(Elavalagan, October 19, 2020) When it comes to the question of the very first living thing on Earth, even science tries to hide behind two insufficient answers. Science says the initial living organisms which appeared on the face of earth were microscopic single-cell organisms or microbes. Science also says those microbes appeared about 3.5 billion […]
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து மேற்கே சென்ற சோழர் காலத்து சாசனத்தை நெதர்லாந்தின் Leiden University என்ற பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியா மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மேற்படி சாசனம் இரண்டு தொகுதிகளில் உண்டு. ஒன்று தமிழிலும் மற்றையது சமஸ்கிரதத்திலும் உள்ளன. மொத்தம் 21 செப்பு தகடுகளில் (copper plates) எழுதப்பட்ட இந்த சாசன தொகுதி பித்தளை bronze வளையத்தால் இணைக்கப்பட்டு உள்ளன. இவை ராஜேந்திர சோழனின் அரச முத்திரையை கொண்டுள்ளன. இவை அங்கிருந்த […]
கடந்த சில தினங்களாக தாய்லாந்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அவற்றை தடை செய்ய அரசும் முயன்று வருகின்றது. சில பகுதிகளில் தற்போது பொது போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு உள்ளன. ஆர்ப்பாட்டம் செய்வோரின் நகர்வுகளை முறியடிக்கும் நோக்கில் போலீசார் 77 ரயில் நிலையங்களை மூடி உள்ளனர். அத்துடன் வீதி தடைகளையும் அமைத்து உள்ளனர். ஆனாலும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் தொகை கடந்த 4 தினங்களாக அதிகரித்து வருகின்றது. ஆர்ப்பாட்டம் செய்வோர் முன்னாள் இராணுவ அதிகாரியான பிரதமர் Prayuth […]
அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் (Pentagon) கீழ் இயங்கும் National Defense University என்ற பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டுக்கான பாடங்களின் (curriculum) 50% பங்கு சீனாவை மையமாக கொண்டிருக்கவேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Mark Esper வியாழக்கிழமை கூறியுள்ளார். வளரும் சீனாவை நேர்கொள்ள அமெரிக்காவுக்கு குறைந்தது 500 யுத்த கப்பல்கள் தேவை என்று Esper ஏற்கனவே கூறி இருந்தார்.அமெரிக்காவின் The Heritage Foundation என்ற நிபுணர்கள் அமைப்பின் அமர்வு ஒன்றில் பங்கொண்ட வேளையிலேயே Esper […]
கடந்த செவ்வாய்க்கிழமை (2020/10/13) அமெரிக்கா தலைமையில் 8 நாடுகள் நாசாவின் Artemis Accord என்ற இணக்கம் ஒன்றில் ஒப்பந்தம் இட்டுள்ளன. கூட்டாளி நாடுகளான மேற்படி எட்டு நாடுகள் மட்டுமே செய்துகொண்ட இந்த இணக்கத்தை ஒரு சர்வதேச இணக்கம் ஆக அறிமுகம் செய்யவும் அவர்கள் முனைகின்றனர். அமெரிக்கா தலைமையில் அஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜப்பான், Luxembourg, UAE ஆகிய நாடுகளே மேற்படி இணக்கத்தில் கையொப்பம் இட்டுள்ள நாடுகள். அமெரிக்கா வரைந்த இந்த இணக்கம் சந்திரன் போன்ற பூமிக்கு […]
2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தனிநபர் GDP (per capita Gross Domestic Product) பங்களாதேசத்தின் தனிநபர் GDP யிலும் குறைவாக இருக்கும் என்று நேற்று செய்வாய் IMF கூறி உள்ளது. இந்திய பொருளாதாரம் மீதான IMF இந்த நேற்றைய கணிப்பு முன்னைய கணிப்பிலும் குறைவாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முடியவுள்ள இந்தியாவின் 2020 வர்த்தக ஆண்டுக்கான தனிநபர் GDP $1,877 ஆக மட்டுமே இருக்கும் என்கிறது IMF. […]
அண்மையில் Al Jazeera செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொண்ட சைப்ரஸ் (Cyprus) அந்நாட்டில் முதலீடு செய்யும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் செல்வந்தர்களுக்கு கடவுச்சீட்டு (passport) வழங்குவதை பகிரங்கப்படுத்தி இருந்தது. இந்த விவகாரங்களில் ஊழலும் இடம்பெற்று இருந்தன. அந்த ஆய்வு கட்டுரை காரணமாக தற்போது சைப்ரஸ் மேற்படி கடவுச்சீட்டு வழங்கலை இடைநிறுத்தி உள்ளது. நவம்பர் மாத 1 ஆம் திகதி முதல் இடைநிறுத்தம் நடைமுறைக்கு வரும். மேற்படி முறைமூலம் சுமார் […]
இலங்கைக்கு மேலும் $90 மில்லியன் நன்கொடை வழங்க சீனா முன்வந்துள்ளது. Yang Jiechi என்ற சீன வெளியுறவு அமைச்சு அதிகாரி வெள்ளிக்கிழமை இலங்கை பிரதமரை சந்தித்த பின்னரே இந்த நன்கொடை அறிவிப்பு வெளிவந்துள்ளது. Yang Jiechi இலங்கை சனாதிபதியையும் சந்தித்து உள்ளார். இந்த நன்கொடை வைத்திய, கல்வி, நீர் வழங்கல் துறைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இம்முறை IMF இன் உதவியை நாடாது சீனாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை. மேற்கு நாடுகள் IMF மூலம் கட்டுப்பாடுகளை […]
கொரோன பண தாள், தொலைபேசி, stainless steel போன்றவற்றில் 28 தினங்கள் உயிர்வாழும் என்று கூறுகிறது அஸ்ரேலிய ஆய்வு அமைப்பான CSIRO (Commonwealth Scientific and Industrial Research Organization). இந்த புதிய ஆய்வின்படி கரோனா முன்னர் கூறியதிலும் அதிக காலம் உயிருடன் இருபது அறியப்பட்டு உள்ளது. மேற்படி ஆய்வு இருண்ட, 20 C வெப்பநிலையில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் செய்யப்பட்டது. ஆனால் வெளி இடங்களில் உள்ள UV கதிர்வீச்சு கரோனாவை வேகமாக அழிக்கும் இயல்பு கொண்டது. சாதாரண flu […]
வழமைக்கு மாறாக வடகொரியா தனது 75 ஆவது ஆண்டு விழாவை சனிக்கிழமை (2020/10/10) அதிகாலை நிகழ்த்தி உள்ளது. சூரிய வெளிச்சம் பரவ முன்னரே இடம்பெற்ற இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா இதுவரை அறியப்படாத ஏவுகணை ஒன்றையும் உலகுக்கு காட்டி உள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது ரம்ப் அரசு. Pukguksong 4A என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வடகொரியாவிடம் இருந்தமை சனிக்கிழமையே அமெரிக்கா உட்பட உலகுக்கு தெரிந்து உள்ளது. ரம்புடன் நேரடி பேச்சுக்களை ஆரம்பித்த பின்னர், […]