சீன வானில் பறந்த 6ம் தலைமுறை யுத்த விமானம் 

சீன வானில் பறந்த 6ம் தலைமுறை யுத்த விமானம் 

சீனா 6ம் தலைமுறை யுத்த விமானம் ஒன்றை தயாரிக்கிறது என்று செய்திகள் முன்னர் கசிந்து இருந்தாலும் இன்று வியாழன் அந்த யுத்த விமானம் Chengdu பகுதில் பறந்ததை பலரும் கண்டுள்ளனர். அவர்கள் பிடித்த வீடியோக்கள் தற்போது இணையம் எங்கும் பரவி உள்ளன. இந்த 6ம் தலைமுறை விமானத்துடன் ஒரு J-20 விமானமும் பறந்துள்ளது. அமெரிக்க யுத்த விமானங்களை ஒத்த தரம் கொண்ட சீனாவின் 5ம் தலைமுறை யுத்த விமானங்களான J-20, J-35 ஆகிய இரண்டும் ஏற்கனவே சேவையில் இருந்தாலும் […]

சீனாவில் 300 பில்லியன் kWh நீர் மின் அணை, இந்தியா கவலை

சீனாவில் 300 பில்லியன் kWh நீர் மின் அணை, இந்தியா கவலை

சீனா திபெத்தில் ஓடும் Yarlung Zangbo என்ற ஆற்றை மறித்து, அணைக்கட்டு அமைத்து, உலகத்திலேயே மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையத்தை கட்ட அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் இந்தியாவை விசனம் கொள்ள வைத்துள்ளது.  இந்த அணைக்கட்டு நிரம்பி, மிஞ்சிய நீரே இந்தியாவுக்கு வரும். அது இந்திய விவசாயத்துக்கு பாதகமாக அமையும். அத்துடன் பிரம்மபுத்திரா ஆற்றின் தரமும் நலிவடையும். இயற்கையாக ஓடும் ஆறு அடியே உள்ள கனியங்கள் முதல் நீரில் வாழும் உயிரினங்கள் வரை கீழ் நோக்கி […]

கனடாவில் flag-poling விசா விண்ணப்ப நடைமுறை நிறுத்தப்பட்டது 

கனடாவில் flag-poling விசா விண்ணப்ப நடைமுறை நிறுத்தப்பட்டது 

ஏற்கனவே தற்காலிக கனடிய விசா கொண்ட வெளிநாட்டவர் Flag-poling என்ற முறையை கையாண்டு தமது விசாவை புதுப்பிக்கும் விண்ணப்பத்தை துரிதப்படுத்துவதை கனடா திங்கள் இரவு (Dec 23 at 11:59pm) முதல் நிறுத்தியுள்ளது. உதாரணமாக கனடாவில் தற்கலிக மாணவ அல்லது வேலைவாய்ப்பு விசாவை கொண்ட ஒரு வெளிநாட்டவர் அந்த விசாவை புதுப்பிக்க விரும்பின் அதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்தல் அவசியம். இந்த விசா புதுப்பித்தலுக்கு தற்போது சராசரியாக 170 தினங்கள் தேவைப்படுகிறது. அதனால் மேற்படி தற்காலிக விசா கொண்ட சிலர் falg-poling முறையை பயன்படுத்துகின்றனர். இவர்கள் […]

ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் கூறும் பங்களாதேஷ் 

ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் கூறும் பங்களாதேஷ் 

தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் முன்னாள் பங்களாதேச பிரதமர் ஹசீனாவை (Sheikh Hasina) பங்களாதேசுக்கு நாடு கடத்த பங்களாதேசம் திங்கள் சட்டப்படி கேட்டுள்ளது. இந்த அழைப்பு இந்தியாவை மேலும் சங்கடத்தில் சிக்க வைத்துள்ளது. 2013ம் ஆண்டு இந்தியாவும், பங்களாதேசும் நாடு கடத்தல் இணக்கம் ஒன்றை செய்திருந்தன. அப்போது பங்களாதேசில் ஒளிந்திருந்த பல இந்திய குற்றவாளிகளை இந்தியா எடுக்க இந்த இணக்கம் துணையாக இருந்தது. உதாரணமாக 2015ம் ஆண்டு Anup Chetia என்ற United Liberation Front of Assam […]

ரம்பின் அடுத்த உளறல்; Greenland பறிப்பு

ரம்பின் அடுத்த உளறல்; Greenland பறிப்பு

அடுத்த ஆண்டு முதல் அமெரிக்க சனாதிபதியாக ஆட்சி செய்யவுள்ள ரம்ப் மேலும் ஒரு உளறலை ஞாயிறு செய்துள்ளார். டென்மார்க்கின் (Denmark) அங்கமாக, ஆனால் சுதந்திரமாக இயங்கும் கிறீன்லாந்து (Greenland) அமெரிக்காவின் உரிமை ஆவது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பிரதானமானது என்றும் அதனால் அதை அமெரிக்கா கைக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதிலடி வழங்கிய கிறீன்லாந்து தீவின் பிரதமர் பிரதமர் Mute Egede கிறீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.  கிறீன்லாந்து தீவு கடந்த 600 ஆண்டுகளாக டென்மார்க்கின் உரிமையில், ஒரு சுதந்திர ஆட்சியாக உள்ளது. இங்கே […]

Honda, Nissan கார் நிறுவனங்கள் ஒன்றாக இணைய தீர்மானம்

Honda, Nissan கார் நிறுவனங்கள் ஒன்றாக இணைய தீர்மானம்

ஜப்பான் கார் நிறுவனங்களான Honda வும் Nissan னும் ஒன்றாக இணைய தீர்மானித்துள்ளன. வளர்ந்து வரும் சீன கார் நிறுவனங்கள் தொடுக்கும் போட்டியை கையாளவே இந்த இரண்டு மிகப்பெரிய கார் நிறுவனங்களும் இணைய முயற்சிக்கின்றன. ஜப்பானின் Mitsubishi கார் நிறுவனம் ஏற்கனவே Nissan நிறுவனத்துடன் கூட்டாக இயங்குகிறது. அதனால் மேற்படி இணைவு Honda, Nissan, Mitsubishi இணைவாகவே இருக்கும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தரமான ஜப்பான் கார்கள் உலகில் நன் மதிப்பை பெற்று வேகமாக வளர்ந்து அமெரிக்க கார் தயாரிப்புகளை வீழ்த்தின. தற்போது ஜப்பானின் கார் […]

பனாமா கால்வாயை கைப்பற்றுவாராம் ரம்ப், புதிய உளறல்

பனாமா கால்வாயை கைப்பற்றுவாராம் ரம்ப், புதிய உளறல்

அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி மீண்டும் ஒரு உளறலை சனிக்கிழமை விடுத்துள்ளார். பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்படி பனாமாவிடம் கேட்க உள்ளாராம் ரம்ப். பனாமா கால்வாய் ஊடே செல்லும் கப்பல்களிடம் பனாமா அரசு மிகையான தொகையை அறவிடுகிறது என்பதே ரம்பின் குற்றச்சாட்டு. அத்துடன் இந்த கால்வாய் “wrong hands” களின் வசமாகிவிடும் என்றும் ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் wrong hands என்று குறிப்பிடுவது சீனாவையே என்று கருதப்படுகிறது. இந்த கால்வாயை அமெரிக்காவே கட்டி இருந்தது. ஆனால் 1999ம் ஆண்டு சட்டப்படி இந்த கால்வாயை பனாமா […]

அமெரிக்காவின் $10 மில்லியன் பயங்கரவாதி நண்பர் ஆனார் 

அமெரிக்காவின் $10 மில்லியன் பயங்கரவாதி நண்பர் ஆனார் 

அமெரிக்கா இதுவரை காலமும் HTS குழுவின் தலைவர் Ahmed al-Sharaa வின் தலைக்கு $10 மில்லியன் bounty வைத்திருந்தது. இவரே தற்போது சிரியாவில் ஆட்சியை கைப்பற்றி உள்ள HTS என்ற ஆயுத குழுவின் தலைவர். Golan Heights வாழ்ந்த இவரின் குடும்பம் 1967ல் இடம்பெற்ற இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் பின் சவுதி சென்று வாழ்ந்தது. பலஸ்தீனர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் படும் அவலங்களை பார்த்த இவர் 2003ம் ஆண்டு சிரியாவில் இருந்து ஈராக் சென்று al-Qaeda in Iraq என்ற அல்கைடாவின் கிளையுடன் இணைந்தார்.ஈராக்கில் இவர் […]

பென்ரகன்: சீனாவின் ஆயுதங்கள் வேகமாக வளர்கின்றன 

பென்ரகன்: சீனாவின் ஆயுதங்கள் வேகமாக வளர்கின்றன 

அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagan) ஆண்டுதோறும் காங்கிரசுக்கு சமர்ப்பிக்கும் எதிரிகளின் படை பலம் தொடர்பான இந்த ஆண்டுக்கான அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் வளர்ச்சியையிட்டு பென்ரகன் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவே தற்போது உலகத்தில் அதிசிறந்த hypersonic (ஒலியின் வேகத்திலும் குறைந்தது 5 மடங்கு வேகத்தில் செல்லும்) ஏவுகணைகளை கொண்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்த ஏவுகணைகள் இந்து-பசிபிக் பகுதிகளில் எந்த குறியையும் தாக்க வல்லன என்கிறது பென்ரகன் அறிக்கை. அமெரிக்காவின் மிகப்பெரிய தளமான குவாம் (Guam) இந்த எல்லைக்குள் அடங்கும். இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு […]

பிரித்தானிய அமைச்சர் பங்களாதேஷ் ஊழலில்?

பிரித்தானிய அமைச்சர் பங்களாதேஷ் ஊழலில்?

பிரித்தானிய முதலீட்டு/பங்கு சந்தையில் ஊழல் இடம்பெறாது பார்த்துக்கொள்ளும் கடமையை உள்ளடக்கிய அமைச்சர் (Treasury’s Economic Secretary) Tulip Siddiq, வயது 42, பங்களாதேஷ் அணுமின் உலை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். Tulip தற்போது பங்களாதேஷில் இருந்து விரட்டப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள Hasina Sheikh என்ற முன்னாள் பிரதமரின் மூத்த அக்காவின் மகள் ஆவார். ஆனால் Tulip பிறந்தது பிரித்தானியாவில். ரஷ்யாவின் உதவியுடன் பங்களாதேஷில் அமைக்கப்படும் Rooppur Power Plant என்ற அணுமின் உற்பத்தி திட்டத்திலேயே மொத்தம் 3.9 பில்லியன் […]