அமெரிக்காவிலும் சீக்கியரை கொல்ல இந்தியா முனைந்தது?

அமெரிக்காவிலும் சீக்கியரை கொல்ல இந்தியா முனைந்தது?

அமெரிக்காவிலும் சீக்கியர் ஒருவரை படுகொலை செய்ய இந்தியா முனைந்து இருந்தது என்றும் அதை அறிந்த அமெரிக்கா இந்தியாவை கண்டித்து இருந்தது என்றும் Financial Times செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கரான Gurpatwant Singh Pannun என்பவரே மேற்படி படுகொலை முயற்சியின் குறி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோதி பைடெனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற பின்னரே அமெரிக்காவின் எச்சரிக்கை பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையால் இந்தியா பின்வாங்கியதா அல்லது அமெரிக்காவின் FBI காவல் அதிகாரிகள் முயற்சியை முறியடித்தார்களா என்பது […]

பலஸ்தீன ஆதரவால் இன்னொரு நடிகையும் புறக்கணிப்பு

பலஸ்தீன ஆதரவால் இன்னொரு நடிகையும் புறக்கணிப்பு

காசா பலஸ்தீனருக்கு ஆதரவளித்த Melissa Barrera என்ற ஹாலிவுட் (Hollywood) நடிகை Scream என்ற திரைப்பட தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  இந்த நடிகை காசாவில் நிகழ்வது “genocide and ethnic cleansing” என்று கூறும் வேறு ஒருவரின் பதிவு ஒன்றை தனது பதிவில் மீண்டும் மறுபதிவு (resharing) செய்தே தண்டிப்புக்கு காரணமாகும். அமெரிக்காவில் ஹாலிவுட், வர்த்தகத்தின் மையமான Wall Street, அரசியல் கட்சிகள் ஆகியவை யூதர்களின் ஆளுமையில் உள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பும் எவரும் இங்கு வளர […]

காசா மீதான தாக்குதலை BRICS கண்டிக்கிறது

காசா மீதான தாக்குதலை BRICS கண்டிக்கிறது

Brazil, Russia, India, China, South Africa ஆகிய நாடுகளை உள்ளடக்கிய BRICS நாடுகள் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நேற்று செவ்வாய் கண்டித்து உள்ளன. இதுவரை பொருளாதாரத்தில் மட்டும் கருத்தாக இருந்த BRICS முதல் தடவையாக ஒரு யுத்தம் தொடர்பாக ஆராய அமர்ந்துள்ளது. தற்போது உலகின் 40% மக்கள் BRICS நாடுகளில் உள்ளனர். 2024ம் ஆண்டில் மீண்டும் அதிகரிக்கும். பலஸ்தீனரை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து இஸ்ரேல் கட்டாயப்படுத்தி நகர்த்துவது war crime என்றும் […]

விரைவில் ஒரு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்?

விரைவில் ஒரு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்?

விரைவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்று நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த இணக்கத்தை கட்டார் அரசு முன் நின்று செய்கிறது. இந்த உடன்படிக்கையின்படி  ஹமாஸ் தான் அக்டோபர் 7ம் திகதி கைப்பற்றி உள்ள பணய கைதிகளில் சிறுவர்களும், பெண்களும் அடங்க 50 பேரை விடுதலை செய்யக்கூடும்.  பதிலுக்கு இஸ்ரேல் 3 முதல் 5 தினங்களுக்கு காசா மீதான தாக்குதல்களையும் இஸ்ரேல் நிறுத்தும். அத்துடன் விடுதலை செய்யப்படும் ஒவ்வொரு இஸ்ரேலியர்க்கும் 3 பலஸ்தீனரை விடுதலை செய்யும். […]

AI ஐ பெரும் குழப்பத்துள் அமுக்கிய HI

AI ஐ பெரும் குழப்பத்துள் அமுக்கிய HI

Artificial Intelligence (AI) விரைவில் மனிதனை வென்றுவிடும் என்று கதைகள், கட்டுரைகள் நம்ப வைக்கும் இந்த காலத்தில் ChatGPT என்ற முன்னனி AI நிறுவனத்துள் ஏற்பட்டுள்ள குழப்பம் Human Intelligence (HI) மிகவும் பொல்லாதது, ஆபத்தானது, வஞ்சகம் நிறைந்தது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. OpenAI யை உருவாக்கும் ChatGPT என்ற நிறுவனத்தின் CEO பதவியில் இருந்த Sam Altman என்பவரை ChatGPT நிறுவனத்தின் Board of Directors அண்மையில் பதவி நீக்கி இருந்தனர். அவர்களுக்கு சட்டப்படி அந்த […]

அரபு, இஸ்லாமிய தலைவர்கள் பெய்ஜிங்கில்

அரபு, இஸ்லாமிய தலைவர்கள் பெய்ஜிங்கில்

சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi இன்று திங்கள் காசா யுத்தம் தொடர்பாக உரையாட சவுதி, ஜோர்டான், எகிப்து, இந்தோனேசியா, PA, Organization of Islamic Cooperation தலைவர் ஆகியோரை பெய்ஜிங் அழைத்து  உறையாடி உள்ளார். உலக நாடுகள் விரைந்து காசா யுத்தத்துக்கு தீர்வு ஒன்றை கண்டு அழிவை நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். சீனா உடனடி யுத்த நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் பலஸ்தீனரை “collective punishment” மூலம் தண்டிப்பதையும் நிறுத்த வேண்டும் […]

WHO: காசா al-Shifa வைத்தியசாலை ஒரு dead zone

WHO: காசா al-Shifa வைத்தியசாலை ஒரு dead zone

வடக்கு காசாவில் உள்ள காசாவின் மிக பெரிய al-Shifa வைத்தியசாலை ஒரு dead zone என்று The World Health Organization (WHO) இன்று கூறியுள்ளது. இஸ்ரேல் இந்த வைத்தியசாலைக்கு கீழ் ஹமாஸ் நிலக்கீழ் சுரங்கங்கள் பல கொண்ட தனது கட்டளை தலைமையகத்தை கொண்டுள்ளது முன்னர் திடமாக கூறி அந்த வைத்தியசாலையை ஆக்ரமித்து தேடுதல் செய்தது. ஆனால் தற்போது ஹாமாஸின் தலைமையகம் இருந்ததற்கான ஆதாரம் எதையும் முன்வைக்காத இஸ்ரேல் படைகள் அந்த வைத்தியசாலையை விட்டு அனைவரையும் வெளியேற கூறியுள்ளது. […]

Twitter Elon Musk ஐ பழிவாங்கும் அமெரிக்க நிறுவனங்கள்

Twitter Elon Musk ஐ பழிவாங்கும் அமெரிக்க நிறுவனங்கள்

உலகின் முதலாவது செல்வந்தரான Elon Musk தனது X என்று அழைக்கப்படும் முன்னாள் Twitter பதிவில் இஸ்ரேல் காசாவில் பலஸ்தீனர்களை பழிவாங்கும் நோக்கில் செய்யும் தாக்குதல்களை கண்டித்து பதிவு செய்த பின் பல அமெரிக்க நிறுவனங்கள் X இல் விளம்பரங்கள் செய்வதை இடை நிறுத்தி உள்ளன. IBM, Comcast, Paramount, Lionsgate, The European Commission ஆகியன ஏற்கனவே தமது விளம்பரங்களை X இல் பதிவு செய்வதை நிறுத்தி உள்ளன. Facebook, X போன்ற நிறுவனங்கள் விளம்பரங்கள் […]

இடிந்த இந்திய குகையில் அகப்பட்டோர் மீட்பு இடைநிறுத்தம்

இடிந்த இந்திய குகையில் அகப்பட்டோர் மீட்பு இடைநிறுத்தம்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், இமாலய பகுதியில் கடந்த ஞாயிறு குகை பாதை ஒன்றில் அகப்பட்ட 40 பணியாளர்களை காப்பாற்றும் பணி மீண்டும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது. மலை மேலும் உடையும் சத்தம் கேட்டதாலேயே மீட்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது. அகப்பட்டு உள்ளவர்களுக்கு நீர், உணவு, மறுத்து ஆகியன வேறு சிறு குழாய் மூலம் தொடர்ந்தும் அனுப்பப்படுகிறது. அகப்பட்டு உள்ளவர்களுடன் walkie-talkie மூலம் தொடர்புகளும் பேணப்படுகிறது. அகப்பட்டவர் வெளியேற மனிதர் நுழைந்து செல்லக்கூடிய குழாய் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை […]

ஆப்கானில் பிரித்தானிய கொலைகளை மறைத்த Gen. Jenkins

ஆப்கானில் பிரித்தானிய கொலைகளை மறைத்த Gen. Jenkins

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய SAS பிரிவு விசேட படைகள் செய்த படுகொலைகளை மறைத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜெனரல் Gwyn Jenkins என்று தற்போது அறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஆப்கானித்தானில் பிரித்தானிய SAS படைகள் கை விலங்குடன் இருந்த ஆப்கானிஸ்தான் ஆண்களையும் சுட்டு கொன்றுள்ளன. அத்துடன் போராடும் வயதுடைய ஆண்கள் அனைவரையும் சுடலாம் என்ற கொள்கையையும் SAS கொண்டிருந்தது. அந்த கொள்கையின்படி 15 வயதுக்கு மேலான ஆண்கள் அனைவ்ரும் போராடும் வயதுடையோர். பிரித்தானிய இராணுவ சட்டப்படி இராணுவம் செய்யும் […]

1 42 43 44 45 46 339