Amnesty இந்தியாவில் இருந்து வெளியேற்றம் 

Amnesty இந்தியாவில் இருந்து வெளியேற்றம் 

Amnesty International என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது. இந்திய அரசு தம் மீது திணிக்கும் அழுத்தங்கள் காரணமாகவே தாம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கூறுகிறது Amnesty. Amnesty இந்த அறிவிப்பை இன்று செவ்வாய் வெளியிட்டு உள்ளது. தமது வங்கி கணக்குகளை இந்திய விசாரணையாளர் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி முடக்கி உள்ளனர் என்றும் Amnesty கூறியுள்ளது. தம்மை பண கடத்தலில் ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம் சுமத்துகிறது என்கிறது Amnesty. […]

அஜர்பைஜான், அர்மீனியா மீண்டும் மோதல்

அஜர்பைஜான், அர்மீனியா மீண்டும் மோதல்

காஸ்பியன் கடலோரம் உள்ள அஜர்பைஜான் (Azerbaijan) நாடும், அதற்கு மேற்கே உள்ள அர்மீனியாவும் (Armenia) மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. Nagorno-Karabakh மலைப்பகுதியில் இடம்பெறும் இந்த போருக்கு சுமார் 20 பேர் இருதரப்பிலும் பலியாகி உள்ளனர். மேற்படி மலை பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தம் என்றாலும் இங்கு கிறீஸ்தவ அர்மீனியரும், இஸ்லாமிய துருக்கியரும் இங்கு வாழ்கின்றனர். 1994 ஆண்டு முதல் உள்ளூர் அர்மீனியரே இந்த மலை பகுதியை தமது கட்டுப்பாட்டுள் வைத்துள்ளனர். ஞாயிறுக்கிழமை ஆரம்பித்த தற்போதைய சன்டைக்கு இருதரப்பும் மற்றைய […]

10 ஆண்டுகளில் ரம்ப் செலுத்திய வருமான வரி பூச்சியம்

2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான 15 ஆண்டு காலத்தில், 10 ஆண்டுகளில் அமெரிக்க சனாதிபதி செலுத்திய வருமான வரி பூச்சியம் என்கிறது The New York Times பத்திரிகை. அதேகாலத்தில் சராசரி அமெரிக்கர் செலுத்தும் வருமான வரி ஆண்டுக்கு $10,500.00. சனாதிபதியா தெரிவு செய்யப்பட்ட ஆண்டான 2016 ஆம் ஆண்டிலும், 2017 ஆம் ஆண்டிலும் ரம்ப் செலுத்திய வருமான வரி $750.00 மட்டுமே. இந்த தரவுகளை எவ்வாறு The New York […]

இலங்கையின் புதிய விமான சேவை Spark Air

இலங்கையின் புதிய விமான சேவை Spark Air

வரும் பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் Spark Air என்ற புதிய விமான சேவை ஒன்று இயங்கவுள்ளது. இந்த விமான சேவை ஆரம்பத்தில் மாத்தறை விமான நிலையத்தில் இருந்து பொதிகளை காவும் பணியில் ஈடுபடும். கரோனா காரணமாக முதலில் இரண்டு Airbus 330 வகை விமானங்களுடன் பொதிகளை காவும் சேவையுடன் ஆரம்பித்தாலும் பின்னர் பயணிகள் சேவையும் செய்யும் என Spear Air கூறுகிறது. விமானிகள் Robert Spittel, Ramzi Raheem, Samin Attanayake, Ashan De Alwis, […]

பிரித்தானிய கழிவுகளை இலங்கை திருப்பி அனுப்புகிறது

பிரித்தானிய கழிவுகளை இலங்கை திருப்பி அனுப்புகிறது

பிரித்தானியாவில் இருந்து ​இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆபத்தான வைத்தியசாலை கழிவுகளை இலங்கை திருப்பி பிரித்தானியா அனுப்புகிறது. நேற்று சனிக்கிழமை 21 கொள்கலங்கள் (containers) திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன என்கிறது இலங்கை அரசு. 2017 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை மொத்தம் 263 கொள்கலங்கள் தனியார் நிறுவனம் ஒன்று மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு இருந்தன. அவற்றுள் சில வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தாலும் பெரும்பாலானவை இலங்கையில் வைக்கப்பட்டு இருந்தன. கைவிடப்பட்ட கொள்கலங்கள் […]

அனில் அம்பானியும் $700 மில்லியன் சீன கடனும்

அனில் அம்பானியும் $700 மில்லியன் சீன கடனும்

ஒருகாலத்தில் billionaire ஆக இருந்த இந்தியாவின் அனில் அம்பானி சீனாவின் 3 வங்கிகளிடம் $700 மில்லியன் கடனை பெற்று இருந்தார். பிற்காலத்தில் தனது முதலீடுகள் எல்லாம் அழிய, அனில் அம்பானி bankruptcy அடைந்து இருந்தார். இந்தியாவில் இவர் Ericsson என்ற தொழிநுட்ப நிறுவனத்தின் $76.8 மில்லியன் கடன் காரணமாக சிறை செல்ல இருந்த வேளையில் $89 பில்லியன் சொத்துக்களை கொண்ட அண்ணன் முகேஷ் அம்பானி தனது பணத்தில் அனிலை காப்பாற்றி இருந்தார். அண்ணன் முகேஷ் தற்போது இந்தியாவின் […]

S. P. பாலசுப்ரமணியம் மரணம்

S. P. பாலசுப்ரமணியம் மரணம்

பாடகர்  S. P. பாலசுப்ரமணியம் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை (25/09/2020) பலியாகி உள்ளார். இவருக்கு கரோனா தொற்றி இருப்பது முதலில் ஆகஸ்ட் மாதம் அறியப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் கரோனா நீங்கி இருந்ததாக அறியப்பட்டது. தொடர்ந்து வைத்தியம் பெற்ற இவர் இறுதியில் பலியானார். தற்போது 74 வயதான இவர் தனது 50 ஆண்டு கால இசைத்துறையில் 40,000 க்கும் அதிகமான திரைப்பட பாடல்களை பாடி உள்ளார். அதனால் அதிக பாடல்களை பாடிய Guinness பதிவையும் கொண்டுள்ளார். தமிழ், தெலுகு […]

இலங்கைக்கு $1.84 மில்லியன், கப்பல் காப்புறுதி இணக்கம்

இலங்கைக்கு $1.84 மில்லியன், கப்பல் காப்புறுதி இணக்கம்

இலங்கையின் தென்கிழக்கு கடலில் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி தீ பற்றிய New Diamond என்ற எண்ணெய் கப்பலையும், அதன் பணியாளர்களையும் பாதுகாக்க செலவான தொகையை இலங்கைக்கு செலுத்த கப்பலின் காப்புறுதி நிறுவனமான West of London இணங்கி உள்ளது. காப்புறுதி நிறுவனம் 340 மில்லியன் ரூபாய்களை ($1.84 மில்லியன்) செலுத்தும். மேற்படி கப்பல் குவைத் நாட்டின் எணெய்யை இந்தியாவுக்கு எடுத்து செல்கையில் இலங்கையின் தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் தீ பற்றி கொண்டது. அந்த […]

வன்கூவரில் சட்டவிரோத சீன வங்கியாளர் கொலை

வன்கூவரில் சட்டவிரோத சீன வங்கியாளர் கொலை

கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் Jian Jun Zhu என்ற சட்டவிரோத வாங்கியாளர் வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணியளவில் உணவகம் ஒன்றில் வைத்து அடையாளம் அறியப்படாத துப்பாக்கிதாரரால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இவருடன் இருந்த Paul King Jin என்பவர் காயமடைந்து உள்ளார். மரணித்த Zhu சீனாவுக்கும், கனடாவுக்கு இடையில் சட்டவிரோத வங்கி சேவை செய்பவர். இவரின் Silver International என்ற சட்டவிரோத வங்கி ஆண்டு ஒன்றில் சுமார் C$220 மில்லியன் (U$165 மில்லியன்) பெறுமதியான […]

270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின, 90 மரணித்தன

270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின, 90 மரணித்தன

அஸ்ரேலியாவின் Tasmania பகுதியில் மணல் நிறைந்த, ஆழம் குறைந்த கரைக்கு வந்த 270 திமிங்கிலங்கள் (pilot whales) மீண்டும் சுயமாக ஆழ்கடல் செல்லமுடியாது தவிக்கின்றன. அவற்றில் 90 ஏற்கனவே பலியாகி உள்ளன. இதுவரை 25 திமிங்கிலங்களை மீனவரும், அதிகாரிகளும் ஆழ்கடலுக்கு எடுத்து சென்றுள்ளனர். Pilot whale கடல்வாழ் dolphin வகையை சார்ந்தது. இவை 7 மீட்டர் (23 அடி) நீளம் வரை வளரக்கூடியது. முதிர்ந்த இவ்வகை திமிங்கிலம் 3 தொன் எடையை கொண்டிருக்கும். இடருள் உள்ள பெரிய, […]