இன்று ஈரான் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்கின

இன்று ஈரான் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்கின

இன்று வெள்ளி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்கின என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் Isfahan நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான FARS அறிவித்துள்ளது. Isfahan ஈரானின் அணு ஆய்வு நிலையம், படை தளம் ஆகியன உள்ள இடம். ஈராக், சிரியா ஆகிய நாடுகளிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன. பாதிப்பு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. சனிக்கிழமை ஈரான் சுமார் 300 கணைகள் கொண்டு இஸ்ரேலை தாக்கி […]

பலஸ்தீன் ஐ.நா. அங்கத்துவதை அமெரிக்கா வீட்டோ மூலம் தடுப்பு 

பலஸ்தீன் ஐ.நா. அங்கத்துவதை அமெரிக்கா வீட்டோ மூலம் தடுப்பு 

பலஸ்தீன் ஐ.நாவில் முழு அங்கத்துவம் கொண்ட நாடாக உரிமை பெறுவதை அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ (veto) வாக்கு மூலம் தடுத்து உள்ளது.  நேற்று வியாழன் 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UN Security Council) இடம்பெற்ற வாக்கெடுப்பில் 12 உறுப்பினர் நாடுகள் ஆதரவாக வாக்களிக்க அமெரிக்கா வீட்டோ மூலம் தீர்மானத்தை தடுத்து உள்ளது. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, பிரித்தானியாவும், சுவிட்சலாந்தும் வாக்களியாது இருந்துள்ளன. […]

ரொரன்டோ $22 மில்லியன் தங்க திருட்டில் 6 பேர் கைது

ரொரன்டோ $22 மில்லியன் தங்க திருட்டில் 6 பேர் கைது

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள Pearson சர்வதேச விமான நிலைய cargo பிரிவிலிருந்து C$ 22 மில்லியன் பெறுமதியான தங்க கட்டிகளும், பணமும் திருடப்பட்டு இருந்தன. அது தொடர்பாக விசாரணைகளை செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து Air Canada விமானத்தில் வந்திருந்த இந்த தங்கம் உள்வீட்டு உதவியுடனேயே திருடப்பட்டுள்ளது என்பதை போலீசார் விரைவில் அறிந்துள்ளனர். திருட்டுக்கு சமர்ப்பித்த கணினி print ஒன்றே உண்மையை […]

இலங்கையில் $1,000 க்கு 10 ஆண்டு உல்லாச பயணிகள் விசா

இலங்கையில் $1,000 க்கு 10 ஆண்டு உல்லாச பயணிகள் விசா

இலங்கை புதிய விசா நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டமும் பயணிகளிடம் இருந்து டாலரை கறக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைகிறது. 180-தின சாதார உல்லாச பயணிகள் விசா (60 தினம்/பயணம்): $75 1-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (90 தினம்/பயணம்): $200 2-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $300 5-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $500 10-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $1,000

இலங்கைக்கு IMF வழங்கும் கடனின் அடுத்த பங்கு பிந்தலாம்

இலங்கைக்கு IMF வழங்கும் கடனின் அடுத்த பங்கு பிந்தலாம்

இலங்கைக்கு IMF வழங்கும் $2.9 பில்லியன் கடனின் அடுத்த பகுதியான $337 மில்லியன் கடன் வழங்கல் பின்போடப்படலாம் என்று .நம்பப்படுகிறது. இலங்கை பிற அரசுகளிடம் இருந்து பெற்ற கடன்களை அடைக்க இணக்கங்கள் ஏற்பட்டு இருந்தாலும், bond மூலம் பெற்ற கடன்களுக்கு இதுவரை இணக்கங்கள் ஏற்படவில்லை. அதனால் IMF வழங்கும் கடனின் அடுத்த வழங்கல் பிந்தலாம் என்று கருதப்படுகிறது. Bond மூலம் கடன் வழங்கியோர் தம் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதை ஏற்க மறுக்கின்றனர். இந்த இழுபறியால் […]

பெய்ஜிங் மரதன் ஓட்ட போட்டியில் குளறுபடி?

பெய்ஜிங் மரதன் ஓட்ட போட்டியில் குளறுபடி?

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற அரை மரதன் (half marathon) போட்டியில் He Jie முதலாம் இடத்தை அடைந்து $5,500 பரிசை பெற்றுள்ளார். ஆனால் அவரின் வெற்றியில் சீனர் சந்தேகம் கொண்டுள்ளனர். இவருக்கு சில அடிகள் பின்னால் வந்த 3 ஆபிரிக்கர் இறுதி கட்டத்தில் முழுமூச்சுடன் ஓடாது சீனர் வெல்ல வழி செய்திருக்கலாம் என்று கருத வைக்கிறது. முடிவுக்கு சில மீட்டர் தூரம் இருக்கையில் ஒரு ஆபிரிக்கர் சீனரை முன்னோக்கி செல்லுமாறும், இன்னோர் ஆபிரிக்கரை மெதுவாக ஓடுமாறும் […]

இந்தியாவில் $557 மில்லியன் பறிமுதல், வாக்கு கையூட்டுக்கானது

இந்தியாவில் $557 மில்லியன் பறிமுதல், வாக்கு கையூட்டுக்கானது

இந்திய தேர்தல் ஆணையாளர் அலுவலகம் கடந்த 45 தினங்களில் 46.5 பில்லியன் இந்திய ரூபாய் ($557 மில்லியன்) பெறுமதியான பணம், மது, போதை போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளது. இவை வாக்காளரின் ஆதரவை சட்டவிரோதமாக கையூட்டு வழங்கி பெற பயன்படுத்தப்பட இருந்தவை என்கிறது தேர்தல் ஆணையாளர் அலுவலகம். 2019ம் ஆண்டில் 34.75 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இம்முறை அத்தொகை 46.5 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது. திங்கள் காங்கிரஸ் கட்சியின் […]

ஈரான் 300 கணைகளை ஏவியது, 99% தடுக்கப்பட்டன

ஈரான் 300 கணைகளை ஏவியது, 99% தடுக்கப்பட்டன

ஏப்ரல் மாதம் 1ம் திகதி இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல் செய்து 13 பேரை கொலை செய்ததை தண்டிக்க சனிக்கிழமை இரவு ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 300 கணைகளை (drones, cruise missiles, ballistic missiles) ஏவியுள்ளது. அவற்றில் 99% கணைகளை அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இஸ்ரேல் கூட்டாக தமது தடுப்பு கணைகள் மூலம் இடைமறித்து தாக்கிஅழித்துள்ளன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள சுமார் 1,700 km தூரத்தை கணைகள் கடக்க எடுத்த […]

ஈரான் 100+ drone களை இஸ்ரேல் நோக்கி ஏவியது

ஈரான் 100+ drone களை இஸ்ரேல் நோக்கி ஏவியது

ஈரான் நூற்றுக்கும் அதிகமான drone களையும் பல ballistic ஏவுகணைகளையும் சனிக்கிழமை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளது. இந்த drone கள் தமது குறிகளை அடைய பல மணித்தியாலங்கள் எடுக்கும். இஸ்ரேலில் அபாய அறிவிப்பு siren ஒலிகள் எழுப்பப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தனது ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை உள்நோக்கி வரும் ஈரானின் ஏவுகணைகளை நோக்கி ஏவியுள்ளது. இஸ்ரேலின் வான் பரப்பு விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பல பயணிகள் திசை திருப்பப்பட்டு உள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக தமது முதலாம் […]

சிட்னியில் கத்தி குத்துக்கு 6 பேர் பலி

சிட்னியில் கத்தி குத்துக்கு 6 பேர் பலி

அஸ்ரேலியாவின் சிட்னி (Sydney) நகரில் இடம்பெற்ற கத்தி குத்துக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். Bondi Junction என்ற இடத்தில் உள்ள Westfield Shopping Centre என்ற வியாபார நிலையத்திலேயே இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்துள்ளது. இதை தனி ஒருவரே செய்ததாகவும் அந்த 40 வயது சந்தேக நபரை அங்கு விரைந்த முதல் போலீசார் சுட்டு கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில காயமடைந்தோர் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறுகின்றனர். அதில் ஒரு 9 மாத குழந்தையும் […]

1 26 27 28 29 30 337