நாசாவின் (NASA) சிறிய ஹெலி ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்து உள்ளது. இந்த ஹெலி 3 மீட்டர் உயரம் மட்டுமே எழுந்தாலும், 40 செக்கன்கள் மட்டுமே பறந்தாலும் இதுவே மனிதனின் ஹெலி ஒன்று இன்னோர் கிரகத்தில் பறப்பது முதல் தடவை. இந்த பறப்பு நியூ யார்க் நேரப்படி இன்று திங்கள் அதிகாலை 3:34 மணியளவில் இடம்பெற்று உள்ளது. Ingenuity என்ற இந்த ஹெலி Perseverance என்ற நாசாவின் செவ்வாய் சென்ற கலத்துள் (rover) அனுப்பப்பட்டு இருந்தது. […]
எல்லா தடுப்பு மருந்துகளும் பாதகமான வைரஸ் தொற்ற முனையும் பொழுது அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வல்லமையை உடலுக்கு முன்கூட்டியே வழங்குகின்றன. தடுப்பு மருந்துகள் பல வழிமுறைகளில் தடுப்பு வல்லமையை உடலுக்கு வழங்கலாம். கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளிலும் பல வகைகள் உண்டு. அவற்றுள் சில பின்வருவன. 1) DNA அல்லது RNA Molecule வகை தடுப்பு மருந்துஇவ்வகை தடுப்பு மருந்துகள் DNA அல்லது RNA molecule மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பாதகமான (கரோனா […]
கடந்த வியாழக்கிழமை இரவு 19 வயதுடைய Brandon Scott Hole என்பவன் அமெரிக்காவின் Indiana மாநிலத்தில் உள்ள Indianapolis என்ற நகரில் உள்ள FedEx நிலையம் ஒன்றில் 8 பேரரை சுட்டு கொலை செய்து பின் தன்னையும் சுட்டு தற்கொலை செய்திருந்தான். இந்த படுகொலைக்கு பலியானோருள் 4 பேர் சீக்கிய ஊழியர்கள். இதுவரை போலீசார் படுகொலைக்கான காரணத்தை அறிவிக்கவில்லை என்றாலும், இனத்துவேசம் ஒரு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலையாளி கடந்த ஆண்டு இந்த FedEx நிலையத்தில் […]
லண்டன் மாநகரத்துக்கு Brexit எதிர்பார்த்ததிலும் அதிக பாதக விளைவுகளை அளித்துள்ளது என்கிறது New Financial குழுவின் ஆய்வு ஒன்று. வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த ஆய்வின்படி 440 நிறுவனங்கள் லண்டன் நகரில் இருந்து தமது பிரதான தளங்களை ஐரோப்பாவுக்கும், Dublin நகருக்கும் நகர்த்தி உள்ளன. மேற்படி நகர்வுக்கு உள்ளான சொத்துக்களின் மொத்த பெறுமதி $1.4 டிரில்லியன் பவுண்ட்ஸ் என்றும் கூறப்படுகிறது. கூடவே 7,400 தொழில்களும் லண்டன் நகரை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு இந்த அமைப்பு […]
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பாணிக்கும், தற்போது செல்வத்தை இழந்த இளைய சகோதரன் அனில் அம்பாணி குடும்பத்துக்கும் இடையில் மீண்டும் மோதல் உருவாகிறதா என்று கேட்க வைக்கின்றன அனில் அம்பாணியின் முத்த புதல்வனின் கூற்றுகள். Jai Anmol என்ற அனில் அம்பாணியின் மூத்த மகன் கரோனா தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறைகளையும், மறைமுகமாக முகேஷ் போன்ற செல்வந்தர்களையும் பலமாக சாடி வருகிறார். பொதுவாக அமைதியான குணத்தை கொண்ட Jai Anmol வெளியிடும் கடுமையான கருத்துக்கள் பலரையும் வியக்க […]
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு (National Intelligence) பிரிவின் அதிகாரி இன்று அமெரிக்க காங்கிரசுக்கு வழங்கிய உரையில் சீனாவே தற்போது அமெரிக்காவின் முதல் ஆபத்து என்றுள்ளார். இரண்டாவதாக ரஷ்யா உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் CIA, FBI, NSA, Defense Intelligence Agency ஆகியவற்றின் அதிகாரிகளும் மேற்படி கணிப்பை ஆதரித்து இருந்தனர். சீனா வளர்ந்து வரும் தனது இராணுவ, பண, தொழில்நுட்ப, இராசதந்திர வல்லமைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தி உலக அளவில் உள்ள அமெரிக்காவின் ஆளுமையை தன் வசம் இழுக்கிறது […]
2001ம் ஆண்டு நியூ யார்க் நகரில் இடம்பெற்ற பயணிகள் விமான தாக்குதல்களின் பின் அல்கைடாவை அழிக்க ஆப்கானிஸ்தான் சென்ற அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளின் பின், வரும் செப்டம்பர் 11ம் திகதிக்கு முன், அங்கிருந்து வெளியேறவுள்ளன. இந்த செய்தி நாளை புதன் NATO அணி அமர்வில் அறிவிக்கப்படலாம். அமெரிக்க படைகள் அங்கு நிலைகொண்டுள்ள காலத்தில் தலபானை கட்டுப்படுத்த முடியாத ஆப்கானிஸ்தான் அரசு அமெரிக்கா வெளியேறிய பின் பெரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகலாம். தலபான் அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம். […]
Johnson & Johnson நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து தோற்றுவிக்கும் பாதகமான பக்க விளைவுகள் காரணமாக J&J தடுப்பு மருந்து வழங்களை இடைநிறுத்துமாறு அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention (CDC), Food and Drug Administration (FDA) ஆகிய திணைக்களங்கள் கூறியுள்ளன. மேற்படி மருந்து பெற்றவர்களிடம் இரத்தம் திரைத்தல் (blood clot), கடுமையான தலையிடி, அடிவயிற்று வலி, கால் வலி, மூச்சு இடர் போன்ற பக்க விளைவுகளும் காணப்பட்டு உள்ளன. இந்த […]
ஐ. நா. வில் தாய்வான் தற்போது ஒரு நாடல்ல. ஐ. நா. அவையில் தாய்வான் சீனாவின் அங்கம். ஆனாலும் தாய்வான் மாஓ காலத்தில் இருந்து சொந்த ஆட்சியை செய்துவருகிறது. அதற்கு சொந்த படைகள் உண்டு. அதேவேளை சீனா தாய்வானை மீண்டும் சீனாவுடன் இணைக்கும் முயற்சியை தொடர்கின்றது. அமெரிக்காவும் சீனாவை தண்டிக்க தேவைப்படும் பொழுதில் தாய்வானுக்கு இராணுவ உதவிகளை செய்து வருகிறது. ஆனாலும் மிகையான பொருளாதார, மற்றும் இராணுவ பலம் கொண்ட சீனாவின் பதில் நடவடிக்கைகள் தாய்வானை மெல்ல […]
இன்று ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாணம் தெரிவித்த கூற்றின்படி கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு புதிதாக 4,456 பேருக்கு காரோனா தொற்றி உள்ளமை அறியப்பட்டு உளது. அங்கு இதுவே தொற்றின் மிகப்பெரிய தினசரி தொகை. ஒரு ஆண்டுக்கு மேலாக பரவும் கரோனா தொற்றின் 3ம் அலை தற்போது கனடாவை தாக்குகிறது. இன்று மட்டும் 21 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் அங்கு ICU (Intensive Care Unit) படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று […]