அமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது

அமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது

கடந்த கிழமை அமெரிக்காவின் மத்திய, மாநில, நகர அரசுகள் மீதும், பெரிய கூட்டுத்தாபனங்கள் மீதும் இடம்பெற்ற இணைய தாக்கல் மிக பாரதூரமானது (grave risk) என்று அமெரிக்காவின் Cybersecurity and Infrastructure Security Agency (CISA) கூறியுள்ளது. கடந்த கிழமை கண்டறியப்பட்ட இந்த இணைய தாக்குதல் உண்மையில் கடந்த மார்ச் மதமே ஆரம்பித்து உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயப்படுத்தப்பட்ட malware ஐ பாதிக்கப்பட்ட கணனிகளில் இருந்து நீக்குவதும் மிக சிரமமானது (highly complex and challenging) […]

ஐ.நா. மனித அபிவிருத்தி சுட்டியிடலில் இலங்கை 72ம் இடம்

ஐ.நா. மனித அபிவிருத்தி சுட்டியிடலில் இலங்கை 72ம் இடம்

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் (United Nations Development Program, UNDP) ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் கணிப்பிட்டு வெளியிடும் மனித அபிவிருத்தி சுட்டியிடலில் (HDI, Human Development Index) இலங்கை 72ம் இடத்தை அடைந்துள்ளது. மொத்தம் 189 நாடுகள் இந்த கணிப்புக்கு உள்ளடக்கப்பட்டு இருந்தன. HDI சுட்டி கணிப்பு 1990ம் ஆண்டு ஆரபிக்கப்பட்டது. இந்த ஆண்டு 30வது அறிக்கை ஆகும். கடந்த ஆண்டு 72ம் இடத்தில் இருந்த இலங்கை, ஒருபடி முன்னேறி 71 ஆம் […]

சந்திர கல், மண் மாதிரிகள் சீனா வந்தன

சந்திர கல், மண் மாதிரிகள் சீனா வந்தன

சந்திரனில் எடுத்த கல், மண் மாதிரிகள் இன்று சீனா வந்தடைந்து உள்ளன. சந்திரன் சென்ற சீனாவின் Chang’e-5 கலம் மொத்தம் 23 தினங்களின் பின் திட்டமிட்டபடி வியாழக்கிழமை காலை Inner Mongolia பகுதியில் வீழ்ந்து உள்ளது. அமெரிக்கா, சோவியத் ஆகிய நாடுகளின் பின் சீனா இந்த சாதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. Chang’e-5 கலம் சுமார் 2 kg சந்திர மாதிரிகளை எடுத்துவந்துள்ளது. சில மாதிரிகள் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து பெறப்பட்டன. சில 2 மீட்டர் ஆழத்தில் இருந்து […]

இலங்கையை கைவிட்டது அமெரிக்காவின் MCC உதவி திட்டம்

இலங்கையை கைவிட்டது அமெரிக்காவின் MCC உதவி திட்டம்

Millennium Challenge Corporation (MCC) என்ற அமெரிக்காவின் உதவி திட்டங்களின் கீழ் உள்ள Compact என்ற 5-ஆண்டு உதவி திட்டத்தில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு உள்ளது. இந்த விபரம் MCC தலைமையகத்தினால் புதன்கிழமை (2020/12/16) வெளியிடப்பட்டு உள்ளது. தற்போதைய இலங்கை அரசு MCC திட்டம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இலங்கைக்கு பாதகமானவை என்றுள்ளது இலங்கை அரசு. அண்மையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Mike Pompeo இலங்கை சென்று இது தொடர்பாக உரையாடி இருந்தார். […]

இந்தியாவை அழைத்து, இந்தியாவும் செல்கிறார் பிரித்தானிய பிரதமர்

இந்தியாவை அழைத்து, இந்தியாவும் செல்கிறார் பிரித்தானிய பிரதமர்

அடுத்த ஆண்டு பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள G7 மாநாட்டில் கலந்துகொள்ள G7 அமைப்பில் அங்கம் கொண்டிராத இந்தியா, அஸ்ரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளை அழைத்து உள்ளார் பிரித்தானிய பிரதமர் Boris Johnson. அத்துடன் அடுத்த மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள சுதந்திரதின விழாவுக்கும் பிரித்தானிய பிரதமர் செல்லவுள்ளார். ஆட்சியில் உள்ள பிரித்தானிய பிரதமர் இந்திய சுதந்திரதின விழாவில் கலந்து கொள்வது இம்முறை இரண்டாம் தடவையாக இருக்கும். 1993 ஆம் ஆண்டு பிரதமர் John Major இந்திய சுதந்திரதின விழாவில் பங்குகொண்டிருந்தார். […]

அமெரிக்காவின் கைப்பொம்மையாகிறது இந்தியா, என்கிறது ரஷ்யா

அமெரிக்காவின் கைப்பொம்மையாகிறது இந்தியா, என்கிறது ரஷ்யா

இந்திய-சீன விசயங்களில் இந்தியா அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் கைப்பொம்மையாக செயல்படுகிறது என்ற கருத்துப்பட கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov. அத்துடன் மேற்கு நாடுகள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவையும் துண்டாட முனைகின்றன என்றும் ரஷ்ய அமைச்சர் கூறியுள்ளார். மேற்படி கருத்துக்களை வெளியுறவு அமைச்சர் Russian International Affairs Council என்ற ஆய்வு அமைப்பில் கூறியுள்ளார். ரஷ்ய அமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு பேச்சாளர் Anurag Srivastava இந்தியா தனது சொந்த வெளியுறவு […]

இந்திய iPhone தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம்

இந்திய iPhone தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் பெங்களூருக்கு அண்மையில் உள்ள Narsapura பகுதியில் அமைந்துள்ள Wistron என்ற தாய்வான் தொழிற்சாலையில் சுமார் 2,000 ஊழியர்கள் இன்று ஞாயிரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர் தொழிற்சாலை உடமைகளையும், வாகனங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். நாலு மாதங்கள் வரை தமக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஆர்பாட்டக்காரர் கூறியுள்ளனர். ஊதியம் வழங்கப்படாத நிலையிலும் தம்மை மிகையான நேரம் பணிபுரிய பணிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக உள்ளூர் ஊழியர்களை பணிக்கு அமர்த்தாது, […]

இந்திய செய்தியாளர் கைது, பார்வையாளர் கணிப்பில் ஊழல்?

இந்திய செய்தியாளர் கைது, பார்வையாளர் கணிப்பில் ஊழல்?

அமெரிக்காவின் Fox News போன்ற வலதுசாரி பக்கச்சார்பு தொலைக்காட்சி சேவையை இந்தியாவில் இயக்கிவரும் ARG Outlier Media Lyd. நிறுவனத்தின் அதிபர் (CEO) Vikas Khanchandani இன்று ஞாயிற்றுக்கிழமை மும்பாயில் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் 12 பேரும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். மக்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி, மின் கட்டணமும் செலுத்தி, தனது Republic TV தொலைக்காட்சி சேவையை மட்டும் காண பணமும் வழங்கியதே இவர் மீதான குற்றச்சாட்டு. மக்கள் தொலைக்காட்சியை பார்வையிடாத நேரங்களிலும் தொலைக்காட்சியை […]

நைஜீரியாவில் பல நூறு மாணவர்களை காணவில்லை

நைஜீரியாவில் பல நூறு மாணவர்களை காணவில்லை

Kankara என்ற நைஜீரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள ஆண் பாடசாலை ஒன்றை ஆயுததாரர் முற்றுகை இட்டப்பின் பல நூறு மாணவர்களை காணவில்லை. பாடசாலை மீதான தாக்குதல் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்று உள்ளது. Government Science Secondary School என்ற ஆண்களுக்கான அரச பாடசாலையே இந்த தாக்குதலுக்கு உள்ளாகியது. தாக்குதல் சுமார் 1 மணிநேரம் இடம்பெற்று என்று கூறப்படுகிறது. அப்பாடசாலையில் சுமார் 800 மாணவர்கள் தங்கி இருந்து படித்து வந்துள்ளனர். தாக்குதலின் பின் […]

3 ஆண்டுகளில் சீனாவில் 35% அணுவாயுத அதிகரிப்பு

3 ஆண்டுகளில் சீனாவில் 35% அணுவாயுத அதிகரிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் சீனா தனது அணு ஆயுதங்களின் தொகையை 35% ஆல் அதிகரித்து உள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று. The Bulletin of the Atomic Scientists என்ற ஆய்வு அறிக்கையே வியாழக்கிழமை தனது அறிக்கையில் மேற்படி தரவை வெளியிட்டு உள்ளது. சீனாவிடம் தற்போது 40 அணுவாயுத brigades உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதில் சுமார் அரைப்பங்கு நிலத்தில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்களை கொண்ட ballistic மற்றும் cruise ஏவுகணைகள் ஆகும். […]