அமெரிக்க Capitol வன்முறைக்கு 4 பேர் பலி

அமெரிக்க Capitol வன்முறைக்கு 4 பேர் பலி

அமெரிக்க காங்கிரசில் (US Capitol) ரம்பின் ஆதரவாளர் இன்று மேற்கொண்ட வன்முறை தாக்குதலின்பொழுது பலியானோர் தொகை 4 ஆக உயர்ந்துள்ளது. சனாதிபதி நிலைகொண்டுள்ள வெள்ளை மாளிகைக்கு அடுத்து அமெரிக்காவின் பிரதான கட்டிடமான US Capitol அமெரிக்க காங்கிரசின் அமர்விடம். மரணித்தவருள் ஒருவர் பெண். அவர் துப்பாக்கிக்கு சூட்டுக்கு இலக்காகி மரணமானார். அத்துடன் இன்னோர் பெண்ணும், இரு ஆண்களும் மரணமாகி இருந்தாலும் அவர்களின் மரண காரணங்கள் அறிவிக்கப்படவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய பெண் தனது மனைவி Ashli Babbitt […]

அமெரிக்க Capitol உள்ளே சூட்டுக்குள்ளான பெண் மரணம்

அமெரிக்க Capitol உள்ளே சூட்டுக்குள்ளான பெண் மரணம்

இன்று புதன்கிழமை அமெரிக்காவின் Capitol என்று அழைக்கப்படும் காங்கிரஸ் உள்ளே ரம்ப் ஆதரவாளர் நுழைந்து வன்முறைகள் செய்தபோது துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் பலியாகி உள்ளார். Dustin Sternbeck என்ற Metropolitan Police Department பேச்சாளர் இந்த செய்தியை தெரிவித்து உள்ளார். ஆனாலும் பலியான பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இன்னோர் ஆண் சுவர்களால் ஏற முயன்று வீழ்ந்து கவலைக்கு இடமான நிலையில் சிகிக்சை பெற்று வருகிறார். Capitol கட்டிடம் தற்போது முற்றாக போலீசார் கைக்கு […]

அமெரிக்க காங்கிரசில் ரம்ப் ஆதரவாளர் வன்முறையில்

அமெரிக்க காங்கிரசில் ரம்ப் ஆதரவாளர் வன்முறையில்

கடந்த நவம்பர் மாத தேர்தலில் தோல்வி அடைந்த அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆதரவாளர் அமெரிக்காவின் காங்கிரசில் (US Capitol) இன்று வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். பைடென் வெற்றியை காங்கிரஸ் உறுதி செய்யும் நிகழ்வின் பொழுதே மேற்படி வன்முறைகள் நிகழ்கின்றன. புதன்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் வன்முறைகள் ஆரம்பமாகி உள்ளன. தெரு சண்டைகள் போன்ற சண்டைகள் காங்கிரஸ் உள்ளே பாதுகாப்பு படையினருக்கும், ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்று உள்ளன. சிலர் துப்பாக்கி சூட்டுக்கு காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்த பலர் வைத்தியசாலைகளுக்கு […]

தோல்விகளுக்கு வருந்தினார் வடகொரிய தலைவர் கிம்

தோல்விகளுக்கு வருந்தினார் வடகொரிய தலைவர் கிம்

வழமைக்கு மாறாக தனது ஆட்சி சந்தித்த தோல்விகளுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார் வடகொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un). ஹிட்லர், சதாம் போன்ற சர்வாதிகாரிகள் பொதுவாக தம் தரப்பு தோல்விகளை ஏற்பது இல்லை. இந்நிலையில் வடகொரியா தலைவரின் வருந்தல் வித்தியாசமாக தெரிகிறது. அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் 8ம் அமர்வின் (Workers’ Party’s 8th Congress) பொழுதே கிம் தமது தோல்வியை ஏற்றுள்ளார். “ஏறக்குறைய எல்லா துறைகளும் எதிர்பார்த்த அளவில் இருந்து மிக […]

சீன நிறுவனங்களின் தடையை கைவிட்டது NYSE

சீன நிறுவனங்களின் தடையை கைவிட்டது NYSE

அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது Executive Order மூலம் சீனாவின் 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களை NYSE (New York Stock Exchange) என்ற பங்கு சந்தையில் இருந்து இடைநிறுத்த (de-list) அறிவித்து இருந்தார். அதன்படி நாளை வியாழன் முதல் அந்த 3 நிறுவனங்களும் NYSE பங்கு சந்தையில் தமது பங்குகளை சந்தைப்படுத்துவது தடை செய்யப்படவிருந்தது. ஆனால் அவ்வாறு தடை செய்வதை இடைநிறுத்தி உள்ளதாக இறுதி நேரத்தில் NYSE கூறியுள்ளது. சீனாவின் China Telecom, China Mobile, China […]

கட்டார் மீதான தடையை விலக்குகிறது சவுதி

கட்டார் மீதான தடையை விலக்குகிறது சவுதி

2017ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டார் (Qatar) மீது சவுதி விதித்திருந்த போக்குவரத்துக்கு, எல்லை, கடல், அரசியல் தடைகளை சவுதி உடனடியாக விலக்க உள்ளது என்று குவைத்தின் வெளிவிவகார அமைச்சர் Ahmad Nasser Al Sabah இன்று திங்கள் தெரிவித்து உள்ளார். தடை விலக்கப்பட்டால் கட்டார் விமான சேவை விமானங்கள் சவுதி, UAE ஆகிய நாடுகளுக்கு மேலாக பறக்க முடியும். பெரியதோர் நாடான சவுதிக்கு மேலாக பறக்க முடியாததால் தற்போது கட்டார் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றியே […]

ரம்ப் தேர்தல் முடிவுவை மாற்ற சட்டவிரோத அழுத்தம்

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலில் ரம்ப் தோல்வி அடைந்து இருந்தாலும் தற்போதும் அவர் எவ்வாறாவது கணக்கு காட்டி தொடர்ந்தும் சனாதிபதியாக இருக்க முனைகிறார். அந்த நோக்கில் ஜோர்ஜியா (Georgia) மாநிலத்து அதிகாரிகளை 18 தடவைகள் தொலைபேசியில் அழைத்து அந்த மாநில தேர்தல் முடிவுகளை மாற்றவும் அழுத்தியுள்ளார் ரம்ப். ரம்ப் ஜோர்ஜியா மாநில செயலாளருக்கு (Secretary of State Brad Raffensperger) தொலைபேசி அழைப்பு செய்து அழுத்தியதை அந்த செயலாளர் ஒலிப்பதிவு செய்து பகிரகப்படுத்தி […]

தென்கொரியாவிலும் சனத்தொகை வீழ்ச்சி

தென்கொரியாவிலும் சனத்தொகை வீழ்ச்சி

2020ம் ஆண்டு தென்கொரியாவில் சனத்தொகை 20,838 பேரால் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறது அந்நாட்டு Ministry of Interior and Safety. அங்கு கடந்த ஆண்டு மரணத்தொகை 307,764 ஆகவும், பிறப்புக்கள் 275,815 ஆகவும் இருந்துள்ளன. சிலர் வேறுநாடுகளுக்கு செல்வதும், சிலர் மீண்டும் தென்கொரியா வருவதும் கணிப்பில் உள்ளடங்கும். கடந்த ஆண்டில் அங்கு பிறப்பு 10.65% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேவேளை மரணம் 3.1% ஆல் அதிகரித்து உள்ளது. தென்கொரியாவின் தற்போதைய சனத்தொகை 51.83 மில்லியன் ஆக உள்ளது. […]

ஐரோப்பா, சீனா முதலீட்டு ஒப்பந்தம், அமெரிக்கா விசனம்

ஐரோப்பா, சீனா முதலீட்டு ஒப்பந்தம், அமெரிக்கா விசனம்

2013ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் தமக்கிடையே Comprehensive Agreement on Investment (CAI) என்ற முதலீட்டு ஒப்பந்தத்துக்கான பேச்சுக்களை ஆரம்பித்து இருந்தனர். சுமார் 3 ஆண்டுகளுள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று அப்பொழுது கருதப்பட்டு இருந்தாலும், 7 ஆண்டுகளின் பின்னரே அந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தியும் உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு தரப்பும் மற்றைய பகுதில் பாதுகாப்பாக, தடைகள் இன்றி முதலீடுகளை செய்ய வழி செய்கிறது. அத்துடன் இந்த ஒப்பந்தம் […]

கலிபோர்னியா வைத்திய சேவை முறியும் நிலையில்

கலிபோர்னியா வைத்திய சேவை முறியும் நிலையில்

மிகையான கரோனா தொற்று காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநில வைத்திய சேவை முறியும் நிலையில் உள்ளது. அதனால் இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டு உள்ளது. Loas Angeles County பகுதியில் சுமார் 21% கரோனா தொற்றியோர் ICU (Intensive Care Unit) படுகைகளில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் வேகமாக குறைவடைந்து வருகின்றன. சில வைத்தியசாலைகளில் நோயாளிகளை ஏற்றிவரும் அம்புலன்ஸ் வண்டிகள் 8 மணித்தியாலங்கள் வரை வெளியே காவல் இருக்கும் நிலை தோன்றியுள்ளது. அந்த வண்டிகள் மீண்டும் […]