Huawei என்ற சீன தொழில்நுட்ப நிறுவனம் ஒரு காலத்தில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக வளர்ந்திருந்தது. Huawei நிறுவனத்தின் வளர்ச்சியை ஏற்க மறுத்த அமெரிக்கா பல தடைகள் மூலம் அதை அழிக்க முனைந்தது. Huawei தயாரிப்புகள் (5G உட்பட) அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதை அமெரிக்கா தடை செய்தது. தனது நப்பு நாடுகளையும் Huawei தயாரிப்புகளை தவிர்க்க அழுத்தியது அமெரிக்கா. அத்துடன் அமெரிக்காவின் Google நிறுவனம் தனது Android OS ஐ Huawei க்கு வழங்குவதையும் தடுத்தது. அதுவரை […]
தமிழ்நாட்டில் கள்ள கசிப்பு குடித்தமையால் பலியானோர் தொகை 54 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மேலும் பலர் வைத்தியசாலைகளில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் மரண தொகை மேலும் அதிகரிக்கலாம். சுமார் $0.50 க்கு விற்பனை செய்யப்பட்ட கசிபுக்கு முதலாவது நபர் புதன்கிழமை பலியாகியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரின் கூற்றுப்படி 98 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கருணாபுரம் என்ற கிராமமே அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள் என்றும் கூறப்படுகிறது. போலீசார் கசிப்பு காச்சுவோரிடம் இருந்து இலஞ்சம் பெறுவதாக […]
இத்தாலி தோட்டம் ஒன்றில் தொழில் செய்த Satnam Singh என்ற 31 இந்திய தொழிலாளியின் மரணம் இரண்டு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களை தோற்றுவித்துள்ளது. இந்தியரான இவர் சட்டப்படி பதிவு செய்யாது, இத்தாலியின் வதிவுரிமை பெறாது சுமார் 2 ஆண்டுகளாக தோட்ட வேலைகள் செய்து வந்துள்ளார். கடந்த திங்கள் இவர் இத்தாலியின் Latina பகுதி தோட்டம் ஒன்றில் தொழில் செய்யும் வேளையில் இயந்திரம் ஒன்றுள் அகப்பட்டு வலது கை துண்டாடப்பட்டது. இவருக்கு உடன் மருத்துவம் வழங்காது இவரின் குடியிருப்பு அருகே […]
இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் University Grants Commission செய்யும் NEET (National Eligibility and Entrance Test) சோதனை கேள்விகள் சோதனை தினத்துக்கு முன் வெளியாகி ஆர்ப்பாட்டங்களையும், நீதிமன்ற வழக்குகளையும் தோற்றுவித்து உள்ளது. இதில் மொத்தம் 180 வினாக்கள் உண்டு. சரியான பதிலுக்கு 4 புள்ளிகளும், தவறான பதிலுக்கு -1 புள்ளிகளும் வழங்கப்படும். சுமார் 24 இலச்சம் மாணவர் தோற்றிய இது பல்கலைக்கழக நுழைவுக்கு மாணவரை தெரிவு செய்வது. NEET குளறுபடி பகிரங்கத்துக்கு வந்திருந்த காலத்தில் […]
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய தலமான மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்தோரில் சில நூறு பயணிகள் அங்கு நிலவும் வெப்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். அங்கு வெப்பநிலை 49 C (அல்லது 120 F) ஆக இருந்துள்ளது. ஹஜ் இஸ்லாமிய (சந்திர) நாட்காட்டியை பயன்படுத்துவதால் சில ஆண்டுகளில் இந்த நிகழ்வு வெப்பமான காலங்களில் இடம்பெறும். இந்தோனேசியா தமது நாட்டவரில் குறைந்தது 165 பேர் பலியாகி உள்ளதாக கூறியுள்ளது. ஜோர்டான் நாட்டவர் 41 பேரும், துனிசியா நாட்டவர் 35 […]
ரஷ்ய சனாதிபதி பூட்டின் (Putin) சுமார் 24 ஆண்டுகளின் பின் வட கொரியாவுக்கு இன்று புதன்கிழமை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) பெரும் செங்கம்பள வரவேற்பு செய்துள்ளார். இருவரும் இரண்டு மணித்தியாலங்கள் தனியே உரையாடி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் உரையாடிய விசயங்கள், அவர்களின் இணக்கப்பாடுகள் என்பன பகிரங்கம் செய்யப்படவில்லை. பூட்டின் தனது யூக்கிறேன் யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை பெற முனைந்திருக்கலாம் என்றும், கிம் அணுமின் […]
nVIDIA என்ற பெருமளவில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கணனி chip தயாரிக்கும் நிறுவனம் உலக அளவில் முதலாவது பங்குச்சந்தை (stock) பெறுமதி கொண்ட நிறுவனம் ஆகியுள்ளது. நேற்று செவ்வாய் இதன் பங்குச்சந்தை பெறுமதி $3.334 ட்ரில்லியன் ($3,334 பில்லியன்) ஆகியுள்ளது. இரண்டாம் இடத்தில் $3.317 ட்ரில்லியன் பங்குச்சந்தை பெறுமதி கொண்ட Microsoft நிறுவனமும், மூன்றாம் இடத்தில் $3.286 ட்ரில்லியன் பெறுமதி கொண்ட Apple நிறுவனமும் உள்ளன. நேற்று செவ்வாய் மட்டும் nVIDIA பங்குச்சந்தை பெறுமதி $113 […]
ராஜீவின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதல் தடவையாக தேர்தலில் குதிக்கிறார். கேரளா மாநிலத்து Wayanad தேர்தல் தொகுதியிலேயே பிரியங்க போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் சகோதரன் ராகுல் காந்தி கேரளாவின் Wayanad தொகுதியிலும், உத்தர பிரதேசத்து Bareli தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி அடைந்திருந்தார். ஆனால் ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியும். அதனால் ராகுல் Bareli தொகுதியை கைக்கொண்டு, Wayanad தொகுதியை கைவிட அத்தொகுதியில் […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது 2016ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் பரப்புரை காலத்திலும் பின் சனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் கடுமையாக அரபு/இஸ்லாமிய காழ்ப்பை கொட்டியிருந்தார். அப்போது ரம்பின் மருமகன், மகள் Ivanka வின் கணவர், ஒரு யூதர். Jared Kushner என்ற அந்த யூத மருமகன் ரம்பின் ஆட்சியில் வெள்ளைமாளிகை பதவிகளையும் கொண்டிருந்தார். 2022ம் ஆண்டு Tiffany என்ற ரம்பின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் Michael Boulos என்ற லெபனான் என்ற நாட்டில் […]
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் Li Hongzhi என்பவர் தலைமையிலான Falun Gong என்ற சீன அமைப்பை அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வளர்க்க ஆரம்பித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான இந்த அமைப்பை பயன்படுத்தி சீன கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நப்பாசையில் அமெரிக்கா இருந்தது. ஆனால் சீனா வல்லரசு அளவுக்கு வளர Falun Gong தன்னை மட்டும் வளர்க்க ஆரம்பித்தது. இது சீனாவுக்கு எதிரான பரப்புரைக்கு பயன்பட The Epoch Times என்ற செய்தி நிறுவனத்தை […]