இலங்கை அரச bond மீண்டும் 20% ஆல் வீழ்ச்சி

இலங்கை அரச bond மீண்டும் 20% ஆல் வீழ்ச்சி

இலங்கை அரசின் அமெரிக்க டாலர் மூலமான bond அக்டோபர் மாதம் மேலும் 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் மாதம் இது 15.5% ஆல் வீழ்ந்து இருந்தது. ஒரு காலத்தில் ஆசியாவின் தரமான bond ஆக இருந்த இலங்கை அரச bond தற்போது மிகவும் பலமற்ற ஒன்றாக மாறி உள்ளது என்கிறது Bloomberg Barclays சுட்டி. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) கணிப்புப்படி இலங்கையின் இந்த வருட GDP வீழ்ச்சி 5.5% ஆக […]

பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு

பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு

ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீனின் (Philippines) தெற்கு பகுதியை Goni என்ற சூறாவளி தாக்க ஆரம்பித்து உள்ளது. இதன் காற்றுவீச்சு 225 km/h இல் இருந்து 310 km/h வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதனால் சுமார் 1 மில்லியன் மக்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். சூறாவளி Goni அதிகூடிய வல்லமை கொண்ட வகை 5 (Category 5) ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டுக்கு பின் அப்பகுதியை தாக்கும் பலமான சூறாவளி Goni ஆகும். 2013 ஆம் […]

தேர்தல் வெற்றிக்கு வன்முறையை தூண்டும் ரம்ப்

தேர்தல் வெற்றிக்கு வன்முறையை தூண்டும் ரம்ப்

நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்கா சனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவக்கூடிய நிலையில் உள்ள சனாதிபதி வன்முறைகளில் ஈடுபடும் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்க முனைகிறார். வெள்ளிக்கிழமை பைடெனின் பரப்புரை பஸ் ஒன்று Texas மாநிலத்தில் உள்ள Austin நகரம் நோக்கி Hwy 35 இல் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதை சுமார் 100 வாகனங்களை கொண்ட ரம்ப்  ஆதரவு வாகன தொடர் சுற்றிவளைத்து பஸ்ஸை வீதியில் இருந்து தள்ள முயன்றுள்ளன. அந்த வீதியில் வேகம் மணித்தியாலத்துக்கு […]

பிரித்தானிய 4 கிழமைகளுக்கு மீண்டும் முடக்கம்

பிரித்தானிய 4 கிழமைகளுக்கு மீண்டும் முடக்கம்

கரோனா காரணமாக டிசம்பர் 2 ஆம் திகதி வரையான 4 கிழமைகளுக்கு பிரித்தானியாவை மீண்டும் முடக்க உள்ளதாக பிரதமர் ஜோன்சன் இன்று தீர்மானித்து உள்ளார். இம்முறை நத்தார் பண்டிகையும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். உணவகங்கள், pubs, Gym, களியாட்ட நிலையங்கள் போன்ற அத்தியாவசியம் அற்ற நிலையங்கள் மீண்டும் 4 கிழமைகளுக்கு மூடப்படும். ஆனால் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் செயல்படும். முடக்கப்பட்ட ஊழியர்களுக்கான 80% உதவி தொகை நவம்பர் மாதம் வரை நீடிக்கப்படும் என்றும் […]

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை, தாய்வான் காரணம்

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை, தாய்வான் காரணம்

அண்மையில் 20 இந்திய படையினர் இந்திய-சீன எல்லையில் கொலை செய்யப்பட்ட காலத்தில் இருந்து இந்தியாவில் சீன எதிர்ப்பு வளர்ந்துள்ளது. மக்கள் கொண்ட அந்த விசனத்தை தனது அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்தும் நோக்கில் சில பா. ஜ. அரசியவாதிகள் இந்தியா தாய்வானுடன் நேரடி வர்த்தக உடன்படிக்கைகளை (trade accords) மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர். தாய்வானுடன் மற்றைய நாடுகள் வர்த்தகம் செய்வதை சீனா தடை செய்யாவிடினும், மற்றைய நாட்டு அரசுகள் அரசுமட்ட வர்த்தக உடன்படிக்கைகளை தாய்வானுடன் செய்வதை சீனா […]

CANADA DRY குளிர்பானத்தில் துளியும் இஞ்சி இல்லை

CANADA DRY குளிர்பானத்தில் துளியும் இஞ்சி இல்லை

CANADA DRY உலக அளவில் பிரபலமான குளிர்பானம். அதன் ஒரு வகை Ginger Ale ஆகும். அந்த Ginger Ale போத்தல்களில் Made from Real Ginger (அசல் இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்டது) என்ற விளம்பர வசனமும் உண்டு. ஆனால் அதில் பதியப்பட்டு உள்ள உள்ளடக்கத்தில் இஞ்சி என்ற சொல் இல்லை. காரணம் உண்மையில் அதில் இஞ்சி துளியும் இல்லை. இஞ்சி தரும் நலன்களும் இல்லை. தவறை அறிந்த அமெரிக்க அரசு 2019 ஆண்டு அங்கு விற்பனை […]

சட்ட ஒழுங்கில் இலங்கைக்கு 83 புள்ளிகள்

சட்ட ஒழுங்கில் இலங்கைக்கு 83 புள்ளிகள்

அமெரிக்காவின் Gallup என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட 2020 ஆம் ஆண்டுக்கான சட்ட ஒழுங்கு சுட்டியில் இலங்கை 83 புள்ளிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தானும் பங்கதேசமும் 81 புள்ளிகளையும், இந்தியா 79 புள்ளிகளையும் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 43 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் சுமார் 1,000 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியது. இவர்களின் கருத்துக்களும் வேறுசில கணியங்களும் சுட்டி பதிப்பிடலுக்கு பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 144 நாடுகள் இந்த ஆய்வில் பங்கு கொண்டிருந்தன. இந்த ஆண்டுக்கான உலக சராசரி […]

இலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில்

இலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில்

அமெரிக்காவின் சிக்காகோ நகரை தளமாக கொண்ட Beam Suntory என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு வழங்கிய  இலஞ்சத்துக்காக அமெரிக்க அரசுக்கு $20 மில்லியன் தண்டம் செலுத்துகிறது. இந்தியாவில் தனது மதுபானங்களை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ய விரும்பிய Beam அதற்கான அனுமதியை பெற தனது இந்திய முகவர் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு  இலஞ்சம் வழங்கி இருந்தது. அத்துடன் அந்த  இலஞ்ச பணத்தை மறைக்க பொய்யான பதிவுகளையும் தமது கணக்கியலில் வைத்துக்கொண்டது. ஆனால் இதை கண்டுபிடித்த […]

எதியோப்பிய அணைக்கு குண்டு போட அழைத்த ரம்ப்

எதியோப்பிய அணைக்கு குண்டு போட அழைத்த ரம்ப்

ஆபிரிக்க நாடான எத்தியோப்பியா (Ethiopia) நீண்ட காலமாக அமெரிக்க நேச நாடாக இருந்து வந்துள்ளது. ஆனால் எதியோப்பியா Blue Nile ஆற்றின் குறுக்கே கட்டும் Grand Ethiopian Renaissance Dam (GERD) என்ற நீர்மின் அணை காரணமாக அமெரிக்காவுக்கும், எதியோப்பியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி உள்ளது. Lake Victoria வில் இருந்து வரும் White Nile ஆறும், எதியோபியாவில் இருந்து வரும் Blue Nile ஆறும் சூடானின் Khartoum (Sudan) நகருக்கு அண்மையில் இணைந்து நைல் […]