கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலில் ரம்ப் தோல்வி அடைந்து இருந்தாலும் தற்போதும் அவர் எவ்வாறாவது கணக்கு காட்டி தொடர்ந்தும் சனாதிபதியாக இருக்க முனைகிறார். அந்த நோக்கில் ஜோர்ஜியா (Georgia) மாநிலத்து அதிகாரிகளை 18 தடவைகள் தொலைபேசியில் அழைத்து அந்த மாநில தேர்தல் முடிவுகளை மாற்றவும் அழுத்தியுள்ளார் ரம்ப். ரம்ப் ஜோர்ஜியா மாநில செயலாளருக்கு (Secretary of State Brad Raffensperger) தொலைபேசி அழைப்பு செய்து அழுத்தியதை அந்த செயலாளர் ஒலிப்பதிவு செய்து பகிரகப்படுத்தி […]
2020ம் ஆண்டு தென்கொரியாவில் சனத்தொகை 20,838 பேரால் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறது அந்நாட்டு Ministry of Interior and Safety. அங்கு கடந்த ஆண்டு மரணத்தொகை 307,764 ஆகவும், பிறப்புக்கள் 275,815 ஆகவும் இருந்துள்ளன. சிலர் வேறுநாடுகளுக்கு செல்வதும், சிலர் மீண்டும் தென்கொரியா வருவதும் கணிப்பில் உள்ளடங்கும். கடந்த ஆண்டில் அங்கு பிறப்பு 10.65% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேவேளை மரணம் 3.1% ஆல் அதிகரித்து உள்ளது. தென்கொரியாவின் தற்போதைய சனத்தொகை 51.83 மில்லியன் ஆக உள்ளது. […]
2013ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் தமக்கிடையே Comprehensive Agreement on Investment (CAI) என்ற முதலீட்டு ஒப்பந்தத்துக்கான பேச்சுக்களை ஆரம்பித்து இருந்தனர். சுமார் 3 ஆண்டுகளுள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று அப்பொழுது கருதப்பட்டு இருந்தாலும், 7 ஆண்டுகளின் பின்னரே அந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தியும் உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு தரப்பும் மற்றைய பகுதில் பாதுகாப்பாக, தடைகள் இன்றி முதலீடுகளை செய்ய வழி செய்கிறது. அத்துடன் இந்த ஒப்பந்தம் […]
மிகையான கரோனா தொற்று காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநில வைத்திய சேவை முறியும் நிலையில் உள்ளது. அதனால் இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டு உள்ளது. Loas Angeles County பகுதியில் சுமார் 21% கரோனா தொற்றியோர் ICU (Intensive Care Unit) படுகைகளில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் வேகமாக குறைவடைந்து வருகின்றன. சில வைத்தியசாலைகளில் நோயாளிகளை ஏற்றிவரும் அம்புலன்ஸ் வண்டிகள் 8 மணித்தியாலங்கள் வரை வெளியே காவல் இருக்கும் நிலை தோன்றியுள்ளது. அந்த வண்டிகள் மீண்டும் […]
புலிகளின் $580,811 பணத்தை முடக்கி வைத்துள்ளதாக அமெரிக்காவின் Department of Treasury வியாழக்கிழமை கூறியுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாத குழுக்கள் மீதான தடையின் அங்கமாவே புலிகளில் பணம் முடக்கப்பட்டு உள்ளது. சுமார் 70 ஆயுத குழுக்களுக்கு சொந்தமான $63 மில்லியன் பணத்தை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்ட Lashkar-e-Taiba என்ற குழுவின் $342,000 பணமும், Harkat-ul-Mujahideen-al-Islami என்ற குழுவின் $45,798 பணமும், Jaish-e Mohammed என்ற குழுவின் $1,725 பணமும் மேற்படி $63 மில்லியன் பணத்துள் […]
யெமென் விமான நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு குறைந்தது 25 பேர் பலியாகியும், 110 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். சவுதியில் இருந்து யெமெனை ஆழ வந்த சவுதி ஆதரவு கொண்ட யெமென் குழு மீதே இந்த தாக்குதல் செய்யப்பட்டு உள்ளது. இக்குழு பாதுகாப்பு கருதி சவுதியில் இருந்தே யெமெனை ஆட்சி செய்து வந்துள்ளது. யெமெனில் இருந்து வந்திருந்த பிரதமர் தானும், தனது அமைச்சர்களும் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் ஈரான் ஆதரவு Houthi ஆயுத […]
தான் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்று செவ்வாய்க்கிழமை ரஜனிகாந்த் கூறியுள்ளார். தனக்கு அண்மையில் ஏற்பட்ட இரத்த அழுத்த வேறுபாடுகளையே அவர் “கடவுளின் எச்சரிக்கை” என்று காரணம் கூறியுள்ளார். ஆனாலும் அவரின் நடிப்பு தொடர்கிறது. 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி பெங்களூரில் பிறந்த ரஜனி 1975ம் ஆண்டில் நடிக்க ஆரம்பித்து விரைவில் அதிக ஊதியம் பெறும் நடிகர் ஆனார். வெற்றிகர நடிகர் ஆனா இவர் அவ்வப்போது அரசியலிலும் தலை காட்டினார். 1996ம் ஆண்டில் தி.மு.க. […]
Arya Rajenran என்ற 21 வயது பெண் கேரளாவின் திருவானந்தபுர நகரின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு Communist Party of India (Marxist) உறுப்பினர். இவருக்கு முன் இந்தியாவில் Sabitha Beegum என்பவர் தனது 23ம் வயதில் முதல்வர் ஆக இருந்துள்ளார். இன்று திங்கள் திருவனந்தபுரத்தில் Arya முதல்வராக பதிவி ஏற்றுள்ளார். திருவானந்தபுரமே கேரளாவின் மிக பெரிய நகரம் ஆகும். அவையில் இருந்த மொத்தம் 99 வாக்குகளில் இவருக்கு 51 வாக்குகள் கிடைத்துள்ளன. […]
சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2028ம் ஆண்டு பின்தள்ளும் என்று பிரித்தானியாவின் CEBR (Centre for Economics and Research) கணிப்பிட்டுள்ளத. சீனா கரோனா பரவலை திறமையாக கட்டுப்படுத்தியதே இதற்கு முதன்மை காரணம் என்கிறது CEBR. CEBR தனது உலக பொருளாதார ஆய்வை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ம் திகதி வெளியிடும். கரோனா காரணமாக உலகின் பெரிய பொருளாதாரங்கள் அனைத்தும் வீழ்ச்சி அடைய, சீனா மட்டும் இந்த ஆண்டு 2% வளர்ச்சியை அடைகிறது. அமெரிக்கா கரோனா காரணமாக வீடுகளுள் முடங்கி இருக்கும் தன் மக்களுக்கு பெரும் உதவி பணம் வழங்க, அவர்கள்அப்பணத்தை […]
இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் முதல் Aeroflot விமான சேவையின் உல்லாச பயணிகள் விமானம் ஒன்று ரஷ்யாவில் இருந்து கொழும்பு வர இருந்தது. டிசம்பர் 27ம் திகதி கொழும்பில் தரையிறங்கவிருந்த இந்த சேவை திடீரெனெ இடைநிறுத்தப்பட்டு உள்ளது. அந்த சேவை குறைந்தது டிசம்பர் 31ம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டு உள்ளது. இரண்டாவது உல்லாச பயணிகள் விமானம் ஒன்று யுகிரைனில் (Ukraine) இருந்து டிசம்பர் 28ம் திகதி வரவுள்ளது. அதன் வரவு தற்போதும் திட்டப்படியே உள்ளது. […]