கருங்கடலின் (Black sea) வடக்கே அமைந்துள்ள Crimea (கிரைமிய) பல நூற்றாண்டு காலமாக இரத்தக்களங்கள் கண்ட குடா. மொங்கோலியன் (Mongolian) முதல் ஒற்றமன் (Ottoman) வரை, ரஷ்யன் முதல் ஜேர்மன் வரை எல்லோரும் அவ்வப்போது கைப்பற்றி ஆண்ட குடா இது. இரண்டாம் உலக யுத்தத்தின் முன் Crimea ரஷ்யாவின் கையில் இருந்தது. யுத்த முடிவில் Ukraine (யுக்கிரைன்) USSR இன் அங்கமாக்கப்பட்டபோது Crimea, அலுவலக முறையில் Ukraine இன் பாகமானது. 1991 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் […]
ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் நடைபெற்றுவந்த 2014 ஆம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக் இன்று ஞாயிறுக்கிழமை நிறைவு பெற்றது. ஆரம்ப விழாவும், நிறைவு விழாவும் தொடங்கிய நேரம் இரவு 8:14. இதை 24-மணி முறைப்படி கூறின் 20:14 (இது 2014 ஆம் ஆண்டை பிரதிபலிக்கிறது). நிறைவு விழாவின்போது ஒலிம்பிக் கொடி தென்கொரியாவிடம் கையளிக்கப்பட்டது. அடுத்த Winter ஒலிம்பிக் தென்கொரியாவில் உள்ள Pyeongchang என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டில் நடைபெறும். விழாவை நடாத்திய ரஷ்யா முன்னிலையில் மொத்தம் […]
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் யுக்கிரெனை தன்வசமாக்கியது சோவியத் யூனியன் (USSR). 1991 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் உடைவின் பின், மீண்டும் யுக்கிரேன் தனி நாடானது. அப்படி அது தனி நாடானாலும் தொடர்ந்தும் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான cold-war இல் சிக்கி எரிகிறது யுக்கிரேன். யுக்கிரேனில் இரண்டு பிரதான அணிகள்; ஒன்று ஐரோப்பிய அணியின் வளர்ப்பு, மற்றையது ரஷ்யாவின் வளர்ப்பு. யுக்கிரேனின் சனத்தொகையின் 17% ரஷ்யர், பெரும்பாலும் நாட்டின் கிழக்கே வாழ்பவர்கள். தற்போது அங்கே […]
F-35 அல்லது Joint Strike Fighter என்று அழைக்கப்படும் யுத்த விமானம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பல மேற்கு நாட்டு படைகளுக்கு பலம் ஊட்டப்போகும் அடுத்த சந்ததி யுத்த விமானம். தரைப்படைக்கு ஒருவகை யுத்தவிமானம், வான் படைக்கு இன்னொரு வகை விமானம், கடல் படைக்கு (aircraft carrier) பிறிதொரு விமானம் என்றெல்லாம் இல்லது எதிர்வரும் காலத்தில் முப்படைகளும் இந்த F-35 என்ற ஒருவகை விமானத்தை, சில சிறிய மாற்றங்களுடன், மட்டுமே கொண்டிருக்கும். தொழில்நுட்ப்பத்தில் மிகையான […]
இந்த வருடம் ஜப்பானில் வழமைக்கு மாறாக அதிக snow வீழ்ச்சி இடம்பெறுகிறது. குறிப்பாக ஜப்பானின் பசுபிக் கரையோரமே இவ்வாறு அதிக snow வை பெறுகிறது. ஜப்பானின் பெருநகர் ரோக்கியோவுக்கு (Tokyo) மேற்காகவுள்ள நகரான Kofu சனிக்கிழமை காலை 6 மணிவரை 1 மீட்டருக்கும் அதிகமான snow வை பெற்றுள்ளது. கடந்த 120 வருட காலத்தில் இதுவே அதிகம் ஆகும். இங்கு இவ்வாறான தரவுகள் பதியப்படுவது 120 வருடங்களின் முன்னரே ஆரம்பமாகியது. இங்கு 1998 இல் 49 cm […]
மாஒ தலைமையிலான சீன கம்யூனிஸ் கட்சியின் (Chinese Communist Party) பெரும் படையெடுப்புக்கு முகம் கொடுக்க முடியாத சீன தேசிய கட்சியினர் (Chinese National Party அல்லது KuoMinTang) அதன் தலைவர் ChiAng Kai-Sheck உடன் தாய்வான் என்ற தீவுக்கு தப்பினர். சுமார் 2 மில்லியன் KMT உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தப்பியதாக கூறப்படுகிறது.1949 முதல் 1987 வரை தாய்வானில் KMT தனிக்கட்சி ஆட்சி செய்து வந்திருந்தனர். பின்னர் அங்கு பல கட்சி அரசியல் உருவானது. தாய்வான் தன்னை […]
2014 ஆம் ஆண்டில் சராசரி ஜப்பானியர் தமது மொத்த வருட வருமானத்தின் 41.6% ஐ வரியாக செலுத்துவர் என கணிக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் இங்கு தனிநபர் ஒருவரின் வரி அவரது மொத்த வருமானத்தின் 24.3% ஆக மட்டுமே இருந்துள்ளது. இந்த அதீத மாற்றத்துக்கு காரணம் ஜப்பானில் அதிகரித்துவரும் முதியோர் விகிதமும் அவர்களுக்கு வழங்கும் சேவைகளின் செலவுகளே. இங்கு சிறு தொகை உழக்கும் வயதினரின் வரியில் பெரும் தொகை முதியோருக்கு சேவை வழங்கவேண்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டில் […]
மத்திய அமெரிக்காவுக்கு கிழக்காக உள்ள அழகிய தீவுகளில் ஒன்று Puerto Rico (போட்ரோ ரிக்கோ). இது அமெரிக்காவுக்கு சொந்தமானதோர் ‘அரைகுறை’ மாநிலம் (state). 1898 இல், அமெரிக்க-ஸ்பெயின் யுத்த முடிவில், அதுவரை ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருந்த Puerto Rico, Philippines மற்றும் Guam ஆகிய இடங்கள் அமெரிக்கா வசமானது. 1917 இல் Puerto Rico பிரசைகளுக்கு அமெரிக்க பிரசைகள் உரிமை (citizenship) வழங்கப்பட்டது. ஆனால் Puerto Rico வுக்கு மற்றைய அமெரிக்க states களுக்கு உள்ள அதிகாரம் […]
இந்தியா விரைவில் 180 நாட்டு பிரசைகளுக்கு இந்தியாவை வந்தடையும்போது 30-நாள் விசா வழங்கவுள்ளது. உல்லாச பயணிகளிடம் இருந்து பெறும் வருமதியை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கு காரணம். இந்த வசதி சிங்கப்பூர், ஜப்பான், வியட்னாம், பிலிப்பீன், பர்மா, நியூ சீலாந்து, பின்லாந்து, கம்போடியா உட்பட்ட 11 நாடுகளுக்கு ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த சலுகை இலங்கை, பாகிஸ்தான், ஈரான், ஈராக், சீனா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, நைஜீரியா மற்றும் சுடான் போன்ற எட்டு நாட்டவருக்கு வழங்கபப்பட மாட்டாது. இந்த எட்டு […]