அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரிகள் கை ஓங்கி உள்ளது. இம்முறை வென்ற கட்சிகள் பொதுவாக புதிய குடிவரவாளர் மீது வெறுப்பு கொண்டவை ஆகையால் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய சட்டங்கள் குடிவரவாளருக்கு பாதகமானவையாக அமையலாம். பிரான்சில் தனது இடதுசாரி கட்சி தோல்வி அடைந்ததால் பிரான்சின் சனாதிபதி Macron உடனடியாக உள்நாட்டு National Assembly தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் Marine Le Pen னின் கட்சியான National Rally கட்சி 31% வாக்குகளை பெற்றுள்ளது. அது […]
இலங்கையில் விரைவில் Starlink செய்மதிகள் மூலமான இணைய சேவை வழங்கப்படவுள்ளது. அமெரிக்கரான Elon Musk என்பவரின் SpaceX நிறுவனத்தின் கிளை நிறுவனமானது Starlink நிறுவனம். ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் Starlink சேவையை அனுமதிக்காத நிலையிலும் அமெரிக்காவின் அரவணைப்பை நாடும் ரணில் அரசு Starlink சேவைக்கான உரிமையை விரைந்து வழங்கியுள்ளது. இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் Sri Lanka Telecom, Dialog, Airtel போன்ற நிறுவனங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் Starlink இலங்கை […]
சீனாவில் ஆண்டுதோறும் இடம்பெறும் Gaokao (Higher Exam) என்ற சோதனையை இந்த ஆண்டு ஜூன் 7ம், 8ம் திகதிகளில் 13.4 மில்லியன் மாணவர் எழுதுகிறார்கள். உலகத்திலேயே மிக கடுமையான சோதனையாக கருதப்படும் இந்த சோதனை சீன மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்பை தீர்மானிக்கும். அதி கூடிய புள்ளிகளை பெறும் மாணவர் முன்னணி பல்கலைக்கழக அனுமதி பெறுவர். கடந்த ஆண்டு இந்த சோதனையை 12.9 மில்லியன் மாணவர் மட்டுமே எழுதி இருந்தனர். இந்த சோதனை சீன மொழி, கணிதம், ஆங்கிலம், […]
பெருமளவு இந்துவாதி இந்திய வாக்காளர் பிரதமர் மோதி தலைமையிலான பா. ஜ. கட்சிக்கு முன்னைய தேர்தல்களில் வாக்களித்து இருந்தாலும் சில இந்திய இந்து வாக்காளர் இம்முறை மதவாதத்தை புறக்கணித்து உள்ளனர். இவர்கள் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பு இன்மை போன்ற விசயங்களின் கவனம் செலுத்தி உள்ளனர். அதனால் பா. ஜ. முன்னைய தேர்தலில் வென்றிருந்த தொகுதிகளில் 63 ஐ இம்முறை இழந்துள்ளது. இதுவரை குஜராத் மாநில தேர்தல்கள், இந்திய மத்திய தேர்தல்களில் மோதி பெரும்பான்மை ஆட்சிக்கு தேவையான ஆசனங்களை வென்றிருந்தாலும் […]
பிரதமர் மோதி தலைமையில் ஆனால் வெகுவாக வலுவிழந்த பா. ஜ. கட்சி கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. பா. ஜ. கட்சி தெற்கு மாநிலங்களில் மட்டுமன்றி உத்தர பிரதேசம் போன்ற பா. ஜ. கோட்டைகளிலும் வலுவிழந்து உள்ளமை வியப்பாக உள்ளது. இம்முறை “Ab ki baar, 400 paar” என்று தனது பிரச்சாரங்களில் 400 ஆசனங்களை கைப்பற்றும் நோக்கத்தை மோதி தெரிவித்து இருந்தாலும் பா. ஜ. இம்முறை 50% ஆசனங்களை வெல்வதே கேள்விக்குறியாகி உள்ளது. பா. […]
சீனாவின் Chang’e 6 என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில் பத்திரமாக சீன நேரப்படி ஞாயிறு காலை தரையிறங்கி உள்ளது. இந்த கலம் அங்கிருந்து 4 kg சந்திர நிலத்தின் மாதிரியை பூமிக்கு எடுத்துவரும். இதுவே இதுவரை மனிதன் செலுத்திய சந்திர கலங்களில் மிகவும் நுணுக்கமானது. சந்திரனின் மறுபக்கத்தில் சீனா தரையிறங்குவது இது இரண்டாவது தடவை. 2019ம் ஆண்டு சீனாவின் Chang’e 4 கலம் பத்திரமாக தரை இறங்கி இருந்தது. 2030ம் ஆண்டு சீனா சந்திரனில் சீன விண்வெளி வீரரை தரையிறக்க […]
நெல்சன் மண்டேலாவின் ANC (African National Congress) அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் முதல் தடவையாக 50% க்கும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது. ANC கட்சி கருப்பு இனத்தவரின் வாழ்கையை மேம்படுத்த தவறியமையே மக்களின் வெறுப்புக்கு காரணமாகியுள்ளது. அங்கு சுமார் 33% மக்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். சுமார் 82% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ANC 41% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 1994ம் ஆண்டுக்கு பின் இம்முறையே ANC 50% க்கும் குறைவான […]
அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி ரம்ப் குற்றவாளி (convicted of crime) என்று நியூ யார்க் நீதிமன்றத்தின் 12 ஜுரிகளால் இன்று வியாழன் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அமெரிக்க சனாதிபதி ஒருவர் இவ்வாறு குற்றவாளியாக காணப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. ரம்ப் மீது தாக்கல் செய்யப்பட்ட 12 குற்றங்களிலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். ஜூலை 11ம் திகதி அவருக்கு தண்டனை வழங்கப்படும். 2016ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் காலத்தில் விபச்சாரி ஒருவருக்கு உண்மைகளை வெளியிடாது தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்கி பின் […]
இன்று வியாழன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சீன சனாதிபதி தலைமையில் காசா யுத்தம் தொடர்பாக மாநாடு ஒன்று இடம்பெற்றுகிறது. அங்கு உரையாற்றிய சீ காசா மக்கள் முடிவு இன்றிய கொடுமையை அனுபவிக்க முடியாது என்றுள்ளார். அத்துடன் சுதந்திரமான பலஸ்தீனர் நாடும் அமைக்கப்படல் அவசியம் என்றும் சீன சனாதிபதி சீ கூறியுள்ளார். சீனாவும் அங்கு சென்ற அரபு தலைவர்களும் கூட்டாக ஒரு அறிக்கையையும் என்று கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. எகிப்தின் சனாதிபதி, […]
காசா அகதிகளுக்கு உணவு, மருந்து போன்ற உதவிகளை கடல் மூலம் வழங்க அமெரிக்கா கட்டிய தற்காலிக இறங்குதுறை உடைந்துள்ளது. அதனால் காசாவுக்கான இந்த கடல் வழி உதவிகளும் தடைப்பட்டுள்ளன. அமெரிக்கா வழங்கும் அரசியல், ஆயுத, பொருளாதார உதவிகளை கொண்டு இஸ்ரேல் தரை மூலம் காசா செல்லும் உதவிகளை தடுத்தபோது, அமெரிக்கா காசா கரையில் $320 மில்லியன் செலவில் கட்டிய மேற்படி தற்காலிக இறங்கு துறை மூலம் உதவிகளை வழங்க திட்டமிட்டது. இந்த கடல் வலி துறை மூலம் நாள் ஒன்றுக்கு […]