யூக்கிறேனுள் நுழைந்து யூக்கிறேன்-ரஷ்ய யுத்தத்தை ஆரம்பித்த ரஷ்யா இன்றி இந்த யுத்தத்தின் சமாதான மாநாடு ஒன்று சுவிட்சலாந்தில் ஜூன் 15ம், 16ம் திகதிகளில் இடம்பெறுகிறது. வழமைபோலவே இந்த மாநாட்டில் மேற்கு நாடுகளும் மேற்கு சார்ந்த நாடுகளும் பங்கு கொள்கின்றன. ரஷ்யா இன்றி மாநாட்டில் அர்த்தமில்லை என்று கூறி சீனா பங்கு கொள்ளவில்லை. இந்தியா இதுவரை தனது முடிவை .அறிவிக்கவில்லை. சுமார் 160 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் சுமார் 90 நாடுகளே பங்குகொள்ளும். கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, […]
அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் கரோனா உக்கிரமாக இருந்த காலத்தில் சீனாவுக்கும், Sinovac என்ற சீன கரோனா தடுப்பு மருந்துக்கும் எதிராக social media பொய் கணக்குகள் மூலம் பரப்புரை செய்துள்ளது என்று Reuters செய்தி நிறுவனம் கண்டறிந்து உள்ளது. உதாரணமாக பிலிப்பீன் நாட்டுக்கு சீனா Sinovac மருந்து ஆகியவற்றை வழங்க இருந்த வேளை பென்ரகன் பிலிப்பீன் நாட்டின் பிரதான மொழியான Tagalog மூலம் சுமார் 300 Twitter பொய் social media கணக்குகளை ஆரம்பித்து பொய் பரப்புரை […]
வாழ்க்கை செலவு மிகையாக அதிகரித்த காரணத்தால் வாழ கட்டுப்படியாகாத முதல் 10 நகரங்கள் அட்டவணை செய்யப்பட்டு உள்ளன. உலகின் முதலாவது வாழ்க்கை செலவு அதிகரித்த நகரமாக ஹாங் காங் உள்ளது. இதில் 5 நகரங்கள் அமெரிக்காவிலும், 3 நகரங்கள் அஸ்ரேலியாவிலும், 2 நகரங்கள் கனடாவிலும் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள Center for Demographics and Policy at Chapman University ஆய்வாளர்களும் கனடாவின் Frontier Center for Public ஆய்வாளர்களும் இணைந்து செய்த ஆய்வின்படி வாழ கட்டுப்படியாகாத உலகின் […]
Kazan என்ற ரஷ்யாவின் அணுமின் நீர்மூழ்கி கப்பலும், Admiral Gorshkov என்ற நவீன frigate வகை கப்பலும் உட்பட 4 யுத்த கப்பல்கள் புதன்கிழமை காலை கியூபாவின் தலைநகர் ஹவானா சென்றுள்ளன. இந்த கப்பல்கள் கியூபாவுக்கு 5 தின பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. மேற்படி அணுமின் நீர்மூழ்கியில் அணுவாயுதங்கள் எதுவும் இல்லை என்றே அமெரிக்கா கருதுகிறது. இந்த கப்பல்கள் கியூபா வருமுன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஒரு யுத்த பயிற்சியையும் செய்து உள்ளன. இந்த ரஷ்ய கப்பல்களை அமெரிக்காவின் […]
குவைத் (Kuwait) அடுக்குமாடி ஒன்றில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 49 வெளிநாட்டு ஊழியர்கள் பலியாகி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் இந்தியர் என்று கூறப்படுகிறது. இந்த தீ புதன் காலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த மாடியில் அளவுக்கு அதிகமானோர் குடியிருந்தாகவும் கூறப்படுகிறது. கேரளா முதலமைச்சர் Pinarayi Vijayan தனது மாநிலத்தவரும் மரணித்து உள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டினரும் இங்கு குடியிருந்துள்ளனர். Mangaf என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த தீக்கு கட்டிட உரிமையாளரின் பேராசையே காரணம் என்று குவைத் உதவி […]
அமெரிக்க சனாதிபதி பைடெனின் மகன் Hunter Biden அவர் மீது சுமத்தப்படட 3 குற்றச்சாடுகளிலும் குற்றவாளி என்று நேற்று செவ்வாய் நீதிமன்றால் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேற்படி குற்றங்களுக்கு அதிகூடிய தண்டனைகளாக 25 ஆண்டுகள் சிறையும், $750,000 குற்றப்பணமும் அறவிடப்படலாம். ஆனால் இது ஹன்ரரின் முதலாவது குற்றம் ஆனபடியால் குறைந்த அளவு தண்டனையே வழங்கப்படும். அமெரிக்காவில் சாதாரண குடிமகனும் பெரும் துப்பாக்கிகளை சட்டப்படி கொள்வனவு செய்யலாம். Right to bear arms என்பது அமெரிக்காவின் சரத்தில் உள்ள உரிமை. […]
காசாவில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய ஐ. நா. பாதுகாப்பு சபை வாக்களிப்பு மூலம் கூறியுள்ளது. மொத்தம் 15 பாதுகாப்பு சபை வாக்குகளில் 14 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 0 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. சீனா ஆதரவாக வாக்களித்தது, ரஷ்யா வாக்களிக்கவில்லை. இவ்வகை தீர்மானங்கள் பல முன்னர் ஐ. நா. பாதுகாப்பு சபைக்கு வந்திருந்தபோது அவற்றை அமெரிக்கா தனது வீட்டோ வாக்கு மூலம் தடுத்து இருந்தது. இம்முறை அமெரிக்காவே இவ்வகை தீர்மானத்தை வாக்களிப்புக்கு எடுத்து வந்துள்ளது. […]
அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரிகள் கை ஓங்கி உள்ளது. இம்முறை வென்ற கட்சிகள் பொதுவாக புதிய குடிவரவாளர் மீது வெறுப்பு கொண்டவை ஆகையால் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய சட்டங்கள் குடிவரவாளருக்கு பாதகமானவையாக அமையலாம். பிரான்சில் தனது இடதுசாரி கட்சி தோல்வி அடைந்ததால் பிரான்சின் சனாதிபதி Macron உடனடியாக உள்நாட்டு National Assembly தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் Marine Le Pen னின் கட்சியான National Rally கட்சி 31% வாக்குகளை பெற்றுள்ளது. அது […]
இலங்கையில் விரைவில் Starlink செய்மதிகள் மூலமான இணைய சேவை வழங்கப்படவுள்ளது. அமெரிக்கரான Elon Musk என்பவரின் SpaceX நிறுவனத்தின் கிளை நிறுவனமானது Starlink நிறுவனம். ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் Starlink சேவையை அனுமதிக்காத நிலையிலும் அமெரிக்காவின் அரவணைப்பை நாடும் ரணில் அரசு Starlink சேவைக்கான உரிமையை விரைந்து வழங்கியுள்ளது. இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் Sri Lanka Telecom, Dialog, Airtel போன்ற நிறுவனங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் Starlink இலங்கை […]
சீனாவில் ஆண்டுதோறும் இடம்பெறும் Gaokao (Higher Exam) என்ற சோதனையை இந்த ஆண்டு ஜூன் 7ம், 8ம் திகதிகளில் 13.4 மில்லியன் மாணவர் எழுதுகிறார்கள். உலகத்திலேயே மிக கடுமையான சோதனையாக கருதப்படும் இந்த சோதனை சீன மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்பை தீர்மானிக்கும். அதி கூடிய புள்ளிகளை பெறும் மாணவர் முன்னணி பல்கலைக்கழக அனுமதி பெறுவர். கடந்த ஆண்டு இந்த சோதனையை 12.9 மில்லியன் மாணவர் மட்டுமே எழுதி இருந்தனர். இந்த சோதனை சீன மொழி, கணிதம், ஆங்கிலம், […]