இந்த ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முயற்சிகளை கைவிட்டார் விவேக் ராமசாமி. Republican கட்சி சார்பில் போட்டியிட தான் தெரிவு செய்யப்படமாட்டார் என்பதை அறிந்தே இவர் போட்டியில் இருந்து விலகினார். திங்கள் அயோவா மாநிலத்தில் இடம்பெற்ற உட்கட்சி தேர்தலில் இவர் 4ம் இடத்தை அடைந்திருந்தார். அங்கு இவருக்கு 7.1% வாக்குகளே கிடைத்தன. போட்டியில் இருந்து வெளியேறிய விவேக் 51.3% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ள ரம்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தான் சனாதிபதி ஆக […]
ஈராக்கின் வடக்கே உள்ள எர்பில் (Erbil) என்ற நகரில் இயங்கிய இஸ்ரேலின் மொஸாட் உளவு நிலையத்தின் மீது ஈரான் திங்கள் ஏவுகணைகள் கொண்டு தாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. Kurdish மக்கள் அதிகம் வாழும் ஈராக்கின் இப்பகுதி அமெரிக்காவின் பலத்த ஆதரவை கொண்டது. Kurdish மக்கள் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். சிரியாவில் நிலை கொண்டிருந்த ஈரானிய படைகள் மீது இஸ்ரேல் […]
இன்று அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில் இடம்பெறும் Republican கட்சி சார்பில் போட்டியிடும் 2024 ஆண்டு சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் ரம்ப் முன்னணியில் உள்ளார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி ரம்ப் 51.3% வாக்குகளையும் (2,153 வாக்குகள்), Ron DeSantis 21.5% வாக்குகளையும் (904 வாக்குகள்), நிக்கி Haley 19.2% வாக்குகளையும் (807 வாக்குகள்), விவேக் ராமசாமி 7.1% (296 வாக்குகள்) வாக்குகளையும் பெற்று உள்ளனர். ஏனையோர் புறக்கணிக்கத்தக்க வாக்குகளை பெற்றுள்ளனர். அயோவா முடிவுகள் Republican […]
தாய்வானில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஆளும் DPP கட்சியின் உறுப்பினர் William Lai Chingte மீண்டும் சனாதிபதியாக வென்றுள்ளார். சீனாவுடன் முரண்படும் இந்த கட்சி அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டது. Lai தற்போது உதவி சனாதிபதி ஆவார். எதிர் கட்சியான KMT தமது தோல்விக்கு புதிதாக போட்டியிட்ட TPP கட்சியை குற்றம் சாட்டியுள்ளது. TPP வேட்பாளர் பெருமளவு வாக்குகளை பிரித்து எடுத்துள்ளது. இதனால் மேலும் 4 ஆண்டுகளுக்கு சீன-தாய்வான் முறுகல் நிலை தொடரும்.
யெமென் (Yemen) ஆயுத குழுவான கூத்தி (Houthi) மீது அமெரிக்காவும், பிரித்தானியாவும் இன்று தாக்குதல் செய்துள்ளன. நெதர்லாந்து, அஸ்ரேலியா, கனடா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்த தாக்குதல்களுக்கு உதவி செய்துள்ளன. யெமென் நாட்டின் பெரும் பகுதியை தம் கட்டுப்பாட்டுள் வைத்துள்ள கூத்தி ஆயுத குழு காசா பலஸ்தீனியருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்கள் மீது தாக்குதல்கள் செய்கின்றன. செங்கடல் ஊடான வர்த்தக கப்பல் போக்குவரத்து தடைப்படுவதாலேயே தாம் தாக்குதல்களை செய்வதாக […]
இந்த ஆண்டுக்கான Eurovision பாடல் போட்டியில் இருந்து இஸ்ரேலை விலக்குமாறு பல இசை துறையினர் அழுத்தம் வழங்கி வருகின்றனர். இஸ்ரேல் காசாவில் பாலஸ்தீனர்களுக்கு செய்யும் கொடுமைகளை கண்டிக்கவே இந்த அழுத்தம் முனைகிறது. சுமார் 1,400 பின்லாந்து இசை துறையினர் இஸ்ரேல் காசாவில் செய்வது war crimes என்றும் அதனால் இஸ்ரேல் தடை செய்யப்பட வேண்டும் என்று கையொப்பம் இட்ட முறைப்பாடு மூலம் கேட்டுள்ளனர். இஸ்ரேல் புறக்கணிக்கப்படாவிட்டால் தாம் Eurovision போட்டியில் பங்கு கொள்ளப்போவது இல்லை என்றும் கூறியுள்ளனர். […]
Suchana Seth என்ற அம்மா, வயது 39, தனது 4 வயது மகனை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பெங்களூரை தளமாக கொண்ட The Mindful AI Lab என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் CEO ஆவார். இவர் அருகில் உள்ள கோவா மாநிலத்துக்கு சனிக்கிழமை தனது மகனுடன் சென்றுள்ளார். ஆனால் திங்கள் அவர் வீடு திரும்பும் வேளையில் அவரின் மகன் அவருடன் இருக்கவில்லை. விடுதி அறையில் இரத்தக்கறை இருந்ததை […]
இலங்கையின் தெற்கே உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota International Port) கடந்த 2023ம் ஆண்டில் 26% வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த துறைமுகம் 99 ஆண்டுகள் குத்தகை மூலம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக கார், பஸ் போன்ற Ro/Ro (Roll-on/roll-off) வகை பொருட்களையே இந்த துறைமுகம் அதிகம் கையாளுகிறது. இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் 700,000 அலகுகளை கையாண்டு உள்ளது. தென் கொரியாவின் Ulsan துறைமுகத்துக்கு சென்ற வாகனங்களை காவும் MV Hae Shin என்ற கப்பல் 3,626 அலகுகளை […]
நேற்று ஞாயிரு பங்களாதேசத்தில் இடம்பெற்ற பொது தேர்தலில் ஆளும் கட்சியான Awami League மீண்டும் வெற்றி பெறுகிறது. சட்டப்படியான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாவிடினும் தேர்தல் இடம்பெற்ற 299 தொகுதிகளில் Awami இதுவரை 216 இடங்களை வென்றுள்ளது. அதனால் பிரதமர் Sheikh Hasina தொடர்ந்து 4 ஆவது தடவையாக பிரதமர் ஆகிறார். இவர் முன்னரும் ஒருமுறை பிரதமராக பதவி வகித்தவர். எதிர் கட்சியான Bangladesh National Party (BNP) பல்லாயிரம் தனது தலைவர்கள், ஆதரவாளர் சிறைப்பிடிக்கப்பட்டதால் தேர்தலை பகிஷ்காரம் செய்துள்ளது. அதனால் […]