ரம்பையும் தொற்றியது கரோனா

அமெரிக்க சனாதிபதி ரம்பையும், அவரின் மனைவியையும் கரோனா தொற்றி உள்ளது என்று இன்று வெள்ளி ரம்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் உடனடியாக முடக்கப்பட்டு (quarantine) உள்ளனர். வியாழக்கிழமை பொது இடங்களில் இருந்த ரம்ப் கரோனா நோய்க்கான அறிகுறி எதையும் கொண்டிருக்கவில்லை. ரம்பின் உதவியாளர் ஒருவர் கரோனா தொற்றி இருந்தமை வியாழன் அறியப்பட்டு இருந்தது. செவாய்க்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தல் வாதத்தின்போது எதிராளியான பைடென் (Biden) எப்போதும் கரோனா கவசம் அணிவதை நையாண்டி செய்திருந்தார். ரம்ப்  பொதுவாக கவசம் […]

Toronto வீட்டுவிலை பெரிய bubble என்கிறது சுவிஸ் வங்கி

Toronto வீட்டுவிலை பெரிய bubble என்கிறது சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கி (UBS, Union Bank of Switzerland) ஐரோப்பா, அமெரிக்கா, மத்தியகிழக்கு, ஆசிய ஆகிய இடங்களில் உள்ள 25 பெரும் நகரங்களின் வீட்டு விலைகளை ஆண்டுதோறும் மதிப்பிடுவது உண்டு. அந்த மதிப்பீட்டின்படி கனடாவின் Toronto வீட்டு விலைகள் ஆபத்தான bubble நிலையில் உள்ளன. சுவிஸ் வங்கியின் கணிப்புப்படி 1.5 சுட்டியை அல்லது அதற்கு மேற்பட்ட சுட்டியை கொண்ட வீட்டு விலைகள் மிகையானவை அல்லது கவிழக்கூடிய bubble நிலையில் உள்ளன. சுவிஸ் வங்கி கணிப்புப்படி Toronto வீடுகளிகளின் […]

அமெரிக்க டாலரின் பெறுமதி 35% ஆல் விழும்?

அமெரிக்க டாலரின் பெறுமதி 35% ஆல் விழும்?

அமெரிக்க டாலரின் பெறுமதி அடுத்த ஆண்டு முடிவுக்குள் சுமார் 35% வரையால் வீழ்ச்சி அடையும் என்கிறார் Stephen Roach என்ற அமெரிக்காவின் Yale University ஆய்வாளர். ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் அமெரிக்க டாலர் 4.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் வீழ்ச்சிக்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறார் Stephen Roach. அமெரிக்காவின் தேசிய சேமிப்பு அளவு குறைதல், யூரோவினதும், சீனாவின் யுவானினதும் பெறுமதி அதிகரித்தல், மற்றும் அமெரிக்காவின் ஆளுமை குறைதல் ஆகியனவே அவர் முன்வைக்கும் காரணங்கள் ஆகும். […]

Babri மசூதி உடைப்பில் அத்வானி, Bharti குற்றமில்லை

Babri மசூதி உடைப்பில் அத்வானி, Bharti குற்றமில்லை

1992 ஆம் ஆண்டு Babri மசூதி உடைக்கப்பட்ட நிகழ்வில் முன்னாள் உதவி பிரதமர் L. K. அத்வானி, MM Joshi, Uma Bharti உட்பட அனைத்து பா. ஜ. கட்சி தலைவர்களும், தொண்டர்களும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மொத்தம் 49 பேர் மீது திட்டமிட்டு உடைப்பை செய்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சுமார் 28 வருடங்கள் நீடித்த இந்த நீதிமன்ற வழக்கு இறுதியில் முற்று பெற்றது. குற்றம் சாட்டப்பட்டோருள் 17 பேர் […]

Amnesty இந்தியாவில் இருந்து வெளியேற்றம் 

Amnesty இந்தியாவில் இருந்து வெளியேற்றம் 

Amnesty International என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது. இந்திய அரசு தம் மீது திணிக்கும் அழுத்தங்கள் காரணமாகவே தாம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கூறுகிறது Amnesty. Amnesty இந்த அறிவிப்பை இன்று செவ்வாய் வெளியிட்டு உள்ளது. தமது வங்கி கணக்குகளை இந்திய விசாரணையாளர் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி முடக்கி உள்ளனர் என்றும் Amnesty கூறியுள்ளது. தம்மை பண கடத்தலில் ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம் சுமத்துகிறது என்கிறது Amnesty. […]

அஜர்பைஜான், அர்மீனியா மீண்டும் மோதல்

அஜர்பைஜான், அர்மீனியா மீண்டும் மோதல்

காஸ்பியன் கடலோரம் உள்ள அஜர்பைஜான் (Azerbaijan) நாடும், அதற்கு மேற்கே உள்ள அர்மீனியாவும் (Armenia) மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. Nagorno-Karabakh மலைப்பகுதியில் இடம்பெறும் இந்த போருக்கு சுமார் 20 பேர் இருதரப்பிலும் பலியாகி உள்ளனர். மேற்படி மலை பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தம் என்றாலும் இங்கு கிறீஸ்தவ அர்மீனியரும், இஸ்லாமிய துருக்கியரும் இங்கு வாழ்கின்றனர். 1994 ஆண்டு முதல் உள்ளூர் அர்மீனியரே இந்த மலை பகுதியை தமது கட்டுப்பாட்டுள் வைத்துள்ளனர். ஞாயிறுக்கிழமை ஆரம்பித்த தற்போதைய சன்டைக்கு இருதரப்பும் மற்றைய […]

10 ஆண்டுகளில் ரம்ப் செலுத்திய வருமான வரி பூச்சியம்

2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான 15 ஆண்டு காலத்தில், 10 ஆண்டுகளில் அமெரிக்க சனாதிபதி செலுத்திய வருமான வரி பூச்சியம் என்கிறது The New York Times பத்திரிகை. அதேகாலத்தில் சராசரி அமெரிக்கர் செலுத்தும் வருமான வரி ஆண்டுக்கு $10,500.00. சனாதிபதியா தெரிவு செய்யப்பட்ட ஆண்டான 2016 ஆம் ஆண்டிலும், 2017 ஆம் ஆண்டிலும் ரம்ப் செலுத்திய வருமான வரி $750.00 மட்டுமே. இந்த தரவுகளை எவ்வாறு The New York […]

இலங்கையின் புதிய விமான சேவை Spark Air

இலங்கையின் புதிய விமான சேவை Spark Air

வரும் பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் Spark Air என்ற புதிய விமான சேவை ஒன்று இயங்கவுள்ளது. இந்த விமான சேவை ஆரம்பத்தில் மாத்தறை விமான நிலையத்தில் இருந்து பொதிகளை காவும் பணியில் ஈடுபடும். கரோனா காரணமாக முதலில் இரண்டு Airbus 330 வகை விமானங்களுடன் பொதிகளை காவும் சேவையுடன் ஆரம்பித்தாலும் பின்னர் பயணிகள் சேவையும் செய்யும் என Spear Air கூறுகிறது. விமானிகள் Robert Spittel, Ramzi Raheem, Samin Attanayake, Ashan De Alwis, […]

பிரித்தானிய கழிவுகளை இலங்கை திருப்பி அனுப்புகிறது

பிரித்தானிய கழிவுகளை இலங்கை திருப்பி அனுப்புகிறது

பிரித்தானியாவில் இருந்து ​இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆபத்தான வைத்தியசாலை கழிவுகளை இலங்கை திருப்பி பிரித்தானியா அனுப்புகிறது. நேற்று சனிக்கிழமை 21 கொள்கலங்கள் (containers) திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன என்கிறது இலங்கை அரசு. 2017 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை மொத்தம் 263 கொள்கலங்கள் தனியார் நிறுவனம் ஒன்று மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு இருந்தன. அவற்றுள் சில வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தாலும் பெரும்பாலானவை இலங்கையில் வைக்கப்பட்டு இருந்தன. கைவிடப்பட்ட கொள்கலங்கள் […]

அனில் அம்பானியும் $700 மில்லியன் சீன கடனும்

அனில் அம்பானியும் $700 மில்லியன் சீன கடனும்

ஒருகாலத்தில் billionaire ஆக இருந்த இந்தியாவின் அனில் அம்பானி சீனாவின் 3 வங்கிகளிடம் $700 மில்லியன் கடனை பெற்று இருந்தார். பிற்காலத்தில் தனது முதலீடுகள் எல்லாம் அழிய, அனில் அம்பானி bankruptcy அடைந்து இருந்தார். இந்தியாவில் இவர் Ericsson என்ற தொழிநுட்ப நிறுவனத்தின் $76.8 மில்லியன் கடன் காரணமாக சிறை செல்ல இருந்த வேளையில் $89 பில்லியன் சொத்துக்களை கொண்ட அண்ணன் முகேஷ் அம்பானி தனது பணத்தில் அனிலை காப்பாற்றி இருந்தார். அண்ணன் முகேஷ் தற்போது இந்தியாவின் […]