சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் விரட்டப்பட்டனர்

சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் விரட்டப்பட்டனர்

சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் அரச பதவிகளில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விரட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் ஊழல்களில் பங்கெடுத்து இருந்தனர் என்று கருதப்படுகிறது. ஆனால் சீன அரசு பதவி பறிப்புக்கான காரணங்களை பகிரங்கம் செய்யவில்லை. விரட்டப்பட்டோரில் 5 பேர் சீனாவின் இரகசியம் நிறைந்த படையான Rocket Force படை அங்கத்தவர். அதில் ஒருவர் Li Yuchao என்ற Rocket Force படையின் commander. மேலும் 2 பேர் Equipment Development திணைக்கள அங்கத்தவர். அண்மையில் பதவி […]

ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings

ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings

அமெரிக்காவின் Minnesota மாநிலத்து Kathleen Wilson என்ற பெண் தனக்கு ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings வழங்கிய Dr. Kevin Molldrem என்ற தனது பல் வைத்தியரை நீதிமன்றம் இழுக்கிறார். இவ்வளவு வேலைகளையும் செய்ய அந்த பெண்ணுக்கு பல் வைத்தியரால் 960 mg anesthesia வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் சட்டப்படி அங்கு ஒருவருக்கு வழங்கக்கூடிய அதி கூடிய அளவு 490 mg மட்டுமே. இந்த பெண் தொடர்ச்சியாக சுமார் 5.5 மணித்தியாலங்கள் […]

யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாழ்ப்பாண கட்டிட பொருட்கள் கடைகளில் screw (புரி ஆணி) தாங்கோ என்று கேட்டால் தற்போது கிடைப்பது drywall screw களே. “என்ன அண்ணை இது, பழையன மாதிரி செப்பு, பித்தளை, அல்லது இரும்பு screw இல்லையே” என்று கேட்டால் “இப்ப சனம் இதைத்தான் கேட்டு வாங்குகினம்” என்ற பதில் வருகிறது. வளியில் ஈரப்பதன் (moisture) குறைந்த நாடுகளில் வீடுகள் drywall பயன்படுத்தி கட்டப்படும். குறிப்பாக சுவர்கள் drywall சுவர்களாக இருக்கும். Drywall பலகைகளில் நடுவில் gypsum இருக்கும், இருபுறமும் கடதாசி இருக்கும். […]

Apple கடிகாரங்களுக்கு அமெரிக்காவில் தடை

Apple கடிகாரங்களுக்கு அமெரிக்காவில் தடை

iPhone என்ற தொலைபேசியை தயாரிக்கும் அமெரிக்காவின் Apple நிறுவனம் தனது தொழில்நுட்பம் நிறைந்த சில கடிகாரங்களை அமெரிக்காவுள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. Masimo என்ற நிறுவனத்தின் குருதியில் உள்ள oxygen அளவை கணிப்பிடும் நுட்பத்தை Apple சட்டத்துக்கு முரணாக (patent-infringing) பயன்படுத்தி உள்ளது என்று International Trade Commission தீர்ப்பு கூறியமையே இந்த தடைக்கு காரணம். Apple கடிகாரங்கள் Pulse Oximeter என்ற பெயரில் இந்த நுட்பத்தை 2020ம் ஆண்டு (Series 6) முதல் உள்ளடக்கி […]

303 அகதிகளுடன் மும்பாய் திரும்புகிறது விமானம்?

303 அகதிகளுடன் மும்பாய் திரும்புகிறது விமானம்?

பிரான்சில் 3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த விமானம் ஒன்று இந்தியாவின் மும்பாய் நகரை நோக்கி செல்கிறது என்று கூறப்படுகிறது. டுபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான Nicaragua சென்ற விமானமே பிரான்சால் தடுத்து வைக்கப்பட்டு இருந்தது. ரோமானியாவில் பதிவு கொண்ட Legend Airlines என்ற விமான சேவையின் மிகப்பெரிய Airbus 340 வகை விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. வாடகைக்கு அமர்த்திய நிறுவனத்தின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விமானத்தில் இருந்த […]

இஸ்ரேல் தெடர்பு கப்பல் மீது இந்தியா அருகே தாக்குதல்

இஸ்ரேல் தெடர்பு கப்பல் மீது இந்தியா அருகே தாக்குதல்

இஸ்ரேலுடன் தொடர்புடைய MV Chem Pluto என்ற எண்ணெய் காவும் கப்பல் மீது இந்தியாவுக்கு அருகே drone மூலம் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து 370 km தென் மேற்கு கடலில் பயணிகையிலேயே தாக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலுக்கு உதவ இந்திய யுத்த கப்பல்களும், இராணுவ விமானமும் .சென்றுள்ளன. செங்கடல் வழி செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் போல இந்த கப்பல் மீதான […]

Prague பல்கலைக்கழகத்தில் 14 மாணவர் சுட்டு கொலை

Prague பல்கலைக்கழகத்தில் 14 மாணவர் சுட்டு கொலை

Prague என்ற Czech நாட்டின் தலைநகரில் உள்ள Charles University என்ற பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவன் ஒருவன் செய்த துப்பாக்கி சூட்டுக்கு 14 மாணவர்கள் பலியாகியும், 25 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். கொலையாளியும் போலீசாரால் கொலை செய்யப்பட்டு உள்ளான். வியாழன் பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்ற இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் கொலையாளி அதே தினம் இந்த தாக்குதலுக்கு முன் தனது தந்தையரையும் கொலை செய்துள்ளான். அதேவேளை அப்பகுதி காடு ஒன்றில் […]

சட்டமா, சனநாயகமா, குட்டையை குழப்பும் ரம்ப்

சட்டமா, சனநாயகமா, குட்டையை குழப்பும் ரம்ப்

தற்போதும் பெருமளவு மக்களின் ஆதரவை கொண்ட முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்க அரசியலில் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அமெரிக்காவில் ஆளும் கட்சிகள் நீதிபதிகளை தெரிவு நியமனம் செய்வதும் குட்டையை மேலும் குழப்புகிறது. அமெரிக்காவில் தற்போது 2024ம் ஆண்டுக்கான சனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. முதலில் மாநில அளவில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் மூலம் (primary தேர்தல்) தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்து ஒரு தொகை வாக்குகளை வழங்கும். தேசிய அளவில் அதிக வாக்குகள் பெறுபவர் […]

யுகிரேனுக்கு மேலும் 500,000 படையினர் தேவையாம்

யுகிரேனுக்கு மேலும் 500,000 படையினர் தேவையாம்

தமது நாட்டை ஆக்கிரமித்து உள்ள ரஷ்யாவுடன் போரிட மேலும் 500,000 படையினர் தேவை என்கிறார் யுகின்றேன் சனாதிபதி செலன்ஸ்கி. ஏற்கனவே அமெரிக்காவின் $60 பில்லியன் உதவியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் $55 பில்லியன் உதவியும் தடைப்பட்டு உள்ள நிலையிலேயே செலன்ஸ்கி மேலும் 500,000 தேவை என்கிறார். மேலதிக 500,000 படையினருக்கு பயிற்சி வழங்கி, தேவையான ஆயுதங்கள் வழங்க மேலும் பெருமளவு பணமும், பல மாதங்களும் தேவை. யுகின்றேன் யுத்தம் ஏற்கவே 2 ஆண்டுகளை கடந்துள்ளது. யுகின்றேன் சனாதிபதியின் கணிப்பீடு […]

இந்தியாவில் 141 எதிர்க்கட்சி பா. உறுப்பினர் இடைநிறுத்தம்

இந்தியாவில் 141 எதிர்க்கட்சி பா. உறுப்பினர் இடைநிறுத்தம்

இந்தியாவில் இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் (MPs) பாராளுமன்றத்தில் இருந்து ஆளும் பா.ஜ. கட்சியால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த கிழமை இருவர் இந்திய பாராளுமன்ற பார்வையாளர் பகுதியில் இருந்து அங்கத்தவர் சபை உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இந்த செயலை பாராளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டும் என்று கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களே இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர். திங்கள் கிழமை மட்டும் 78 எதிர்க்கட்சி உறுப்பினர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த தடை வெள்ளிக்கிழமை […]

1 38 39 40 41 42 338