தாய்லாந்தில் மன்னரை அவமதித்த Anchan என்ற 63 வயது பெண்ணுக்கு அந்நாட்டு இரகசிய நீதிமன்றம் 43 ஆண்டு சிறை தண்டனையை விதித்துள்ளது. முதலில் 87 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பின்னரே அது 43 ஆண்டு ஆக குறைக்கப்பட்டது. மேற்படி பெண் செய்த குற்றம் இன்னொருவர் இணையத்தில் பதித்த மன்னர் Vajiralongkorn தொடர்பான ஒலி பதிவு ஒன்றை social media மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதே (share). மன்னருக்கு எதிராக வெளிநாடுகளில் உள்ள தாய்லாந்து மக்கள் செய்யும் […]
Aditya Singh என்ற 36 வயது அமெரிக்க Los Angels வாசி சிக்காகோ நகரில் உள்ள O’Hare விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்கள் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு சோதனைகளின் பின் பயணிக்க உள்ள பயணிகளை மட்டுமே கொண்டிருக்கும் பகுதியிலேயே இவர் வாழ்ந்தமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 19ம் திகதி Los Angels நகரில் இருந்து விமானம் மூலம் O’Hare வந்த இவர் ஜனவரி 16ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் […]
வியாழக்கிழமை (2021/01/21) முதல் இலங்கை உல்லாச பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்க உள்ளது. ஆனால் இலங்கை வரும் உல்லாச பயணிகள் கடுமையான நிபந்தனைகளை கடைப்பிடித்தல் அவசியம். இலங்கை வரும் உல்லாச பயணிகள் (tourist விசா) அரசினால் அனுமதிக்கப்பட்ட 55 விடுதிகளில் ஒன்றிலேயே தங்கியிருந்தால் அவசியம். இக்காலத்தில் இந்த விடுதிகளுக்கு இலங்கையர் அனுமதிக்கப்பட்டார். பயணிகள் இலங்கை வருவதற்கு ஆகக்கூடியது 4 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட negative Covid-19 PCR பரிசோதனை முடிவுகளை கொண்டிருத்தல் அவசியம். ஆகக்கூடியது 7 நாட்கள் வரை இலங்கையில் […]
இன்று சனிக்கிழமை நாசா (NASA) தனது மிகப்புதிய RS-25 என்ற ஏவு இயந்திரத்தை ஒத்திகை செய்துள்ளது. மொத்தம் 8 நிமிடங்கள் இந்த பரிசோதனை இடம்பெற இருந்தாலும், 1 நிமிடம் 15 செக்கன்களில் பரிசோதனை இடைநிறுத்தப்படுள்ளது. பாதகமான தரவுகளே காரணம் என்றாலும், விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வரும் காலங்களில் நாசா இந்த இயந்திரத்தை பயன்படுத்தியே அண்டவெளி பயணங்களை மேற்கொள்ளும். அண்டவெளி பயணங்களுக்கான ஏவுகலம் இந்த RS-25 என்ற பெயர்கொண்ட இயந்திரங்களில் நான்கை கொண்டிருக்கும். இந்த 4 இயந்திரங்களும் மொத்தம் […]
இந்தோனேசியாவின் சுலவெசி (Sulawesi) தீவில் வெள்ளிக்கிழமை சாமத்தில் இடம்பெற்ற 6.2 அளவிலான நிலநடுக்கத்துக்கு தற்போதைய கணிப்புப்படி குறைந்தது 42 பேர் பலியாகியும், சுமார் 650 பேர் காயமடைந்து உள்ளனர். பலர் தற்போதும் இடிபாடுகளுள் முடங்கி உள்ளனர்.ஒரு இடத்தில் உள்ள 8 கட்டடங்களுள் மட்டும் சுமார் 20 பேர் அகப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கனரக வாகனங்களின் உதவியுடன் இடம்பெறுகின்றன. நிலநடுக்கம் சில இடங்களில் பாரிய மண் சரிவுகளையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த சரிவுகளுக்கும் பலர் பலியாகி […]
பாகிஸ்தானுக்கும், பங்களாதேசத்துக்கும் இடையிலான உறவை சீனா வளர்கின்றது என்று இந்தியா அச்சம் கொண்டுள்ளது. கடந்த கிழமை பாகிஸ்தான் பங்களாதேசத்தினருக்கான விசா நிபந்தனையை நீக்கி உள்ளது. அத்துடன் 1971ம் ஆண்டு யுத்தங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு பாகிஸ்தான் மன்னிப்பு கேட்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. வலிமை குறைந்திருந்த கிழக்கு பாகிஸ்தான் வலிமை கூடிய மேற்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பங்களாதேசம் ஆனா காலத்தில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவு குன்றி இருந்தது. இரண்டும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் அவர்களுக்கு இடையில் […]
அமெரிக்க காங்கிரசின் ஒரு பாகமான House அவை இன்று புதன்கிழமை சனாதிபதி மீது impeach என்ற பதவி விலக்கல் தீர்மானத்தை எடுத்துள்ளது. Democratic கட்சியின் பெரும்பான்மையை கொண்ட House அவை ரம்பை impeach செய்வது இது இரண்டாம் தடவை. அதனால் ரம்ப் மட்டுமே இரண்டு முறைகள் impeach செய்யப்பட்ட சனாதிபதி ஆகிறார். Impeachment தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும் (அனைத்து Democratic வாக்குகள் + 10 Republican வாக்குகள்), எதிராக 197 வாக்குகளும் (அனைத்தும் Republican வாக்குகள்) […]
இந்திய-சீன எல்லையில் இருந்து சுமார் 10,000 சீன படைகள் பின் நகர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு கிழமைகளாக இந்த நகர்வு இடம்பெற்று வருகின்றது. இந்திய-சீன எல்லையில் போர் உருவாகாது என்ற நம்பிக்கையிலேயே சீனா தனது படைகளை பின் நகர்த்துவதாக கூறப்படுகிறது. சீன நகர்வின் பின் இந்தியாவும் தனது படைகளை பின் நகர்த்தலாம் என்றும் கருதப்படுகிறது. இந்திய இராணுவ தளபதி ஜெனரல் Manoj Mukund Naravane இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் விரைவில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம் […]
அமெரிக்காவில் வரும் 20ம் திகதி பைடென் சனாதிபதியாக பதவி ஏற்பதை (inauguration) தடுக்க ஆயுதம் தரித்த ரம்பின் ஆதரவாளர் 50 மாநில Capitol நிலையங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள மத்திய அரசின் Capitol எங்கும் ஆர்பாட்டங்களில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க மத்திய போலீஸ் அமைப்பான FBI க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் சட்டப்படி தனிநபர் ஆயுதங்களை கொண்டிருக்கலாம். மாநிலங்கள் ஒரு நாடாக இணைந்த காலத்தில் இந்த உரிமை அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. ரம்ப் impeachment மூலம் […]
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் நடத்திய ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் மூவர் மீது அமெரிக்க Justice Department வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று செய்யப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்கு மொத்தம் 268 பேர் பலியாகி இருந்தனர். அதில் 5 பேர் அமெரிக்கர். Mohamed Naufar, Mohamed Anwar Mohamed Riskan, Ahamed Milhan Hayathu Mohamed ஆகியோரே மேற்படி சந்தேகநபர்கள். இவர்கள் மீது Los Angeles நகரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு […]