இஸ்ரேல் பிரதமர் நெட்ரன்யாஹூ (Benjamin Netanyahu) இரகசியமாக சவுதி சென்று அந்நாட்டு இளவரசர் Mohammed bin Salman னை சந்தித்து உள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அச்செய்திகள் உண்மை என்றால், பரம எதிரிகளான இருபகுதியும் உறவாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. ஆனாலும் சவுதி தரப்பு அவ்வாறு சந்திப்பு இடம்பெறவில்லை என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு முதலில் மேற்படி செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. பின்னர் இஸ்ரேலின் கல்வி அமைச்சர் Yoav Gallant சந்திப்பதை உறுதி […]
தமிழ்நாட்டில் தமது காலை ஊன்ற கடுமையாக முனைகிறது இந்திய பிரதமர் மோதியின் பா. ஜ. கட்சி. அதற்கு ஏற்ப காங்கிரஸ் காலத்து இலங்கை தமிழருக்கான உதவிகளை மறைமுகமாக மோதி செய்ததாக கூறியுள்ளார் அமித் சா (Amit Shah). தமிழ்நாட்டில் பரப்புரை செய்யும் இவர் மத்திய அரசின் Home Minister. சனிக்கிழமை (2020/11/21) சென்னை நகரில் அமித் சா ஆற்றிய உரை ஒன்றின்போது இலங்கைக்கு பயணம் செய்த மோதி யாழ்ப்பாணத்தை மறக்கவில்லை (When Modiji visited Sri Lanka, […]
மஹாத்மா காந்தி பயன்படுத்திய சுவிஸ் கடிகாரம் ஒன்று (pocket watch) 12,000 பிரித்தானிய பவுண்ட்ஸ் பெறுமதிக்கு (சுமார் $16,000) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இக்கடிகாரம் தற்போது இயங்கும் நிலையில் இல்லை. Mohanlal Sharma என்ற மரவேலை செய்பவர் ஒருவர் காந்தியின் அமைப்பில் தொண்டராக பணியாற்றி இருந்தார். அவருக்கே மேற்படி கடிகாரத்தை காந்தி 1944 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கி இருந்தார். Sharma அந்த கடிகாரத்தை தனது பேரனுக்கு 1975 ஆம் ஆண்டில் வழங்கி இருந்தார். பேரனே […]
Mackenzie Art Museum என்ற கனடிய நூதனசாலையில் இருந்த 18 ஆம் நூற்றாண்டின் அன்னபூர்ணா சிலை மீண்டும் இந்தியா செல்கிறது. இதை கனடாவின் University of Regina பல்கலைக்கழகத்தின் முதல்வர் இந்திய தூதுவரிடம் கையளித்து உள்ளார். அமெரிக்காவின் Peabody Essex Museum என்ற நூதனசாலையில் பணியாற்றும் Siddhartha Shah என்பவரே மேற்படி சிலையை அடையாளம் கண்டுள்ளார். உடனே அவர் Saskatchewan மாநிலத்தில் உள்ள Regina பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்க, அவர்கள் விசாரணை ஒன்றை செய்து உண்மையை அறிந்து உள்ளனர். […]
சோவியத் காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 ஆங்கில நாடுகளும் இணைந்து Five-Eyes என்ற ஒரு கண்காணிப்பு குழுவை உருவாக்கி இருந்தன. அவற்றின் அப்போதைய நோக்கம் சோவியத்தின் நகர்வுகளை, தொடர்புகளை, இராணுவ உண்மைகளை கண்டறிந்து, தம்முள் பகிர்ந்து கொள்வதே. இன்று வியாழன் அந்த Five-Eyes நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஹாங் காங்கின் பிரிவினை நோக்கம் கொண்ட கட்சியின் ஹாங் காங் அவை உறுப்பினர்கள் 4 பேரை சீனா தடை செய்தது தவறு என்றும், […]
2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அஸ்ரேலிய விசேட படைகள் குறைந்தது 39 அப்பாவிகளை கொலை செய்துள்ளன என்று அஸ்ரேலிய ஜெனரல் Angus Campbell இன்று வியாழன் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக செய்யப்பட்ட விசாரணைகளின் பின்னான அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது. கொலைகள் மூலம் வெற்றியை தேடும் “toxic competitiveness” மனநிலை கொண்ட விசேட படைகளான SAS மற்றும் Second Command Regiment இரண்டுள்ளும் ஓழுக்க கட்டுப்பாடு முறிந்து […]
சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் பெரியதொரு படைத்தளம் ஒன்றை அமைக்கும் கருத்தை அமெரிக்காவின் கடற்படை செயலாளர் (US Navy Secretary) Kenneth Braithwaite முன்வைத்துள்ளார். கடந்த செவ்வாக்கிழமை ஆய்வு இடம்பெற்ற அமர்வு ஒன்றின்போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார். அவ்வாறான பேச்சுக்கள் எதுவும் தம்முடன் நடாத்தப்படவில்லை என்று சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. தற்போது அமெரிக்காவின் 7 ஆம் படை (7th Fleet) ஜப்பானில் நிலைகொண்டுள்ளது என்றாலும், வளரும் சீனாவை எதிர்க்க அது போதியதல்ல என்ற கணிப்பு அமெரிக்காவுக்கு […]
சோவியத் காலத்துக்கு பின்னர் ரஷ்யா தனது முதலாவது கடற்படை தளத்தை சூடானில் (Sudan) அமைக்க உள்ளது. சூடான் செங்கடலோரம் இருப்பதால், இந்த தளம் ரஷ்யாவுக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு இரண்டுக்கும் பொதுவான தளமாக அமையும். இந்த தளத்துக்கான உரிமை 25 ஆண்டு கால ஒப்பந்தமாகும். அதை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வசதியும் உண்டு. இந்த தளம் ரஷ்ய சட்டங்களுக்கு அமையவே செயற்படும், சூடான் சட்டங்களுக்கு அமைய அல்ல.. இந்த தளத்துக்கு வரும் ரஷ்யர்களை சூடான் தடையின்றி […]
சீனாவின் Chongqing நகரில் உள்ள பிரித்தானிய முகவர் நிலையத்தில் கடமையாற்றும் Stephen Ellison என்ற 61 வயது முகவர் (consul-general) ஆறு ஒன்றின் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது 24 வயது சீன பெண் ஒருவர் அந்த அவற்றுள் தடக்கி விழுந்துள்ளார். சம்பவத்தை அறிந்த முகவர் ஆற்றுள் குதித்து ஆபத்தில் இருந்த பெண்ணை கரைக்கு மீட்டுள்ளார். விழுந்த பெண் சில நிமிடங்கள் அசைவு இன்றி, முகத்தை நீருள் அமிழ்த்தியபடியே மிதந்தார். அந்த வழியே சென்ற பலர் வீடியோக்கள் […]
Moderna என்ற மருத்துவ நிறுவனம் தாம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து அதன் 3 ஆம் கட்ட பரிசோதனையில் 94.5% அளவில் கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளதாக கூறுகிறது. சில தினங்களுக்கு முன்னர் Pfizer தனது கரோனா தடுப்பு மருந்து 90% அளவிலான கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறி இருந்தது. Moderna தயாரிக்கும் மருந்து – 20 Celsius (minus 20 C) வெப்பநிலையில் வைத்திருக்கப்படக்கூடியது. அதனால் இது பல வறிய நாடுகளுக்கு இலகுவில் […]