Miami விமான நிலையத்தில் திருடும் TSA ஊழியர்

Miami விமான நிலையத்தில் திருடும் TSA ஊழியர்

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Miami சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்யும் TSA (Transportation Security Administration) ஊழியர்கள் இருவர் பயணிகளின் கை பைகளில் இருந்து பணம் திருடுவது CCTV விடீயோக்களில் பதிவாகி உள்ளன. இந்த இரண்டு ஊழியர்களும் தற்போது பதவி விலக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

நிலநடுக்க நேரத்தில் வானத்திலும் ஒளி?

நிலநடுக்க நேரத்தில் வானத்திலும் ஒளி?

சில தினங்களுக்கு முன் மொராக்கோவில் 6.8 அளவில் நிலநடுக்கம் இடம்பெற்றது. அப்போது வானத்திலும் பிரகாசமான ஒளி இடம்பெற்றுள்ளது. இதை நில நடுக்க ஒளி (earthquake light) என்கின்றனர். விஞ்ஞானம் இந்த ஒளிக்கான காரணத்தை திடமாக கூறவில்லை. பதிலுக்கு சில அனுமானங்களையே முன்வைத்துள்ளது. மொராக்கோவில் மட்டுமன்றி முன்னரும் பல நில நடுக்கங்கள் வானத்தில் நில நடுக்க ஒளியை கொண்டிருந்தன. தற்போது மக்களின் தொலைபேசிகளில் வீடியோ வசதிகள் உள்ளதால் இவ்வகை ஒளி ஆதாரங்கள் கிடைக்கின்றன. 2007ம் ஆண்டு Pisco என்ற […]

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியது

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியது

லிபியாவில் ஞாயிறு இரவு சுனாமி போல் பாய்ந்து வந்த வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியுள்ளது. இந்த வெள்ளத்துக்கு இதுவரை சுமார் 2,300 பலியாகி உள்ளதாகவும், சுமார் 10,000 பேர் இருப்பிடம் அறியாது உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. Derna என்ற லிபியாவின் கடலோர நகரிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் விடியோக்கள் வீதிகளில் வெள்ளம் மக்களை இழுத்து செல்வதை காட்டுகின்றன. பல வாகனங்களும் இழுத்து செல்லப்பட்டன. பலர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் அவர்களின் உடல்கள் மீட்கப்படாது போகலாம். […]

லிபியா வெள்ளத்துக்கு 2,000 பேர் பலி, 6,000 தொலைவு

லிபியா வெள்ளத்துக்கு 2,000 பேர் பலி, 6,000 தொலைவு

வட ஆபிரிக்க நாடான லிபியாவில் இடம்பெற்ற வெள்ளத்துக்கு குறைந்தது 2,000 பலியாகி உள்ளதுடன், சுமார் 6,000 பேர் இடமறியாதும் உள்ளனர். Daniel என்ற சூறாவளி கிழக்கு லிபியாவை தாக்கியதாலேயே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட 2,000 பேர் Derna என்ற நகரில் பலியானோர் தொகை மட்டுமே Al-Bayda, Al-Marj, Tobruk, Takenis, Battah ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வீழ்ச்சியால் அணைகள் நிரம்பி உடைந்ததாலேயே திடீரெனெ வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. லிபியாவின் தலைநகர் திரிபோலியில் […]

வட கொரிய கிம் ரஷ்யா பணிக்கிறார்?

வட கொரிய கிம் ரஷ்யா பணிக்கிறார்?

வட கொரியாவின் தலைவர் கிம் (Kim Jong Un) ரஷ்யா நோக்கி பயணிப்பதாக செய்திகள் கூறுகின்றன. கிம் ரஷ்ய சனாதிபதி பூட்டினை சந்திப்பார் என்று இன்று திங்கள் ரஷ்யா கூறியுள்ளது. சந்திப்பு நாளை செவ்வாயும் இடம்பெறலாம். கிம் தனது ரயில் மூலமே பயணிப்பதாக கூறப்படுகிறது. கிம் பொதுவாக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரயில் மூலமே நீண்ட தூரங்கள் பயணிப்பார். பூட்டின் ரஷ்யாவின் கிழக்கு நகரமான Vladivostok இன்று திங்கள் சென்றுள்ளார். சந்திப்பு இந்த நகரத்தில் இடம்பெறலாம். ரஷ்யாவின் […]

மாலைதீவு சனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றில்

மாலைதீவு சனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றில்

மாலைதீவில் சனிக்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் எவரும் தேவையான 50% வாக்குகளை பெற்றிருக்கவில்லை. அதனால் முன்னனியில் உள்ளவர்களுக்குள் இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும். சுமார் 75% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் India-first என்ற இந்திய ஆதரவு கொண்ட தற்போதைய சனாதிபதி Ibrahim Solih 40% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். India-out என்று கூறும் சீன ஆதரவு கொண்ட Mohamed Muizzu 46% வாக்குகளை பெற்றுள்ளார். முன்னாள் சனாதிபதி தேர்தலில் பங்கெடுப்பதை Solih அரசு தடுத்ததால் Muizzu போட்டியிட்டுள்ளார். […]

மொராக்கோ நில நடுக்கத்துக்கு 1,030 பேர் பலி

மொராக்கோ நில நடுக்கத்துக்கு 1,030 பேர் பலி

மொரோக்கோ என்ற வட ஆபிரிக்க நாட்டில் இன்று வெள்ளி இரவு 11:00 மணியளவில் இடம்பெற்ற 7.2 அளவிலான நில நடுக்கத்துக்கு குறைந்தது 1,030 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 670 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். மொராக்கோவின் High Atlas மலை பகுதியிலேயே இந்த நடுக்கம் இடம்பெற்றுள்ளது. நடுக்கத்தின் மையம் 71 km ஆழத்தில் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த மலை பகுதிகள் ஆனபடியால் உதவிகள் வேகமாக கிடைக்காது. 1960ம் ஆண்டு மொராக்கோவில் இடம்பெற்ற […]

ஹாங் காங்கில் 140 ஆண்டுகளின் பின் அதிக மழை

ஹாங் காங்கில் 140 ஆண்டுகளின் பின் அதிக மழை

ஹாங் காங் நகரில் வியாழன் முதல் பெரும் மழை பொழிகிறது. இந்த மழை கடந்த 140 ஆண்டுகளில் பெரிய மழை வீழ்ச்சி ஆகும். மழை வீழ்ச்சி சனிக்கிழமை வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு வியாழன் மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 வரையில் மட்டும் 200 mm மழை பெய்துள்ளது. இது சுமார் ஒரு மாதத்து மழை வீழ்ச்சிக்கு சமனாகும். இந்த பெருமழை ஏற்படுத்திய வெள்ளம் காரணமாக வீதிகள் பல ஆறுகள் ஆகியுள்ளன. நிலக்கீழ் […]

Channel 4 மீது கோத்தபாய பாய்ச்சல்

Channel 4 மீது கோத்தபாய பாய்ச்சல்

முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச Channel 4 செய்தி சேவை மீது பாய்ந்து தனது நீண்டகால மௌனத்தை கலைத்துள்ளார்.  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோத்தபாயாவை சனாதிபதி ஆக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டது என்ற தொனியில் Channel 4 வெளியிட்ட ஆக்கமே கோத்தபாயாவை மூர்க்கம் அடைய செய்துள்ளது. Channel 4 ஒரு ராஜபக்ச எதிர்ப்பு சேவை என்று கோத்தபாய சாடியுள்ளார். தான் 2015ம் ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியை விட்டு விலகிய பின் 2019ம் ஆண்டு வரை மேஜர் […]

1 44 45 46 47 48 333