சந்திரனில் கொடி நடும் இரண்டாம் நாடு சீனா

சந்திரனில் கொடி நடும் இரண்டாம் நாடு சீனா

சந்திரனில் தமது தேசிய கொடியை நடும் இரண்டாவது நாடாக சீனா அமைத்துள்ளது. இன்று வியாழன் சீனாவின் Chang’e-5 சீன தேசிய கொடியை (2 m நீளம், 90 cm உயரம்) சந்திரனில் நாட்டி உள்ளது. 1969 ஆண்டு அமெரிக்காவின் Apollo 11 பயணத்தின்போது முதலாவது அமெரிக்க தேசிய கொடி சந்திரனில் நடப்பட்டது. இதுவரை அமெரிக்கா 6 கொடிகளை அங்கு நட்டு உள்ளது. தற்போது சந்திரனில் தரை இறங்கி, கல் மற்றும் மண் எடுத்து மீண்டும் பூமிக்கு வரும் […]

Boeing 737 MAX விமானம் மீண்டும் சேவையில்

Boeing 737 MAX விமானம் மீண்டும் சேவையில்

அமெரிக்காவின் Boeing நிறுவனம் தயாரிக்கும் 737 MAX வகை விமானம் ஒன்று நேற்று புதன் அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Dallas விமான நிலையத்தில் இருந்து அருகே உள்ள Oklahoma மாநிலத்தில் உள்ள Tulsa நகர் வரை பறந்து உள்ளது. சுமார் 45 நிமிட மேற்படி American Airlines பயணம் நிருபர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட சிலருடன் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் American Airlines ஒரு 737 MAX விமானத்தை […]

பொதுமன்னிப்பு வழங்க ரம்ப் தரப்பு இலஞ்சம் பெற்றது?

வெள்ளைமாளிகை அல்லது ரம்பின் கட்சி இதுவரை பெயர் குறிப்பிடப்படாத குற்றவாளி ஒருவருக்கு இலஞ்சம் பெற்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு (presidential pardon) வழங்கியதா என்று கண்டறிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நீதி திணைக்களத்தால் (justice department) ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை தொடர்பான உண்மைகள் தற்போதே வெளிவந்து உள்ளன. சனாதிபதி ரம்ப் இந்த செய்தியையும் வழமைபோல் ‘fake news’ சாடியுள்ளார். கடந்த கிழமை ரம்ப் 2017 ஆம் ஆண்டு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட […]

கடந்த ஆண்டே அமெரிக்காவில் கரோனா இருந்துள்ளது

கடந்த ஆண்டே அமெரிக்காவில் கரோனா இருந்துள்ளது

இந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிதான் சீனாவில் இருந்து வந்தவர் ஒருவர் மூலம் அமெரிக்காவில் கரோனா ஆரம்பித்தது என்றே இதுவரை நம்பப்பட்டது. ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதத்துக்கு முன்னரே அமெரிக்காவில் கரோனா இருந்துள்ளமை தற்போது அறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் ஜனவரி 17 ஆம் திகதி வரையான காலத்தில் அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தால் இரத்த தானம் மூலம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளை ஆராய்ந்த அமெரிக்காவின் Centers for Disease […]

அமெரிக்க நுகர்வோர் சந்தையை முந்தவுள்ளது சீனா

உலகத்திலேயே மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உள்ள அமெரிக்க நுகர்வோர் சந்தையை (consumer goods market) சீனாவின் நுகர்வோர் சந்தை விரைவில் பின்தள்ளும் என்று 2019 ஆம் ஆண்டுக்கான தரவுகள் கூறுகின்றன. 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நுகர்வோர் சந்தை $6.2 டிரில்லியன் ($6,200 பில்லியன்) ஆக இருந்துள்ளது. அதே ஆண்டு சீனாவின் நுகர்வோர் சந்தை $6.0 டிரில்லியன் ஆக இருந்துள்ளது. வேகமாக வளரும் சீனாவின் நுகர்வோர் சந்தை தற்போது நிலவும் $200 பில்லியன் இடைவெளியை நிரப்பி, தொடர்ந்தும் […]

இலங்கையை தாக்கவுள்ள அடுத்த புயல் Burevi

இலங்கையை தாக்கவுள்ள அடுத்த புயல் Burevi

நிவார் (Nivar) புயலுக்கு பின் இன்னோர் புயல் இலங்கைக்கு கிழக்கே உருவாகி வருகிறது. Burevi என்று பெயரிடப்படவுள்ள இந்த சூறாவளி புதன்கிழமை (2020/12/02) இலங்கையை தாக்க ஆராம்பிக்கும் என்று இந்தியாவின் Meteorological Department (IMD) கூறுகின்றது. ஆனால் இதுவரை அந்த தாழமுக்கம் சூறாவளிக்கான உக்கிரத்தை அடையவில்லை. இந்த சூறாவளியின் மையம் இலங்கையின் கிழக்கே நுழைந்து, மேற்கே வெளியேறி மீண்டும் இந்துசமுத்திரத்தை அடையும். Burevi இந்த ஆண்டுக்கான 5 ஆவது இந்து சமுத்திர சூறாவளி. இந்த சூறாவளி சுமார் […]

நைஜீரியாவில் குறைந்தது 110 உழவர் படுகொலை

நைஜீரியாவில் குறைந்தது 110 உழவர் படுகொலை

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Koshobe என்ற கிராமத்தில் குறைந்தது 110 உழவர் சனிக்கிழமை பிற்பகல் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் பல பெண்களும் கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆயுதங்களுடன் வந்தவர்கள் நெல் அறுவடை செய்யும் இடங்களில் இருந்தவர்களையே படுகொலை செய்துள்ளனர். இவர்களில் பலர் அறுவடை தொழில் தேடி வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள். இப்பகுதி அண்மை காலங்களில் பல வன்முறைகளுக்கு இரையாகி உள்ளது. தாக்குதலுக்கு ஒருவரும் உரிமை கூறவில்லை. ஆனால் இப்பகுதியில் Boko […]

இந்தியா, பாகிஸ்தான் முறுகல், பஸ்மதி அரிசி காரணம்

இந்தியா, பாகிஸ்தான் முறுகல், பஸ்மதி அரிசி காரணம்

ஐரோப்பிய அரிசி சந்தையில் பஸ்மதி (basmati) என்ற சொல்லை பயன்படுத்தும் உரிமையை இந்தியாவின் 7 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் உற்பத்தியாகும் பஸ்மதி அரிசிக்கு மட்டும் வழங்குமாறு இந்தியா விண்ணப்பம் செய்துள்ளது.  பஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடான பாகிஸ்தான் இந்திய விண்ணப்பத்தை நிராகரித்து வாதாடுகிறது. உண்மையில் இந்தியாவின் விண்ணப்பம் 2018 ஆம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், அந்த விசயம் தற்போதே பகிரங்கத்துக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பாகிஸ்தான் எதிர்ப்பு […]

பாகிஸ்தானிலிருந்து கம்போடியா போகும் இலங்கை யானை

பாகிஸ்தானிலிருந்து கம்போடியா போகும் இலங்கை யானை

பாகிஸ்தானில் உள்ள காவன் (Kaavan) என்ற வயது முதிர்ந்த ஆண் யானை ஒன்று கம்போடியா செல்கிறது. ஊழல் காரணமாக தற்போது அந்த யானை உள்ள Marghuzar மிருகக்காட்சி சாலை தரம் அற்றது என்றபடியால், நீதிமன்றம் அந்த காட்சி சாலையை மூட கட்டளையிடுள்ளது. Four Paws International என்ற அமைப்பும், Friends of Islamabad Zoo என்ற அமைப்பும் இணைந்து காவனை சரணாலயம் அனுப்பும் நற்பணியை செய்கின்றன. இதனுடன் இருந்த Saheli என்ற  பங்களாதேசத்து  பெண் யானை 2012 […]

ஈரானின் அணு விஞ்ஞானி இன்று படுகொலை

ஈரானின் அணு விஞ்ஞானி இன்று படுகொலை

ஈரானின் முதன்மை அணு விஞ்ஞானியான Mohsen Fakhrizadeh இன்று தலைநகர் தெஹிரானுக்கு அண்மையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்கிறது ஈரானிய செய்தி நிறுவனமான Fars News Agency. மேற்படி கொலையை அந்நிய அரச பயங்கரவாதம் என்று அழைத்துள்ளார் ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Mohammad Javad Zarif. Fakhrizadeh ஈரானின் இரகசிய அணு ஆயுத தயாரிப்பின் முக்கிய நபர் என்கிறது இஸ்ரேல். 2018 ஆம் ஆண்டு இஸ்ரேலின் பிரதமர் Netanyahu தனது உரை ஒன்றில் Fakhrizadeh […]