ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

Tse Chi Lop (வயது 56) என்ற ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரரை நெதர்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் பிறந்து தற்போது கனடாவில் குடியுரிமை கொண்டு வாழும் இவர் கனடா செல்ல விமானம் ஒன்றில் ஏற முற்படுகையிலேயே கைது செய்யப்பட்டு உள்ளார். இவரை கைது செய்ய அஸ்ரேலியா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முனைந்து வந்துள்ளது. அஸ்ரேலியாவுக்கு செல்லும் போதைகளின் 70% பங்கு இவர் மூலமே செல்கிறது என்று Australian Federal Police கூறியுள்ளது.இவரை கைது […]

ஆபிரிக்காவில் இலஞ்சம் வழங்கியவருக்கு ஜெனீவாவில் சிறை

ஆபிரிக்காவில் இலஞ்சம் வழங்கியவருக்கு ஜெனீவாவில் சிறை

Guinea என்ற ஆபிரிக்க நாட்டு அரசியல்வாதிகளுக்கு $8.5 மில்லியன் இலஞ்சம் வழங்கிய குற்றத்துக்காக Beny Steinmetz என்ற இஸ்ரேல் வர்த்தகருக்கு ஜெனீவா இன்று வெள்ளிக்கிழமை 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் இவர் ஜெனீவாவுக்கு $56 மில்லியன் தண்டமும் செலுத்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இவருக்கு பிராஸ்சின் குடியுரிமையும் உண்டு. சுவிஸ் நாட்டு சட்டத்தை மீறியதாலேயே மேற்படி வழக்கு சுவிஸில் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. இது Guinea சட்டத்தை மீறியதற்கான வழக்கு அல்ல. 2006ம் […]

தமிழருக்கு உரு ஏற்றுகிறதா தமிழ்Mirror?

தமிழருக்கு உரு ஏற்றுகிறதா தமிழ்Mirror?

தமிழ்Mirror என்ற இலங்கையை தளமாக கொண்ட தமிழ் பத்திரிகை “சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கை தணிக்கும் அகழ்வு” என்ற ஒரு ஆசிரியர் தலையங்கத்தை இன்று (2021/01/21) பதித்துள்ளது. இந்த ஆசிரியர் தலையங்கம் குருந்தூர் சம்பவத்தை அலசி ஆராய்ந்து குருந்தூரில் புத்தரை நிலைநாட்டியோரையும் துணிவுடன் கண்டிக்கிறது. ” தமிழர்களுக்கே சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள முமுழமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக் கல்லு பகுதிகளில் இரண்டு விகாரைகள் இருந்தமைக்கான சிதைவுகள் […]

Pompeo உட்பட ரம்ப் ஆட்சி அதிகாரிகள் 28 பேர் மீது சீனா தடை

ரம்ப் ஆட்சியில் வெளியுறவு செயலாளராக ஆக கடமையாற்றிய Mike Pompeo உட்பட மொத்தம் 28 பேர் மீது சீன தடை விதித்து உள்ளது. இந்த தடை காரணமாக 28 பேரும் சீனா, ஹாங் காங், மக்கா (Macao) ஆகிய இடங்களுக்கு பயணிக்க முடியாது. அத்துடன் இவர்களுடன் தொடர்பு கொண்ட வர்த்தகங்கள் சீனா, ஹாங் காங், மக்கா ஆகிய இடங்களில் செயற்படவும் முடியாது. ரம்பின் Health and Human Services செயலாளர் Alex Azar, வர்த்தக ஆலோசகர் Peter […]

வாடகை தாய்மூல குழந்தைகளை கைவிட்ட சீன நடிகை

வாடகை தாய்மூல குழந்தைகளை கைவிட்ட சீன நடிகை

Zheng Shuang என்ற பிரபல சீன நடிகை (வயது 29) தனக்கும், Zhang Heng (வயது 30) என்ற தயாரிப்பாளருக்கும் அமெரிக்காவில் இரண்டு வாடகை தாய்மார்கள் மூலம் (surrogacy) பெற்ற இரண்டு குழந்தைகளையும் கைவிட்டுள்ளார். இந்த நடிகையின் செயல் சீனாவில் அவர்மீது எதிர்ப்பை உருவாகியுள்ளது திருமணமாகாதா நடிகை Zheng தயாரிப்பாளர் Zhang உடனான உறவை முறித்துக்கொண்டதே குழந்தைகளை கைவிட காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள தந்தை Zhang உடன் வாழ்கின்றன. ஆண் குழந்தை […]

பைடென் அமெரிக்க சனாதிபதியானார்

பைடென் அமெரிக்க சனாதிபதியானார்

ஒபாமா காலத்து உதவி சனாதிபதி ஜோ பைடென் (Joe Biden) இன்று புதன்கிழமை (2021/01/20) அமெரிக்காவின் 46 ஆவது சனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணியளவில் இந்த பதவியேற்பு நிகழ்ந்தது. பதவி ஏற்பு நிகழ்வில் ரம்பின் உதவி சனாதிபதி Mike Pence, முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா, கிளின்டன், புஷ் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர். வரலாற்றில் முதல் தடவையாக வெளியேறும் சனாதிபதி ரம்ப் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. கரோனா காரணமாக மக்கள் பங்கொள்ள முடியாத நிலையில் […]

மன்னரை அவமதித்த 63 வயது பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

மன்னரை அவமதித்த 63 வயது பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

தாய்லாந்தில் மன்னரை அவமதித்த Anchan என்ற 63 வயது பெண்ணுக்கு அந்நாட்டு இரகசிய நீதிமன்றம் 43 ஆண்டு சிறை தண்டனையை விதித்துள்ளது. முதலில் 87 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பின்னரே அது 43 ஆண்டு ஆக குறைக்கப்பட்டது. மேற்படி பெண் செய்த குற்றம் இன்னொருவர் இணையத்தில் பதித்த மன்னர் Vajiralongkorn தொடர்பான ஒலி பதிவு ஒன்றை social media மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதே (share). மன்னருக்கு எதிராக வெளிநாடுகளில் உள்ள தாய்லாந்து மக்கள் செய்யும் […]

சிக்காகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் வாழ்ந்த பயணி

சிக்காகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் வாழ்ந்த பயணி

Aditya Singh என்ற 36 வயது அமெரிக்க Los Angels வாசி சிக்காகோ நகரில் உள்ள O’Hare விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்கள் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு சோதனைகளின் பின் பயணிக்க உள்ள பயணிகளை மட்டுமே கொண்டிருக்கும் பகுதியிலேயே இவர் வாழ்ந்தமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 19ம் திகதி Los Angels நகரில் இருந்து விமானம் மூலம் O’Hare வந்த இவர் ஜனவரி 16ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் […]

வியாழன் முதல் உல்லாச பயணிகள், கடுமையான நிபந்தனைகள்

வியாழன் முதல் உல்லாச பயணிகள், கடுமையான நிபந்தனைகள்

வியாழக்கிழமை (2021/01/21) முதல் இலங்கை உல்லாச பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்க உள்ளது. ஆனால் இலங்கை வரும் உல்லாச பயணிகள் கடுமையான நிபந்தனைகளை கடைப்பிடித்தல் அவசியம். இலங்கை வரும் உல்லாச பயணிகள் (tourist விசா) அரசினால் அனுமதிக்கப்பட்ட 55 விடுதிகளில் ஒன்றிலேயே தங்கியிருந்தால் அவசியம். இக்காலத்தில் இந்த விடுதிகளுக்கு இலங்கையர் அனுமதிக்கப்பட்டார். பயணிகள் இலங்கை வருவதற்கு ஆகக்கூடியது 4 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட negative Covid-19 PCR பரிசோதனை முடிவுகளை கொண்டிருத்தல் அவசியம். ஆகக்கூடியது 7 நாட்கள் வரை இலங்கையில் […]

இடைநிறுத்தப்பட்ட நாசாவின் மிகப்பெரிய ஏவு இயந்திர ஒத்திகை

இடைநிறுத்தப்பட்ட நாசாவின் மிகப்பெரிய ஏவு இயந்திர ஒத்திகை

இன்று சனிக்கிழமை நாசா (NASA) தனது மிகப்புதிய RS-25 என்ற ஏவு இயந்திரத்தை ஒத்திகை செய்துள்ளது. மொத்தம் 8 நிமிடங்கள் இந்த பரிசோதனை இடம்பெற இருந்தாலும், 1 நிமிடம் 15 செக்கன்களில் பரிசோதனை இடைநிறுத்தப்படுள்ளது. பாதகமான தரவுகளே காரணம் என்றாலும், விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வரும் காலங்களில் நாசா இந்த இயந்திரத்தை பயன்படுத்தியே அண்டவெளி பயணங்களை மேற்கொள்ளும். அண்டவெளி பயணங்களுக்கான ஏவுகலம் இந்த RS-25 என்ற பெயர்கொண்ட இயந்திரங்களில் நான்கை கொண்டிருக்கும். இந்த 4 இயந்திரங்களும் மொத்தம் […]