தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பாண்டுச்சேரி ஆகிய நான்கு இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன் அசாம் மாநிலத்தில் தேர்தல் அண்மையில் முடிவடைந்து உள்ளது. . இந்த ஐந்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையாளரால் மொத்தம் 113 கோடி இந்திய ரூபாய்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வாக்குக்களை கொள்வனவு செய்யக்கூடும் என்ற அச்சத்தாலேயே இவ்வாறு சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. பணம், மதுபானம் அல்லது பொருள்பண்டம் வழங்கி ஆதரவு எடுப்பதை தவிர்க்கவே இந்த […]
அண்மையில் வெளியான விஜயின் திரைப்படமான ‘தெறி’ திரையிடப்படல் கனடாவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. Scarborough, Brampton, Mississauga ஆகிய இடங்களில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திரை அரங்கு ஒன்றில் கெடுதியான வாயு பரவல் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, திரையிடலும் நிறுத்தப்பட்டது. பின்னர் Richmond Hill நகரில் இன்று மேலும் ஒரு திரையரங்கு அப்படத்தை திரையிடலை நிறுத்தி உள்ளது. பொலிசார் சம்பவத்தை விசாரணை செய்கிறார்கள். . முதல் 6 நாட்களில், உலக அளவில் இப்படம் சுமார் […]
USSR காலத்தில் ரஷ்யாவின் விண்கலங்கள் Kazakhstan நாட்டில் உள்ள ஏவுதளம் ஒன்றில் இருந்தே ஏவப்பட்டன. அப்போது Kazakhstan USSRஇன் அங்கமாகும். ஆனால் USSR உடைவின் பின் ரஷ்யா Kazakhstanனில் உள்ள ஏவுதளத்தை பயன்படுத்த வருடம் ஒன்றுக்கு சுமார் $117 மில்லியன் வாடகை செலுத்துகிறது. . அவ்வாறு வாடகை செலுத்துவதை தவிர்க்கவும், தம்நாட்டின் முழுக்கட்டுப்பாட்டில் ஏவுதளத்தை வைத்திருக்கவும் புதிதாக ஒரு தளத்தை ரஷ்யா கட்டியுள்ளது. குறைந்தது $5 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்த புதிய தளத்தில் இருந்து இன்று […]
கடந்த 21 ஆம் திகதி Prince என்று ஆங்கில இசை உலகில் அழைக்கப்படும் Prince Rogers Nelson என்பவர் மரணமாகியிருந்தார். அமெரிக்காவின் Minneapolis நகரில் பிறந்த இவர் இசைதுறை மூலம் பெருமளவு பணம் சம்பாதித்திருந்தார். ஆனால் இவருக்கு குடும்பமோ, பிள்ளைகளோ இல்லை. . இன்று அவரின் சகோதரி Tyka Nelson நீதிமன்றம் ஒன்றுக்கு வழங்கிய தரவுகளின்படி Prince தனது சொத்துக்குளுக்கு வாரிசு யார் என்பதை குறிக்க உயில் எதையும் எழுதி வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதனால் இவரின் […]
இந்தியாவை விட்டு தப்பியோடி பிரித்தானியாவில் வாழும் இந்திய வர்த்தகர் Vijay Mallyaவின் இந்திய கடவுச்சீட்டை இந்தியா இரத்து செய்துள்ளது. இவர் இந்திய வங்கிகளில் சுமார் $1.3 பில்லியன் கடன் பெற்று பின் அவற்றை திருப்பி செலுத்தாது தப்பி ஓடியுள்ளார். இவர் தற்போது பிரித்தானியாவில் உள்ள சுமார் $15 மில்லியன் பெறுமதியான மாளிகையில் வாழ்கிறார். . Kingfisher விமானசேவை நட்டத்தில் மூழ்கிய இவரின் மிகப்பெரிய நிறுவனம். அத்துடன் மதுபான நிறுவனம், Formula 1 காரோட்ட குழு என வேறு […]
அமெரிக்க நாணய தாள்களை தற்போது அலங்கரிப்பது வெள்ளை இன முன்னாள் தலைவர்களே. அமெரிக்காவின் $1 தாளில் இருப்பது George Washington (முதலாவது ஜனாதிபதி), $5 தாளில் இருப்பது Abraham Lincoln, $10 தாளில் இருப்பது Alexander Hamilton, $20 தாளில் இருப்பது Andrew Jackson, $50 தாளில் இருப்பது Ulysses Grant, $100 தாளில் இருப்பது Benjamin Franklin. . சிறுபான்மை இனங்களை உள்ளடக்கவும், அமெரிக்காவில் கருப்பு இனத்தின் பங்களிப்பை அடையாளப்படுத்தவும் அமெரிக்கா Harriet Tubman (1822 […]
உலகிலேயே மிகப்பெரிய வைரமாகிய கோகினூர் (koh-i-noor) வைரம் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்கிறது தற்போதைய இந்திய அரசு. . இந்த வைரத்தின் ஆரம்பம் திடமாக தெரியாதுவிடினும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள Guntur என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது. வேறு சிலர் இதை 5,000 ஆண்டுகள் பழமையானது (3000 BC) என்கின்றனர். . ஆரம்பத்தில் 793 கரட் (158.6 கிராம்) எடை கொண்ட இது பல்வேறு ஆட்சியாளர் கைமாறி இறுதியில் […]
இன்று ஞாயிரு கட்டாரின் (Qatar) உள்ள டோக (Doha) நகரில் இடம்பெற்ற OPEC பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம் வீழ்ந்துவரும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இந்த கூட்டம் இடம்பெற்று இருந்தது. ஆனால் எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடு ஒன்றான ஈரான் இந்த கூட்டத்தில் பங்கு கொண்டிருக்கவில்லை. சியா முஸ்லீம் நாடான ஈரான் தனது உற்பத்தியை கட்டுப்படுத்தாதவிடத்து சுனி முஸ்லீம் நாடான சவுதியும் தனது எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த முடிவு எடுக்கவில்லை. . செய்தி […]
கடந்த சில நாட்களாக பசுபிக் கடலின் மேற்கேயும், கிழக்கேயும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் பல சிறிய அளவிலானவை என்றாலும் சில மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்களாக இருக்கின்றன. . தென் அமெரிக்க நாடான எக்குவடோரை இன்று சனிக்கிழமை 7.8 Richter அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சுமார் 50 செக்கன்கள் இடம்பெற்ற இதற்கு இதுவரை 28 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. US Geological Service இந்த நடுக்கத்தின் மையம் சுமார் 19 km நிலத்துக்கு அடியில் […]
அண்மையில் சவுதியின் தலைவர் King Salman எகிப்து சென்றபோது அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், Tiran நீரிணைக்கு மேலாக, பாலம் ஒன்று அமைக்கும் திட்டம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உண்மையில் இந்த அறிவிப்புக்கு பின்னால் பல இரகசியங்கள் இருந்தமை இப்போது தெரியவந்துள்ளது. . சவுதிக்கும் எகிப்துக்கும் இடையில், Tiran நீரிணையும் செங்கடலும் சந்திக்கும் பகுதியில் இரண்டு குடியிருப்புகள் அற்ற தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் 1950 ஆம் ஆண்டு முதல் எகிப்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் […]