இந்தியாவில் இருந்து இந்திய கனடியருக்கு பண மிரட்டல் 

இந்தியாவில் இருந்து இந்திய கனடியருக்கு பண மிரட்டல் 

கனடாவின் எட்மன்டன் பகுதியில் வீடு கட்டும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இந்தியாவில் இருந்து பண மிரட்டல்கள் வருவதாகவும், அடிபணியாதோர் மீது தீ வைப்பு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் Dave Paton என்ற Edmonton Police அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு மிரட்டல்களுக்கு உள்ளானோரை தம்முடன் தொடர்புகொண்டு விபரங்களை வழங்குமாறும் எட்மன்டன் போலீசார் கேட்டுள்ளனர். தற்போது 5 பண மிரட்டல், 15 தீவைப்பு, 7 துப்பாக்கி மூல வன்முறைகள் ஆகியன எட்மன்டன் போலீசால் விசாரணை செய்யப்படுகின்றன. அத்துடன் […]

சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைது, இலஞ்சம் காரணம்

சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைது, இலஞ்சம் காரணம்

சிங்கப்பூர் அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் இலஞ்ச குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது 27 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர் மொத்தம் $160,000 பெறுமதியான விமான பயணம், விடுதி, Grand Prix formula 1 அனுமதி ஆகியவற்றை இலவசமாக Ong Beng Seng என்ற வர்த்தகரிடம் இருந்து பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அதேவேளை தனது அமைச்சர் பதவியையும் விட்டு நேற்று வியாழன் விலகியுள்ளார்.  […]

ஈரானுள் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்

ஈரானுள் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான் உள்ளே நிலைகொண்டிருந்த Jaish al-Adi என்ற ஆயுத குழு மீது ஈரான் செவ்வாய் ஏவுகணை தாக்குதலை செய்ததை தொடர்ந்து பாகிஸ்தான் இன்று வியாழன் ஈரானில் நிலைகொண்டுள்ள Baluch Liberation Army என்ற ஆயுத குழு மீது ஏவுகணை தாக்குதல் செய்துள்ளது. ஈரான் தனது தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்று கூறியதை போலவே பாகிஸ்தானும் தனது தாக்குதல் ஈரானுக்கு எதிரானது அல்ல என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள […]

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான்-பாகிஸ்தான் எல்லையோரம் பாகிஸ்தான் உள்ளே இருந்த Jaish al-Adi என்ற ஆயுத குழு மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை செய்துள்ளது.  சுனி இஸ்லாமிய ஆயுத குழுவான Jaish al-Adi சியா இஸ்லாமிய ஈரானில் பல தாக்குதல்களை செய்திருந்தது. ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நலமான தொடர்பாடல் உண்டு. இந்நிலையில் ஈரான் பாகிஸ்தான் உள்ளே பாகிஸ்தானுக்கு முன்னறிவித்தல் வழங்காது தாக்குதல் செய்வது எதிர்பார்க்காத ஒன்று. அறிவிப்பு இன்றி செய்யப்பட்ட இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

போட்டியில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி

போட்டியில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி

இந்த ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முயற்சிகளை கைவிட்டார் விவேக் ராமசாமி. Republican கட்சி சார்பில் போட்டியிட தான் தெரிவு செய்யப்படமாட்டார் என்பதை அறிந்தே இவர் போட்டியில் இருந்து விலகினார். திங்கள் அயோவா மாநிலத்தில் இடம்பெற்ற உட்கட்சி தேர்தலில் இவர் 4ம் இடத்தை அடைந்திருந்தார். அங்கு இவருக்கு 7.1% வாக்குகளே கிடைத்தன. போட்டியில் இருந்து வெளியேறிய விவேக் 51.3% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ள ரம்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தான் சனாதிபதி ஆக […]

ஈராக் மொஸாட் நிலையத்தை ஈரான் தாக்கியது

ஈராக்கின் வடக்கே உள்ள எர்பில் (Erbil) என்ற நகரில் இயங்கிய இஸ்ரேலின் மொஸாட் உளவு நிலையத்தின் மீது ஈரான் திங்கள் ஏவுகணைகள் கொண்டு தாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. Kurdish மக்கள் அதிகம் வாழும் ஈராக்கின் இப்பகுதி அமெரிக்காவின் பலத்த ஆதரவை கொண்டது. Kurdish மக்கள் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். சிரியாவில் நிலை கொண்டிருந்த ஈரானிய படைகள் மீது இஸ்ரேல் […]

அயோவா மாநிலம் ரம்பிடம், மீண்டும் சனாதிபதி?

இன்று அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில் இடம்பெறும் Republican கட்சி சார்பில் போட்டியிடும் 2024 ஆண்டு சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் ரம்ப் முன்னணியில் உள்ளார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி ரம்ப் 51.3% வாக்குகளையும் (2,153 வாக்குகள்), Ron DeSantis 21.5% வாக்குகளையும் (904 வாக்குகள்), நிக்கி Haley 19.2% வாக்குகளையும் (807 வாக்குகள்), விவேக் ராமசாமி 7.1% (296 வாக்குகள்) வாக்குகளையும் பெற்று உள்ளனர். ஏனையோர் புறக்கணிக்கத்தக்க வாக்குகளை பெற்றுள்ளனர். அயோவா முடிவுகள் Republican […]

தாய்வானில் ஆளும் கட்சியிடம் மீண்டும் சனாதிபதி பதவி

தாய்வானில் ஆளும் கட்சியிடம் மீண்டும் சனாதிபதி பதவி

தாய்வானில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஆளும் DPP கட்சியின் உறுப்பினர் William Lai Chingte மீண்டும் சனாதிபதியாக வென்றுள்ளார்.  சீனாவுடன் முரண்படும் இந்த கட்சி அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டது. Lai தற்போது உதவி சனாதிபதி ஆவார். எதிர் கட்சியான KMT தமது தோல்விக்கு புதிதாக போட்டியிட்ட TPP கட்சியை குற்றம் சாட்டியுள்ளது. TPP வேட்பாளர் பெருமளவு வாக்குகளை பிரித்து எடுத்துள்ளது. இதனால் மேலும் 4 ஆண்டுகளுக்கு சீன-தாய்வான் முறுகல் நிலை தொடரும்.

Houthi மீது அமெரிக்கா, பிரித்தானியா தாக்குதல்

Houthi மீது அமெரிக்கா, பிரித்தானியா தாக்குதல்

யெமென் (Yemen) ஆயுத குழுவான கூத்தி (Houthi) மீது அமெரிக்காவும், பிரித்தானியாவும் இன்று தாக்குதல் செய்துள்ளன. நெதர்லாந்து, அஸ்ரேலியா, கனடா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்த தாக்குதல்களுக்கு உதவி செய்துள்ளன. யெமென் நாட்டின் பெரும் பகுதியை தம் கட்டுப்பாட்டுள் வைத்துள்ள கூத்தி ஆயுத குழு காசா பலஸ்தீனியருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்கள் மீது தாக்குதல்கள் செய்கின்றன. செங்கடல் ஊடான வர்த்தக கப்பல் போக்குவரத்து தடைப்படுவதாலேயே தாம் தாக்குதல்களை செய்வதாக […]

1 30 31 32 33 34 333