ரஷ்யா hypersonic ஏவுகணையை யூக்கிறேனில் ஏவியது

ரஷ்யா hypersonic ஏவுகணையை யூக்கிறேனில் ஏவியது

இந்த மாதம் 7ம் திகதி ரஷ்யா தனது Zircon என்ற hypersonic ஏவுகணையை யூக்கிறேன் மீது ஏவியதாக யூக்கிறேன் கூறியுள்ளது. அப்படியாயின் ரஷ்யா Zircon வகை hypersonic ஏவுகணையை யுத்த முனையில் பயன்படுத்தியது இதுவே முதல் தடவை. Zircon ஏவுகணை Mach 8 (மாக் 8) வேகத்தில் சென்று குறியை தாக்க வல்லது. அதாவது இது ஒலியின் வேகத்திலும் 8 மடங்கு வேகத்தில் (9,900 km/h) செல்வது. இவ்வளவு வேகத்தில் செல்லும் ஏவுகணையை தடுத்து அழிக்க தடுப்பு […]

கடந்த ஆண்டு 870,000 பேருக்கு அமெரிக்க குடியுரிமை

கடந்த ஆண்டு 870,000 பேருக்கு அமெரிக்க குடியுரிமை

2023ம் ஆண்டு சுமார் 870,000 வெளிநாட்டவர் அமெரிக்க குடியுரிமை (citizenship) பெற்றுள்ளனர். அங்கு பெண் ஒருவருக்கு சராசரியாக 1.64 குழந்தைகள் மட்டுமே கிடைப்பதால் குடிவரவும் சனத்தொகையை தக்கவைக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் 110,000 பேர் மெக்ஸிக்கோ நாட்டில் இருந்து சென்றவர்கள். இவர்கள் கடந்த ஆண்டு குடியுரிமை பெற்றோர் தொகையின் 12.7% ஆகின்றனர். இரண்டாம் இடத்தில் இந்தியர் உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 59,100 இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்று உள்ளனர். இவர்கள் பங்கு 6.7% ஆக .உள்ளது. மூன்றாம் […]

இலங்கை விமான நிலையங்கள் அதானி கைக்கு?

இலங்கை விமான நிலையங்கள் அதானி கைக்கு?

இலங்கையின் நீர்கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையம், இரத்மலானை விமான நிலையம், மத்தல ராஜபக்ச விமான நிலையம் ஆகிய 3 விமான நிலையங்களையும் இயக்கம் உரிமை இந்தியாவின் அதானி (Adani) நிறுவனத்துக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இலங்கை மக்களுக்கு அதிக நன்மை தரக்கூடிய முறையில் பகிரங்க கேள்விகள் மூலம் முதல் தரமான நிறுவனத்தை தெரிவு செய்யாது பிரதமர் மோதியின் விருப்பத்துக்கு ஏற்பவே அதானி நிறுவனம் 3 விமான நிலையங்களையும் கைக்கொள்கிறது என்று நம்பப்படுகிறது. அதானி தற்போது இந்தியாவின் 8 விமான […]

இம்ரான் கான் சிறையில், அவர் கட்சி முன்னனியில்

இம்ரான் கான் சிறையில், அவர் கட்சி முன்னனியில்

தேர்தல் காலத்தில் முன்னாள் பாகிஸ்தான் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரின் PTI கட்சி மிரட்டப்பட்ட நிலையில் அவரின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டோர் பலரும் வென்றுள்ளனர். இதுவரை வெளியிடப்பட்ட 250 முடிவுகளின்படி இம்ரானின் PTI கட்சி ஆதரவாளர் 99 பேர் வென்றுள்ளனர். PMLN கட்சி 71 ஆசனங்களை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் பெனர்சிஸ் பூட்டோவின் மகனின் தலைமையை கொண்ட PPP கட்சி 53 ஆசனங்களை வென்றுள்ளது. ஏனைய கட்சிகள் 27 ஆசனங்களை வென்றுள்ளன. பாகிஸ்தான் […]

உலகம் எங்கும் பண வீக்கம், சீனாவில் பண சுருக்கம் 

உலகம் எங்கும் பண வீக்கம், சீனாவில் பண சுருக்கம் 

உலகம் எங்கும் பண வீக்கம் (inflation) அந்த நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கையில் சீனாவில் பண சுருக்கம் (deflation) சீனாவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. மிகையான inflation, deflation இரண்டுமே விருப்பத்துக்கு உரியன அல்ல. சீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாத consumer prices index (CPI) கணியத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் CPI 0.8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. உணவு பொருட்களின் விலைகளை தவிர்த்து கணித்தால் CPI 0.4% ஆல் அதிகரித்து உள்ளது. அவ்வகை வாசிப்பு நலமானது. சீனாவின் […]

தென் கொரியாவில் குழந்தைக்கு $75,000 சன்மானம்

தென் கொரியாவில் குழந்தைக்கு $75,000 சன்மானம்

தென் கொரியாவின் Booyoung Group என்ற கட்டுமான நிறுவனம் தனது ஊழியர்கள் பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் $75,000 சன்மானம் வழங்க முன்வந்துள்ளது. பணம் பெறும் ஊழியர் தாயாக அல்லது தந்தையாக இருக்கலாம். இந்த விபரம் திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2021ம் ஆண்டு முதல் திங்கள் வரை அதன் ஊழியர்களுக்கு பிறந்த 70 குழந்தைகளுக்கும் கூடவே $75,000 வழங்கப்படவுள்ளது. இதற்கு மட்டும் மொத்தம் $5.25 மில்லியன் செலவாகும். 2022ம் ஆண்டில் தென் கொரியாவில் பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 0.78 ஆக […]

மீண்டும் அமெரிக்க தளம் மீது தாக்குதல், 6 Kurdish பலி

மீண்டும் அமெரிக்க தளம் மீது தாக்குதல், 6 Kurdish பலி

சிரியாவின் கிழக்கே அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஞாயிறு இடம்பெற்ற drone தாக்குதலுக்கு அந்த தளத்தில் இருந்த அமெரிக்க ஆதரவு கொண்ட 6 Kurdish குழுவினர் பலியாகி உள்ளனர். அண்மையில் ஜோர்டானில் இருந்த அமெரிக்க தளம் ஒன்றின் மீது செய்யப்பட்ட தாக்குதலுக்கு 3 அமெரிக்க படையினர் பலியாகி இருந்தனர். இதனால் ஆவேசம் கொண்ட அமெரிக்கா பெருமளவு தாக்குதல்களை ஈரான் ஆதரவு கொண்ட குழுக்கள் மீது செய்தது. ஆனாலும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. […]

யூக்கிறேன் ஆண்களும் நாட்டை விட்டு தப்பியோட்டம்

யூக்கிறேன் ஆண்களும் நாட்டை விட்டு தப்பியோட்டம்

சுமார் இரண்டு ஆண்டுகளாக யுத்தத்தில் மாண்டுள்ள யூக்கிறேனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையான ஆண்கள் பெருமளவில் மேற்கு நாடுகளை நோக்கி தப்பி ஓடுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஆக்கிரமித்த பின் யூக்கிறேன் 18 வயது முதல் 60 வயது வரையானோர் நாட்டை விட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் இறுதி முடிவு எதுவென்று தெரியாத யுத்தத்தில் இணைய விரும்பாமலே மேற்படி ஆண்கள் தப்பி ஓடுகின்றனர்.  […]

அமெரிக்கா இந்தியாவுக்கு $4 பில்லியன் ஆயுத விற்பனை

அமெரிக்கா இந்தியாவுக்கு $4 பில்லியன் ஆயுத விற்பனை

அமெரிக்கா இந்தியாவுக்கு சுமார் $4 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விருப்பம் 2023ம் ஆண்டு பிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தியா அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை கைக்கூலி கொலையாளி மூலம் கொலை செய்ய முனைந்தமை அறியப்பட்டவுடன் அமெரிக்க ஆயுத Senate committee விற்பனையை இடைநிறுத்தி இருந்தது. ஆனாலும் அமெரிக்காவின் சீனாவுடனான போட்டிக்கு இந்தியா அவசியம் என்பது விற்பனையை முன்னெடுக்க காரணமாகிறது. விற்பனை செய்யப்படும் பொருட்களில் பின்வருவனவும் அடங்கும்: 1) […]

மிக பலமான நாடுகள்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா

மிக பலமான நாடுகள்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா

அமெரிக்காவின் Forbes என்ற செய்தி நிறுவனம் தயாரித்த 2024ம் ஆண்டுக்கான மிக பலமான 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியன முறையே 1ம், 2ம், 3ம் இடங்களில் உள்ளன. இந்த கணிப்புக்கு பின்வரும் 5 பிரதான காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டு உள்ளன: 1) தலைமைத்துவம், 2) பொருளாதார ஆளுமை, 3) அரசியல் ஆளுமை, 4) சர்வதேச அணி ஆளுமை, 5) இராணுவ ஆளுமை. பலம் கொண்ட முதல் 10 நாடுகள், அவற்றின் GDP வருமாறு: […]

1 33 34 35 36 37 338