சிலவகை குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க மறுக்கிறார் அமெரிக்கா சனாதிபதி பைடென். அந்த குண்டுகளை இஸ்ரேல் சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்களுக்கு முரணாக பயன்படுத்துகிறது என்ற அச்சமே காரணம். அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை நட்பு நாடுகள் அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமையவே பயன்படுத்த வேண்டும். தவறின் அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்கிறது அமெரிக்க சட்டம். இந்த கிழமை பைடென் அமெரிக்க காங்கிரசுக்கும் இஸ்ரேல் எவ்வாறு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்துகிறது என்பதை சட்டப்படி தெரிவிக்க […]
இலங்கைக்கு விசா வழங்கும் அந்நிய நிறுவனமான VFS Global விசாவின் முதலாம் நுழைவு காலத்தையும் குறைத்து உள்ளதாக விசா பெற்ற பயணிகள் கூறுகின்றனர். இலங்கையின் பழைய ETA விசா வழங்கும் இணையம் முதல் நுழைவுக்கு 6 மாதங்கள் முன்னர் விசாவை பெற வழி செய்தது. அவ்வாறு செய்வது பயணிகள் தமது பயணத்தை திட்டமிட போதிய காலத்தை வழங்கியது. உதாரணமாக ஜூன் மாதம் தனது முதலாம் நுழைவை செய்யவுள்ள பயணி ஜனவரி மாதத்திலேயே ETA மூலம் விசாவை பெற முடியும். ஆனால் VFS Global அந்த காலத்தை […]
இலங்கைக்கான விசா வழங்கும் உரிமையை பெற VFS Global நிறுவனம் $10 மில்லியன் பணத்தை ரணிலின் வரும் தேர்தல் பணிகளுக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் Public Security அமைச்சர் Tiran Alles. தான் இவ்வாறு செய்திகள் பரவுவதை அறிந்து உள்ளதாகவும் ஆனால் அது பொய் என்றும் கூறுகிறார் Tiran. தான் 5 சதமும் பெறவில்லை என்றும் அது மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னர் SAARC நாடுகளுக்கு $25 மட்டுமே உல்லாச பயணனிகளுக்கான விசா […]
இந்திய RAW (Research and Analysis Wing) இந்திய வன்முறை குழுக்களை பயன்படுத்தி படுகொலைகள் செய்கிறது என்று கூறுகிறது அமெரிக்காவின் New York Times செய்தி நிறுவனம். கனடாவில் வைத்து Hardeep Singh Nijjar என்ற சீக்கியரையும் அவ்வாறே RAW படுகொலை செய்திருக்கலாம் என்றும் கூறுகிறது New York Times. வெள்ளிக்கிழமை கனடாவில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் இந்திய குடியினர் என்றும் அவர்கள் வன்முறை குழுக்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கலாம் என்றும் அந்த செய்தி கூறுகிறது. […]
Hardeep Singh Nijjar என்ற சீக்கியரை British Columbia மாநிலத்தின் Surrey நகரில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர் என்ற சந்தேகத்தில் கனடிய போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். இந்த கொலையை இந்திய அரசே செய்வித்து என்று கடந்த ஆண்டு கனடிய பிரதமர் கூறியிருந்தார். கனடிய பிரதமரின் குற்றச்சாட்டை ஆவேசத்துடன் மறுத்தது மோதி அரசு. Kamalpreet Singh (வயது 22), Karanpreet Singh (வயது 28), Karan Brar (வயது 22) ஆகியோரே தற்போது கனடிய போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்கிறது […]
2012ம் ஆண்டு முதல் இலங்கை அரசு இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை ETA என்ற தனது இணையம் மூலமும் செய்து வந்தது. இந்த முறைமை எந்தவித இடர்களும் இன்றி இயங்கி வந்திருந்தாலும் ரணில் அரசு விசா வழங்கும் பணிகளை கடந்த மாதம் முதல் VFS Global என்ற நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. பரிசோதனை வெள்ளோட்டம் எதுவும் செய்யாது இரகசியமாக மறைத்து வைத்து திடீரென நடைமுறை செய்த VFS இணைய கட்டமைப்பு புதன்கிழமை சரிவர இயங்கவில்லை. அதனால் புதன்கிழமை வந்த பயணி ஒருவர் on-arrival விசா […]
இன்று வெள்ளிக்கிழமை முதல் அஸ்ரேலிய பல்கலைக்கழகங்களிலும் காசா பலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவித்து மாணவர் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை அதிகாரிகள் அகற்றும் நோக்கத்தில் தற்போது இல்லை. University of Sydney வளாகத்தில் கடந்த கிழமை ஆரம்பிக்கப்பட்ட முகாம் இடல் தற்போது Melbourne, Canberra உட்பட பல இடங்களுக்கும் பரவி உள்ளது. Council of Australian Jewry காசா ஆதரவு முகாம்களை அகற்றுமாறு கேட்டிருந்தாலும், பல்கலைக்கழக அதிகாரிகள் அவ்வாறு செய்ய மறுத்துள்ளனர். அமெரிக்கா, கனடா போல இங்கும் சிறிதளவு யூத […]
கனடாவின் Toronto நகரில் உள்ள பழம் பெரும் University of Toronto உட்பட மொத்தம் 7 கனடிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் காசா ஆதரவு முகாம்களை ஆரம்பித்து உள்ளனர். University of Toronto மாணவர் முகாம் (encampment) இன்று வியாழன் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை U of T அதிகாரிகள் வளாகத்தில் முகாம் இடுவது சட்டத்திற்கு முரணானது என்று கூறி மாணவர் அனைவருக்கும் ஈமெயில் ஒன்று அனுப்பி இருந்தாலும் மாணவர் இன்று வியாழன் முகாமிட்டுள்ளனர். U of T மாணவர்களுக்கு […]
காசா பலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவித்தும், உடனடி யுத்த நிறுத்தத்தை கேட்டும் Los Angeles நகரில் உள்ள University of California (UCLA) வளாகத்தில் அமைதியாக போராட்டம் செய்த தரப்பு மீது அங்கு திடீரென நுழைந்த முகமூடி அணிந்த இஸ்ரேல் ஆதரவு குழு ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. தடிகளுடன் வந்து தாக்கிய இஸ்ரேல் ஆதரவு குழு பெட்ரோல் குண்டு ஒன்றையும் வீசி உள்ளது. இந்த வன்முறையை அந்த பல்கலைக்கழகத்தை vice-chancellor Mary Osako “horrific of violence occurred at […]
City of Dreams என்ற சூதாட்ட நிலையம் கொழும்பு வருகிறது. Melco நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள இந்த சூதாட்ட நிலையத்துடன் (casino) கூடிய உல்லாச விடுதி (hotel) 2025ம் ஆண்டின் நடுப்பகுதியில் சேவையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட நிலைய முயற்சிக்கு சுமார் $125 மில்லியன் செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த திட்டத்தின் பெறுமதி $1 பில்லியன் வரையில் இருக்கும். இந்த புதிய சூதாட்ட நிலையத்தில் 800 உல்லாச பயணிகள் அறைகள் இருக்கும் என்றும் அதில் அதி […]