறிந்த அமெரிக்கா வட கொரியா மீது விசனம் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் John Kirby “ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கும் பேச்சுக்களை கைவிடுமாறு DPRK அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். ஆனால் தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா பெரும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபடுவதால் வட கொரியா அமெரிக்காவை உதாசீனம் செய்கிறது. அமெரிக்காவின் உளவு ரஷ்ய-வட கொரிய ஆயுத பேச்சுக்களை அறிந்திருந்தாலும் அமெரிக்கா அந்த விவரங்களை வெளியிடவில்லை.