இன்று ஞாயிறு இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய உரையில் 2013 முதல் 2016 வரையான காலத்தில் நெட்டன்யாஹு ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் Moshe Yaalon காசாவின் வட பகுதியில் இஸ்ரேல் படைகள் war crime செய்கின்றன என்று கூறியுள்ளார். இஸ்ரேல் காசாவின் வட பகுதியில் இருந்து பலஸ்தீனரை விரட்டி அங்கு யூதர்களை குடியமர்த்த முனைவதாக முன்னாள் ஜெனரல் Moshe இஸ்ரேலின் கடும்போக்கு அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது கூற்றில் “at the […]
அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி ரம்ப் இன்று சனிக்கிழமை மீண்டும் ஒரு குரைப்பை செய்துள்ளார். BRICS நாடுகள் அமெரிக்க டாலர் பாவனையை தவிர்த்து வேறு நாணயங்களை பயன்படுத்த முனைந்தால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு தான் 100% இறக்குமதி விதிக்கவுள்ளதாக ரம்ப் குரைத்துள்ளார். தற்போது BRICS அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, UAE ஆகிய 9 நாடுகள் அங்கம் கொண்டுள்ளன. இலங்கை உட்பட மேலும் பல நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அவர் தனது […]
நவம்பர் மாதம் இலங்கையின் பணச்சுருக்கம் (deflation) 2.1% ஆக உள்ளது என்று இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இந்த அளவு பணச்சுருக்கம் சுமார் 63 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 70% பணவீக்கத்துடன் (inflation) ஒப்பிடுகையில் 2.1% பணச்சுருக்கம் மிக பெரிதல்ல என்றாலும் பொருட்களின் விலை மெல்ல குறைய ஆரம்பித்து உள்ளது என்பதை இது காட்டுகிறது. செப்டம்பர் மாத பணச்சுருக்கம் 0.5% ஆகவும், அக்டோபர் மாத பணச்சுருக்கம் 0.8% ஆகவும் மட்டுமே இருந்தன. எரிபொருள் விலை […]
வருங்கால அமெரிக்க சனாதிபதி அண்மையில் மெக்சிகோ, கனடா ஆகிய இரு நாடுகளிலும் இருந்து அமெரிக்கா வரும் அனைத்து பொருட்களுக்கும் 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக மிரட்டி இருந்தார். இந்த கூற்று ஒரு உத்தியோக கூற்று அல்ல. ஆனால் இன்று வெள்ளி கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ரம்பை சந்திக்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு பறந்துள்ளார். வெள்ளி இரவு ரம்பும், ரூடோவும் ஒன்றாக இரவு போசனம் உண்பர். ரம்ப் கூறியபடி இலகுவில் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 25% இறக்குமதி அறவிட முடியாது. அவ்வாறு செய்வது […]
அஸ்ரேலியா இன்று வியாழன் முதல் 16 வயதுக்கு உட்பட்டோர் Facebook, TikTok, Instagram, X, Snapchat போன்ற social media களில் இணைவதை தடை செய்துள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த தடை படிப்படியாக நடைமுறை செய்யப்படும். ஒரு ஆண்டின் பின் தடை முற்றாக சட்டமாகும். பாடசாலைகளில் பரவலாக பயன்படுத்தப்படுவதால் YouTube மேற்படி தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டின் பின் இந்த தடையை மீறும் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் A$ 49.5 மில்லியன் (U$ 32 million) […]
இந்திய அரசு மாலைதீவுக்கு மட்டும் என்று அனுமதி வழங்கிய இந்திய சீனியின் ஒரு பகுதி இடைவழியில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை இந்திய Directorate-General of Foreign Trade (DGFT) தற்போது விசாரணை செய்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்ததாலும், இந்தியாவின் சில இடங்களில் தேர்தல் இடம்பெற்றதாலும் இந்தியா சீனி ஏற்றுமதியை இடைநிறுத்தி இருந்தது. ஆனால் மாலைதீவை சீனாவில் இருந்து தன் பக்கம் இழுக்க மாலைதீவுக்கு மட்டும் மலிவு விலையில் 64,000 தொன் சீனியை ஏற்றுமதி செய்ய இந்தியா அக்டோபர் 25ம் திகதி அனுமதித்து […]
லெபனான் ஆயுத குழுவான ஹெஸ்புல்லாவுக்கும், இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே இன்று செவ்வாய் 60 தின யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. யுத்த நிறுத்தம் லெபனான் நேரப்படி புதன் காலை 4:00 மணிக்கு ஆரம்பமாகும். இஸ்ரேல் அமைச்சரவையும் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் கடும்போக்கு வலதுசாரி அரசியல்வாதிகள் இந்த யுத்த நிறுத்தத்தை சரண் அடைவதற்கு சமம் என்று கூறியுள்ளனர். யுத்த நிறுத்த காலத்தில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஐ.நா. படைகளும், லெபனான் படைகளும் நிலைகொள்ளும். ஆனாலும் மேலதிக யுத்த நிறுத்த […]
ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் கனடா, மெக்சிக்கோ ஆகிய இரண்டு நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக ரம்ப் இன்று திங்கள் கூறியுள்ளார். அது தற்போது நடைமுறையில் உள்ள NAFTA உடன்படிக்கைக்கு முரணானது. அத்துடன் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிட உள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார். ரம்ப் இவ்வாறு முன்னரும் பல மிரட்டல்களை அறிவித்து தனக்கு சாதகமான பொருளாதார பேச்சுகளுக்கு தளம் அமைத்திருந்தார். இவர் தனது 2017 ஆட்சியில் […]
அதானி நிறுவனங்களில் மேற்கொண்டு முதலீடுகள் செய்வதை பிரான்சின் எண்ணெய் வள நிறுவனமான TotalEnergies தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. அமெரிக்கா தற்போது அதானி மீது தொடுத்துள்ள $265 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டே TotalEnergies தனது புதிய முதலீடுகளை இடைநிறுத்த காரணம். TotalEnergies அதானியின் Adani Green Energy என்ற நிறுவனத்தில் 19.7% பங்கை 2021ம் ஆண்டு கொள்வனவு செய்திருந்தது. Adani Total Gas என்ற கூட்டுறவு நிறுவனத்தில் TotalEnergies 37.4% உரிமையை கொண்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை அற்றன என்று நிரூபிக்கும் வரை TotalEnergies மேற்கொண்டு அதானி நிறுவனங்களில் […]
இலங்கை அரசு பகிரங்க கேள்விகள் எதுவும் இன்றி Adani Ports என்ற அதானியின் நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுகம் ஒன்றை (WCT: West Container Terminal) கட்டி, சேவைக்கு விட அனுமதி வழங்கி இருந்தது. இந்த திட்டத்துக்கு US International Development Finance Corp. என்ற அமைப்பு $500 மில்லியன் கடன் வழங்கவும் முன்வந்திருந்தது. ஆனால் அண்மையில் அமெரிக்கா அதானி உட்பட 8 பேர் மீது $250 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டை சுமத்தி, அவர்களை கைது செய்ய ஆணையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் […]