இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டவரும், வெளிநாட்டு நிறுவனங்களும் கடந்த 6 மாதங்களில் சுமார் $29 பில்லியன் பங்குச்சந்தை முதிலீடுகளை இந்தியாவில் இருந்து பின்வாங்கி அவற்றை சீனாவில் முதலீட்டு உள்ளனர். இவ்வாறு வெளிநாட்டவர் தமது முதலீடுகளை பின்வாங்கியதால் இந்தியர் சிலரும் தமது முதலீடுகளை பின்வாங்கியதால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 மாத காலத்தில் சுமார் $1 டிரில்லியன் (1,000 பில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளன. சீனாவின் நிறுவனங்கள் தமது பங்குகளை விற்பனை செய்யும் ஹாங் காங் Hang Seng […]
செவ்வாய்க்கிழமை அமெரிக்க சனாதிபதி ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் யூக்கிறேன் யுத்தம் தொடர்பாக உரையாடினார். ரம்ப் சனாதிபதி ஆனபின் செய்துகொண்ட பெரிய உரையாடல் இதுவே. ரம்ப் தரப்பு இதில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. ஆனாலும் ரம்பின் எதிர்பார்ப்புகளுக்கு பூட்டினுக்கு பலத்த தோல்வியை வழங்கி உள்ளார். ரம்ப் குறிப்பிடக்கூடிய அளவு யுத்த நிறுத்தம் ஒன்றையே பூட்டினிடம் எதிர்பார்த்தார். அவ்வகை அறிவிப்பு ரம்புக்கு தான் ஒரு ‘deal maker’ என்று பறைசாற்ற உதவியிருக்கும். ஆனால் பூட்டின் 30 தினங்களுக்கு யூக்கிறேன் […]
இஸ்ரேல் அவ்வப்போது யுத்த நிறுத்தத்துக்கு செல்வது முடிந்த அளவு ஹமாஸின் கைகளில் உள்ள இஸ்ரேலியரை கைக்கொள்ளவே. இதை இஸ்ரேல் பல தடவைகள் செய்துள்ளது. இன்று செவ்வாய் அதிகாலையும் இஸ்ரேல் தான் இணங்கிக்கொண்ட யுத்த நிறுத்தத்தை மீறி காசா மீது மீண்டும் தாக்கத்தலை ஆரம்பித்து உள்ளது. கடந்த யுத்த நிறுத்த நாடகத்திலும் இஸ்ரேல் பல இஸ்ரேல் கைதிகளை ஹமாஸிடம் இருந்து பெற்றுள்ளது. உலகுக்கு மனித நேய பாடம் புகட்டும் நரிக்குணம் கொண்ட மேற்கு நாடுகள் தன் கையில் இருப்பதால் […]
பல சந்ததிகளாக உலகம் எங்கும் அமெரிக்க சார்பு பரப்புரைகளை ஒலி/ஒளி பரப்பி வந்த அமெரிக்காவின் Voice of America (VoA) பரப்புரை சேவையை முற்றாக நிறுத்திவிட அமெரிக்க சனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். VoA தனக்கும், வலதுசாரிகளுக்கும் எதிரான கொள்கைகளை கொண்டுள்ளது என்று ரம்ப் குறைகூறி உள்ளார். Mike Abramowitz என்ற VoA சேவையின் Director தன்னையும், VoA அமைப்பின் 1,300 ஊழியர்களையும் சம்பளத்துடனான கட்டாய விடுப்பில் அரசு வைத்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த காலங்களில் சோவியத்/ரஷ்யா, சீனா, இந்தியா, […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் NATO நாடுகள் மீது வரி யுத்தம் தொடர்வதால் குறைந்தது 2 NATO நாடுகள் F-35 என்ற அமெரிக்க யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்த முனைகின்றன. மிக புதிய F-35 யுத்த விமானங்கள் அமெரிக்காவின் Lockheed Martin என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது. இந்த விமானம் எதிரிகளின் ரேடார் கண்காணிப்பில் அகப்படாத stealth நுட்பங்களை கொண்டது. NATO நாடான கனடா 88 இவ்வகை F-35 யுத்த விமானங்களை $19 பில்லியனுக்கு கொள்வனவு செய்ய இணங்கி […]
2026ம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் மத்திய அரசின் Lok Saba சபைக்கு அனுப்பும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை மேலும் உக்கிரம் அடையவும் வாய்ப்பு உண்டு. 1971ம் ஆண்டு இந்தியா செய்து கொண்ட சனத்தொகை கணக்கெடுப்புக்கு அமைய ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவற்றின் 1971ம் ஆண்டு சனத்தொகைகளுக்கு ஏற்ப Lok Saba ஆசங்கள் வழங்கப்பட்டன. […]
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை $3,000 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் இறக்குமதி வரிகள் உலக பொருளாதாரத்தை மிரட்டுவதாலும், உலகின் பல முனைகளில் யுத்தங்கள் இடம்பெறுவதாலுமே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்து செல்கிறது. நாடுகள், வங்கிகள், நிறுவனங்கள், தனியார் எல்லோருமே தமது கையிருப்பை பாதுகாக்க தங்கத்தில் முதலிடுகின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், 2000ம் ஆண்டில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் $300 ஆக மட்டுமே இருந்தது. ரம்ப் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியை […]
அமெரிக்காவின் Colorado மாநிலத்து டென்வர் நகரின் Denver International விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பற்றியதால் பயணிகள் பாதுகாப்பு தேடி விமானத்தின் இறக்கைக்கு சென்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பி உள்ளனர். Colorado மாநிலத்தின் Colorado Springs என்ற நகரத்தில் இருந்து Dallas Fort Worth விமான நிலையம் நோக்கி சென்ற விமானத்து இயந்திரம் ஒன்றில் உதறல் சத்தம் தோன்றியதால் விமானம் உடனே டென்வர் விமான நிலையத்துக்கு திசை திருப்பி தரை இறக்கப்பட்டது. தரை […]
ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதிய இறக்குமதி வரிகளை அறவிடவுள்ளார். இந்த வரியால் குறிப்பாக இந்திய மருந்து உற்பத்தி பெரும் பாதிப்பு அடைய உள்ளன. கடந்த கிழமை இந்திய வர்த்தக அமைச்சர் Piyush Goyal வெள்ளை மாளிகை விரைந்து ஒரு இணக்கத்துக்கு வர முனைந்தாலும் அது பயன் அளிக்கவில்லை. அமெரிக்கர் பயன்படுத்தும் மருந்துகளில் சுமார் 50% இந்தியா தயாரிக்கும் generic மருந்துகளே. பிரபல அமெரிக்க […]
கனடாவின் Ontario மாநில முதல்வர் (Premier) Doug Ford தனது மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு 25% மேலதிக ஏற்றுமதி வரி அறவிட அறிவித்ததால் பயம் கொண்ட ரம்ப் கனடாவின் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு அறிவித்த 50% மேலதிக இறக்குமதி வரியை இடைநிறுத்தி உள்ளார். அதனால் Ford தனது மின்சார வரியையும் இடைநிறுத்தி உள்ளார். ஆனாலும் ரம்பின் இரும்பு, அலுமினியம் மீதான 25% வரி நடைமுறையில் இருக்கும். அதாவது செவ்வாய் ரம்ப் அறிவித்த 50% புதிய […]