ரஷ்யாவும் சீனாவும் இணந்து சந்திரனில் ஆய்வுகூடம் ஒன்றை அமைக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவின் Roscosmos அமைப்பும் சீனாவின் National Space Administration அமைப்பும் இணங்கி உள்ளன. செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பு விடப்பட்டு உள்ளது. International Lunar Research Station (ILRS) என்ற இந்த ஆய்வுகூடம் சந்திரனின் விண்ணில் அல்லது நிலத்தில் அமையலாம். சாதகமான நிலை ஏற்படின் சந்திரனின் விண்ணிலும், நிலத்திலும் இரண்டு ஆய்வு கூடங்கள் அமையலாம். இந்த ஆய்வு கூடம் (அல்லது கூடங்கள்) மற்றைய நாடுகளின் […]
அமெரிக்காவும், சீனாவும் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நேரடி பேச்சுக்களை விரைவில் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இருதரப்பும் இந்த விசயம் தொடர்பாக முறைப்படி அறிவிப்புகள் எதையும் இதுவரை செய்யவில்லை. முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்காலத்தில் முறிந்துபோன அமெரிக்க-சீன உறவை மீண்டும் புதுப்பிக்க பைடென் ஆட்சியில் உள்ள அமெரிக்கா முனைகிறது. அலாஸ்காவின் Anchorage நகரில் இடம்பெறக்கூடும் இந்த பேச்சில் சீனாவின் Yang Jiechi மற்றும் Wang Yi கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தரப்பில் Antony Blinken […]
நைஜீரியாவின் முன்னாள் ஆளுநர் ஒருவர் திருடிய $5.8 மில்லியன் பணத்தை மீண்டும் நைஜீரியாவுக்கு அனுப்ப பிரித்தானியா இணங்கி உள்ளது. நைஜீரியாவின் Delta மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் James Ibori என்பவரிடம் இருந்தே இந்த பணம் முடக்கப்பட்டது. 1980ம் ஆண்டுகளில் பிரித்தானியா சென்ற Ibori அங்கு கடை ஒன்றில் காசாளராக பணிபுரிந்தார். அப்போது அவர் செய்த திருட்டுகள் காரணமாக 1991ம் ஆண்டு குற்றவாளியாக காணப்பட்டு இருந்தார். பின் அவர் மீண்டும் நைஜீரியா சென்று அங்கு அரசியல் குதித்தார். தனக்கு […]
இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon தான் இலங்கையின் கண்காணிப்பில் உள்ளேனா என்று கேள்வி ஒன்றை விடுத்துள்ளார். அண்மையில் அவர் Tareq Ariful Islam என்ற இலங்கையில் உள்ள பங்களாதேசத்தின் தூதுவருடன் தனிப்பட்ட முறையில் கதைத்து உள்ளார். Colombo 7 இல் உள்ள Canada House நிலையத்தில் இடம்பெற்ற இந்த உரையாடல் பகிரங்கம் செய்து இருக்கப்படவில்லை. ஆனால் The Island செய்தி நிறுவனம் இந்த உரையாடலை மார்ச் மாதம் 3ம் திகதி பகிரங்கம் செய்துள்ளது. The island […]
அமெரிக்க மக்களை கரோனாவில் இருந்து தகுந்த முறையில் அமெரிக்கா பாதுகாக்க தவறியதற்கான காரணங்களுள் ஊழலே முதற்காரணம் என்கிறது The New York Times செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரை ஒன்று. குறிப்பாக அரசியல் செல்வாக்கு கொண்ட Emergent என்ற தனியார் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்துகளை மட்டுமே அமெரிக்க அரசின் Centers for Disease Control and Prevention என்ற திணைக்களத்துக்கு மிகையாக விற்பனை செய்து வந்துள்ளது. Centers for Disease Control and […]
Microsoft நிறுவனத்தின் Exchange என்ற email server களை கொண்ட குறைந்தது 60,000 நிறுவனங்களின் மீது hackers தாக்கி, தரவுகளை களவாடி உள்ளதாக Microsoft நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி வழங்க உள்ளதாக வெள்ளைமாளிகை கூறியுள்ளது. இந்த தாக்குதலை சீனாவின் ஆதரவு கொண்ட hackers குழுவே செய்ததாக தாம் நம்புவதாக Microsoft கூறியுள்ளது. Exchange server softwareரில் இருந்த பலவீனத்தை (bug) அறிந்த hackers […]
சீனா ஐரோப்பிய நாடுகளுடனான தனது இணைய தொடர்பை வலுப்படுத்த புதியதோர் கடலடி fiber optic cable இணைப்பை பதித்து வருகிறது. Peace Cable என்ற பெயர் கொண்ட இந்த இணைப்பு சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஊடு (CPEC திட்டத்தில்) அரபு கடலை நிலம் வழியே சென்று அடைந்து, பின் அங்கிருந்து பிரான்சின் Marseille துறைமுகத்தை இந்துசமுத்திரம், சுயஸ் கால்வாய் ஊடு நீருக்கு அடியே சென்று அடையும். இந்த cable தென்னாபிரிக்கா, கென்யா, Djibouti ஆகிய பல நாடுகளையும் […]
நியூசிலாந்தின் Kermadec தீவுகளின் அருகே உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் 8.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவுகள் நியூசிலாந்து பெருநிலத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 1,000 km தூரத்தில் உள்ளன. அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 3 மீட்டருக்கும் அதிக அளவில் அலைகள் கரையை அடையலாம் என்றும் கூறப்படுகிறது. குறைந்தது 3 பெரிய நடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. முதல் நடுக்க எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டு இருந்தாலும் மூன்றாம் நடுக்கம் […]
பாகிஸ்தானில் சீனா செய்துவரும் China-Pakistan Economic Corridor (CPEC) திட்டத்தில் இலங்கையையும் இணைய பாகிஸ்தான் அழைத்து உள்ளது. அந்த அழைப்பை இலங்கை சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ளார். இந்த அழைப்பு இந்தியாவுக்கு கவலையை அளித்துள்ளது. அனால் இந்தியா பகிரங்கமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அரபு கடலோரம் பாகிஸ்தானில் அமைக்கப்படும் பெரிய Gwadar துறைமுகம், அந்த துறைமுகத்தை சீனாவின் Kashgar நகருடன் இணைக்க அமைக்கப்படும் Gwadar-Lahore-Islamabad-Kashgar ரயில் பாதை இரண்டும் CPEC திட்டத்தின் பிரதான பாகங்கள். […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களை பயணித்த Ford Expedition SUV வாகனத்தில் 8 பேருக்கு மட்டுமே ஆசனங்கள் உண்டு. ஆனால் அதில் 25 பேர் பயணித்து உள்ளனர். அந்த வாகனம் இரண்டு பெட்டிகளை இழுத்து செல்லும் கனரக வாகனம் ஒன்றின் குறுக்கே சென்று விபத்துக்கு உள்ளானது. பலியானோர் மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற அகதிகள் என்று கூறப்படுகிறது. அன்று குறைந்தது 44 பேர் எல்லை வேலியில் […]