இந்திய கடலுள் அனுமதி இன்றி அமெரிக்க கப்பல்

இந்திய கடலுள் அனுமதி இன்றி அமெரிக்க கப்பல்

இந்தியாவின் அனுமதி பெறாது இந்திய கடலுக்குள் அமெரிக்கா தனது யுத்த கப்பலை செலுத்தியதால் விசனம் கொண்ட இந்தியா அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. ஆனால் அமெரிக்கா குறித்த பகுதி கடல் மீதான இந்தியாவின் உரிமையை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை USS John Paul Jones என்ற அமெரிக்காவின் 7ம் படைக்குரிய (7th Fleet) யுத்த கப்பல் (guided-missile destroyer) இலச்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தூரத்தில் சென்றுள்ளது. 1982ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட United Nations Convention on […]

யுக்கிரைன்-ரஷ்ய எல்லையில் மீண்டும் முறுகல் உக்கிரம்

யுக்கிரைன்-ரஷ்ய எல்லையில் மீண்டும் முறுகல் உக்கிரம்

ரஷ்யாவை எல்லையாக கொண்ட யுக்கிரைனின் கிழக்கு பகுதியில் மீண்டும் முறுகல் நிலை உக்கிரம் அடைந்து உள்ளது. இந்நிலை மீண்டும் ரஷ்யாவுக்கும்,  யுக்கிரைனுக்கும் இடையில் போர் ஒன்றுக்கு வழிவகுக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாக ரஷ்யாவும் தனது படைகளை யுக்கிரைன் எல்லையோரம் குவித்து வருகிறது. யுக்கிரைனின் கிழக்கே ரஷ்ய மொழி பேசும் மக்களே பெருமளவில் வாழ்கின்றனர். இப்பகுதியே பாரிய தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இப்பகுதி மக்கள் கூடிய அரசியல் சுதந்திரத்தை யுக்கிரைன் மத்திய அரசிடம் இருந்து பெற முனைகின்றனர். […]

யாருக்கு சொல்லியழ 10: அது முந்தி, இது இப்ப

யாருக்கு சொல்லியழ 10: அது முந்தி, இது இப்ப

(இளவழகன், 2021-04-08) இன்று வியாழன் (2021-04-08) இலங்கையும், இந்தியாவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இணைந்து செயற்பட இணக்கம் ஒன்றை கொண்டுள்ளனர். இரு நாடுகளும் தாம் அறியும் ‘பயங்கரவாதிகள்’ தொடர்பான உண்மைகளை உடனுக்குடன் மறு தரப்புக்கு தெரியப்படுத்த இணக்கம் கொண்டுள்ளனர். இந்தியாவின் குழுவுக்கு Director of Intelligence Bureau பதவியில் உள்ள Arvind Kumar என்பவரும், இலங்கை குழுவுக்கு Inspector General of Police பதவியில் உள்ள C. D. Wickramaratne என்பவரும் அமர்வுக்கு தலைமை தாங்கி உள்ளனர். இந்த […]

இந்தியா, சவுதி இடையே எண்ணெய் மோதல்

இந்தியா, சவுதி இடையே எண்ணெய் மோதல்

இந்தியாவுக்கும், சவுதிக்கும் இடையே எண்ணெய் கொள்வனவு விவகாரத்தில் மோதல் தோன்றி உள்ளது. அம்மோதல் இரு தரப்பையும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. சவுதி சில தினங்களுக்கு முன் ஆசிய நாடுகளுக்கான தனது எண்ணெய் விலையை அதிகரித்து இருந்தது. அதனால் இந்தியா பரல் ஒன்றுக்கு சுமார் $1.80 அதிகமாக செலுத்தவேண்டிய நிலை தோன்றியது. சவுதியின் இந்த செயலால் இந்தியா விசனம் கொண்டது. உடனே இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை சவுதியில் இருந்து கொள்வனவு செய்யும் எண்ணெயின் அளவை குறைக்குமாறு பணித்தது. அதன்படி […]

Forbes 2021 கணிப்பில் 2,755 பெரும் செல்வந்தர்

Forbes 2021 கணிப்பில் 2,755 பெரும் செல்வந்தர்

உலகில் தற்போது 2,755 பேர் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தை கொண்டுள்ளனர். இவர்களிடம் மொத்தம் $13.1 டிரில்லியன் ($13,100 பில்லியன்) சொத்துக்கள் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக 493 பேர் பில்லியன் சொத்துடையோர் பட்டியலில் இணைந்து உள்ளனர். அமெரிக்காவின் Forbes நிறுவனம் வெளியிட்டு உள்ள கணிப்பின்படி Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos உலக அளவில் முதலாம் இடத்தில் உள்ளார். அமெரிக்கரான இவரிடம் சுமார் $177 billion ($177,000,000,000) சொத்துக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அதில் […]

LG smartphone தயாரிப்பு நிறுத்தம்

LG smartphone தயாரிப்பு நிறுத்தம்

Smartphone தொலைபேசி உலகில் தனக்கென இடம் ஒன்றை கொண்டிருந்த தென்கொரியாவின் LG நிறுவனம் தனது smartphone தயாரிப்பை நிறுத்தவுள்ளது. முற்கால உலக சந்தையில் LG smartphone 3ம் இடத்தை வகித்து இருந்தது. அனால் தற்காலத்தில் அது 11ம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் LG கடந்த ஆண்டு 23 மில்லியன் தொலைபேசிகளை விற்று 13% சந்தையை கொண்டிருந்தாலும், உலக அளவில் அது 2% சந்தையையே கொண்டுள்ளது. அமெரிக்காவில் iPhone 39% சந்தையையும், Samsung 30% (256 மில்லியன் தொலைபேசிகள்) […]

கரோனா தடுப்பு மருந்து வழங்களில் UAE முதலிடம்

கரோனா தடுப்பு மருந்து வழங்களில் UAE முதலிடம்

தமது மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாட்டில் எமிரேட்ஸ் (UAE) முன் உள்ளது. இங்கு தற்போது சுமார் 89% மக்கள் முதலாவது தடுப்பு ஊசியை பெற்றுள்ளனர். இங்கு இதுவரை மொத்தம் 8,559,291 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன. இரண்டாம் இடத்தில் சிசெல்ஸ் (Seychelles) உள்ளது. இங்கு 66% மக்கள் முதலாம் ஊசியையும், 39% மக்கள் இரண்டாம் ஊசியையும் பெற்று உள்ளனர். இங்கு 102,080 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள பூட்டானில் 61% மக்கள் முதலாவது […]

மாவோஸ்ட் 23 இந்திய இராணுவத்தை கொலை

மாவோஸ்ட் 23 இந்திய இராணுவத்தை கொலை

இந்தியாவின் சட்டிஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் மாவோஸ்ட் (Maoist)  குழுவுக்கு எதிராக இடம்பெற்ற துப்பாக்கி சண்டைக்கு 23 இந்திய இராணுவத்தினர் பலியாகி உள்ளனர். அத்துடன் 31 இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர். பெருமளவு இந்திய படையினர் சனிக்கிழமை Bijipur மாவட்டத்து அடர்ந்த காட்டு பகுதி ஒன்றுள் தேடுதல் செய்தபொழுதே மேற்படி மோதல் இடம்பெற்றது. மரணித்த இராணுவத்தின் ஆயுதங்களையும் மாவோயிஸ்ட் எடுத்து சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 1960ம் ஆண்டுகளில் ஆரம்பித்த கம்யூனிஸ்ட் ஆயுத குழு இன்றுவரை […]

ஜோர்டானில் முன்னாள் இளவரசர் உட்பட பலர் கைது

ஜோர்டானில் முன்னாள் இளவரசர் உட்பட பலர் கைது

மத்திய கிழக்கின் ஜோர்டான் நாட்டில் முன்னாள் இளவரசர் ஒருவர் உட்பட சுமார் 30 பேர் ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ள Hamzah bin Hussein என்ற முன்னாள் இளவரசர் நிலை திடமாக தெரியவில்லை. அவருக்கான தொலைபேசி, இணைய தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.  அனாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்கிறது ஜோர்டான் அரசு. தனது தொடர்புகள் துண்டிக்கப்பட்டதை அவர் தனது செய்மதி தொலைபேசி மூலம் […]

வெள்ளை மாளிகை அருகே வன்முறை, இருவர் பலி

வெள்ளை மாளிகை அருகே வன்முறை, இருவர் பலி

அமெரிக்காவின் சனாதிபதி குடியிருக்கும் வெள்ளை மாளிகை அருகே உள்ள பாராளுமன்றத்தை ஒத்த Capitol Hill பகுதியில் இன்று வெள்ளி பிற்பகல் 1:00 மணியளவில் இடம்பெற்ற கார் தாக்குதலுக்கு ஒரு போலீசாரும், தாக்கியவரும் பலியாகி உள்ளனர். அங்கு காவலுக்கு இருந்த தடுப்பை நோக்கி வேகமாக வந்த கார் இரண்டு போலீசாரை மோதி உள்ளது. அந்த மோதலுக்கு ஒரு போலீசார் பலியாகி உள்ளார். காரை ஓட்டியவர் பின் காவல் தடுப்பில் தனது காரை மோதியுள்ளார். மோதலின் பின் காரை விட்டு […]